ஐயப்பன் சிலையும் கண்ணகி சிலையும் மீண்டும் தலைப்பு செய்திகளில் அடிபடுகின்றன.வழக்கம் போல் இதிலும் இருதரப்பு அரசியல் புகுந்து விளையாடுகிறது.ஐயப்பன் ஒரு தரப்புக்கு மட்டுமே சொந்தமானவராகவும்,கண்ணகி இன்னொரு தரப்புக்கு சொந்தமானவராகவும் கருதப்பட்டு சொல்லம்புகள் ஏவப்படுகின்றன.
கண்ணகியும் ஐயப்பனும் நம்மவர்கள் என்பதை முதலில் அனைவரும் உணரவேண்டும்.ஐயப்பன்/ஐயனாரப்பன் என்பவர் ஐயனார் என்ற பெயரில் அனைத்து கிராமங்களுக்கும் காவல் தெய்வமாக நிற்பவர்.ஆதி தமிழரின் குல தெய்வம் அவர்.சாஸ்தா,சாத்தான் என பல பெயர்களில் அழைக்கப்படுபவர்.சாத்தான் குளம் என்பதும் அவர் பெயரில் அமைந்த ஊர்தான்.கேரளர்கள் ஆதிதமிழர்கள் தான்.கேரளாவில் அவர் விஷேஷமாக வழிபடப்படுவதால் அவர் தமிழரின் தாத்தா இல்லை என்றாகிவிடாது.
அதேபோல் கண்ணகி சிலை விவகாரத்தில் அது ஏதோ ஒரு தரப்புக்கு மட்டுமே சொந்தமான சிலை என்பது போல் வாதங்கள் எழுகின்றன.கண்ணகி நம்மவள்.அவள் தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்கும் தாய் போன்றவள்.நம் மூதாதை.அவள் திமுகவுக்கு மட்டும் சொந்தமானவள் அல்ல. நளாயினி,சீதை போன்ற எந்த புராணப்பெண்களுக்கும் சற்றும் மாற்று குறைந்தவளல்ல கண்ணகி.சொல்லப்போனால் அவர்களை விட ஒரு படி உயர்வாகத்தான் கண்ணகியை கருத வேண்டி வரும்.பாரதநாட்டின்,தமிழ் பண்பாட்டின் சின்னம் அவள்.அவளை ஒரு அரசியல் இயக்கத்துக்கு மட்டும் சொந்தமானவள் என்று கருதும் மனப்போக்கு மிகதவறானது.
அவள் சிலையை அனியாயமாக உடைத்தவுடன் முதலில் பொங்கி எழுந்திருக்க வேண்டியது இறைநம்பிக்கை உடைய ஆத்திகர்தான்.அதை ஏதோ திமுக,அதிமுக விவகாரம் என ஒதுக்கி விட்டது மகா,மகா தவறு.வலது,இடது,ஆத்திகர்,நாத்திகர் என தமிழ்நாட்டின் மக்கள் அனைவருக்கும் தாய் அவள்.
சரி.இப்போது ஐயப்பன் சிலை விவகாரத்துக்கு போகலாம்.
ஐயனாரப்பன் எனும் ஐயப்பன் ஆதிதமிழரின் தெய்வம்,குல மூதாதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இவர் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் இவர் பிறந்ததாக சொல்லப்படும் கதை - விஷ்ணுவுக்கும்,சிவனுக்கும் பிறந்தவர் எனும் கதை வேதத்திலோ புராணத்திலோ கிடையாது.இவர் நண்பர் வாவர் எனும் முஸ்லிம் ஆவார்.இஸ்லாம் இந்தியாவுக்கு வந்தது எப்போது என்பதை ஆராய்ந்தாலே இவர் வாழ்ந்த கால கட்டம் புலப்படும்.அநேகமாக 7 அல்லது 8ம் நூறாண்டில் வாழ்ந்த ஒரு தமிழராக இவர் இருந்திருப்பார்.மூதாதை வழிபாடு என்பது வேறூன்றிய தமிழகத்தில் போற்றத்தகுந்த வாழ்வு வாழ்ந்த இந்தப்பெரியார் அதன்பின் கடவுளாக வழிபடப்படுகிறார்.
ஐயனாராக அவர் வழிபடப்படும் ஆலயங்களுக்கு பெண்கள் தான் அதிக அளவில் சென்று பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.அவர் தமிழக கிராமங்கள் அனைத்துக்கும் கிராம தேவதை.நிலைமை இப்படி இருக்க அவர் பெண்களை பார்க்க மாட்டார்,கன்னி சாமி என்றெல்லாம் சொல்லுவது சுத்தமாக நன்றாக இல்லை.
ஐயப்பன் கோயிலில் எப்படி இப்படி ஒரு சம்பிரதாயம் வந்தது என தெரியவில்லை.12 முதல் 50 வயதான பெண்களை அங்கு அனுமதிக்காதிருப்பது என்ன காரணங்களுக்காக என யோசித்து பார்த்தால் தோன்றுவது கீழ்க்கண்ட காரணம் மட்டுமே
1.மாதவிலக்கு வரும் பருவத்தில் உள்ள பெண்கள் அங்கு வரக்கூடாது
இந்த சம்பிரதாயம் ஏன் தோன்றியது?கடவுளுக்கு பிடிக்காது என்பதாலா?அல்ல.அங்கு விரதம் இருந்து வரும் பக்தர்கள் மனதில் தவறான எண்னங்கள் வரக்கூடாது என்ற காரணம் மட்டுமே இருக்க முடியும்.ஆனால் சற்று யோசித்து பார்த்தால் அந்த பக்தர்கள் 40 நாட்கள் வெளியுலகத்தில் தான் இருக்கின்றனர்.வீட்டில் தம் மனைவி,அலுவலகத்தில் என பெண்களோடு மாலை போட்ட சமயத்திலும் பார்க்காமல் இருப்பதில்லை.37 நாட்கள் பெண்கள் இருக்கும் உலகில் இருந்துவிட்டு 3 நாட்கள் மட்டும் அவர்களை ஒதுக்குவது சரியான வாதமாக தோன்றவில்லை.
மேலும் 12 முதல் 50 வரை இருக்கும் பெண்களை மட்டும் ஒதுக்குவது என்பது மாதவிலக்கு என்ற காரனத்தாலும் இருக்கும் என தோன்றுகிறது.இது இனியும் செல்லுபடியாககூடிய வாதமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.
ஆத்திகர்கள் சற்று மனம் புண்படாமல் யோசித்து பார்த்தால் வழி வழியாக வந்த சம்பிரதாயம் என்பதை தவிர பெண்களை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்காதிருக்க எந்த காரணமும் இல்லை என்பது புலப்படும்.அவர்கள் நம்மவர்கள்.உரிமையோடு என் சாமியை நான் பார்க்க வேண்டும் என கேட்பவர்களை தடுப்பது நிச்சயம் முறையாகாது.அப்படி கேட்பவர்கள் சொற்பமே எனினும் அவர்கள் உரிமைக்கு நாம் தலை வணங்குதல் தான் முறை.
சம்பிரதாயங்களை உடைத்தால் இந்து மதம் பலவீனப்படும் என்பதை ஏற்க முடியாது.சில சம்பிரதாயங்களை உடைத்தால் இந்து மதம் மேலும் வலுவடையவே செய்யும்.பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு வரலாம் என சட்டம் போட்டால் உடனே பெண்கள் படை எடுத்து வரப்போவதில்லை.சட்டம் என்பதையும் தாண்டி தெய்வ குத்தம் என்ற பயம் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும்.அதை போக்குதல் இந்து மத துறவிகளின் ஒரு பணியாக இருக்க வேண்டும்.அவர்கள் வருகிறார்களோ இல்லையோ சட்டப்படி அதை காரணம் காட்டி அவர்களை தடுத்தல் வேண்டாம்.
இதனால் ஐயப்பன் சாமிகளின் விரதத்துக்கு எந்த பங்கமும் நேராது.மேலும் அவர்கள் நம்பிக்கை வலுவடையவே இது உதவும் என தோன்றுகிறது.
ஐயப்பன் சாமிகளை பற்றி தவறான சில வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.ஐயப்பன் சாமிகள் சிலர் தப்பு செய்தாலும் பெரும்பாலானோர் அந்த 40 நாட்களும் ஒழுக்கமாக இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.தப்பு செய்யும் சிலரும் குற்ற உணர்ச்சியோடு தான் அதை செய்வார்கள்.
ஐயப்பன் பிறப்பை கிண்டலடித்தும் பேசுகிறார்கள்.ஹோமோசெக்ஸ் என்பது பாவம் என்பது முட்டாள்தனமான ஒரு கோட்பாடு.இந்த மடிசஞ்சி கலாச்சாரம் இந்து மதத்தில் எப்போதும் இருந்தது கிடையாது.அரவாணிகள், ஹோமோசெக்ஸுவல்கள், பலதாரமணம் செய்யும் பெண்கள்,களவுமணம்,நிர்வாணம்(public nudity) என காமத்தின் எந்த வகையையும் பாவம் என இந்து மதம் கருதியதில்லை.அரவான் கதை,திரவுபதி,ஐயப்பன்,குந்தி என ஒவ்வொருவருக்கும் அங்கிகாரம் தந்து மாற்றின சேர்க்கையாளருக்கு(hetro sexuals) சமமான அங்கீகாரத்தை இவர்களுக்கும் தந்து தான் வந்துள்ளது.விக்டோரியா காலத்திய இங்கிலாந்தின் நெறிமுறைகளை இந்து மதத்தை அளவிட பயன்படுத்துவது சரியல்ல.
Monday, July 03, 2006
5.கண்ணகியும் ஐயப்பனும்
Posted by Unknown at 10:39 AM
Subscribe to:
Post Comments (Atom)
75 Comments:
செல்வன்,
மிக அருமையான பதிவு.
நல்ல அலசல்.
மிக்க நன்றி!!
மிக்க நன்றி சிவபாலன்
செல்வன் அவர்களுக்கு,
மிக அருமையான பதிவு. தங்கள் வாதங்கள் பிரமிக்கத்தக்க அளவில் நிதர்சனமான உண்மையை ஆன்மீக விரோதம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் வாதங்கள், மனதை கவர்ந்தன.
தங்கள் கருத்துக்களோடு நான் பெரும்பாலும் ஒன்றிப்போகிறேன், சிலவற்றை தவிர.
ஐயப்பன் பிறப்பிற்கு புராண ஆதாரங்கள் இல்லை என்பது சரியில்ல. பாகவதம் போன்ற பெருமை வாய்ந்த புராணங்களில் கூட சாஸ்தாவின் பிறப்பு பேசப்படுகிறது.
இரண்டாவது, சம்பிரதாயம் தவிர பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேறு வலுவான காரணம் இல்லை என்பதும். இது ஏற்க முடியாதது. இந்த கட்டுப்பாடு சாத்திர சம்மதமானதுதான் என்பது என் எண்ணம்.
மற்றபடி தங்களின் பதிவை வரவேற்கிறேன்.
சபரிமலையில் திருப்பதி போன்று அன்னதானம் செய்யலாம். ஒரு தோசை 30 ரூபாய் போன்ற பக்தர்களிடம் சுரண்டல் நிற்கம். சபரிமலைக்கு 80 கோடி ரூபாய் வருமானம் என்றும் அதனால், கேரளாவில் ஆயிரக்கணக்கான கோயிலுக்காக அறநிலையத்துறை பணம் எடுத்துக்கொண்டு விடுவதாகவும் பேப்பரில் படித்தேன். சபரிமலை வருமானம் அந்த புனித கோவிலை மேம்படுத்த செலவழித்தால் பக்தர்கள் சந்தோஷப்படுவார்கள்
நன்றி
வாழ்க 'புனித பிம்பம்' செல்வன்! வாழ்க! வாழ்க!!
:-)))))))))))))))
செல்வன். மத்தவங்க வந்து சொல்றதுக்கு முன்னாடி நான் வந்து சொல்லிடலாம்னு தான். :-)
செல்வன் அவர்களே,
இன்னொரு விஷயம் சொல்லிக்கொள்ள ஆசை.
கண்ணகி ஒரு தெய்வப்பெண். இதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது.
அவள் இந்து மத்த்தின் சிறந்த பதிவிரதைகளுல் ஒன்றாக பூஜிக்கப்படுபவள், பூஜிக்கப்பட வேண்டியவள்.
கண்ணகியை எதிர்ப்பவர்கள் கற்பை எதிர்க்கும் சில திடீர் பகுத்தறிவு பகலவன்கள். இவர்கள் கற்பையும் அறிந்தார் இல்லை, கண்ணகியையும் அறிந்தார் இல்லை. சில 'புரட்சி' பெண்ணியவாதிகளும் இவர்களுக்கு ஒத்து ஊதுகிறார்கள்.
கண்ணகி வேத வழி நடந்த ஒரு உத்தமி. அதில் சாதி, இனம் பிறிப்பது அநாகரீகம்.
நன்றி
குமரன்,
என்னென்னவோ முத்திரை நம் மீது குத்தியாச்சு.அதை பற்றி என்றும் கவலைப்பட்டதில்லை.:-))
நம் பணி தொடர்ந்து குட்டி கலாட்டா செய்வதே.அது என்றும் தொடரும்:-)
ஜெயராமன்
கட்டுரையில் உள்ள பிழைகளை சுட்டி காட்டியதற்கு நன்றி.வாவர் கதையை வைத்துத்தான் ஐயப்பன் 7,8ம் நூற்றாண்டை சேர்ந்தவராக இருப்பார் என எழுதினேன்.பாகவதத்தில் ஐயனாரப்பன் குறிப்பிடப்படுகிறாறென்றால் அவர் ஆதிகால தமிழராக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
தெளிவான தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.ஆத்திகர் மனம் புண்படுமோ என்ற பயம் இருந்தது.அப்படி இல்லை என தாங்கள் சொன்னதில் மிக மகிழ்கிறேன்.நன்றி
அன்புடன்
செல்வன்
2 சென்ட்ஸ் வேணுமா? ரூபா வேணுமா? :):
//இரண்டாவது, சம்பிரதாயம் தவிர பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேறு வலுவான காரணம் இல்லை என்பதும். இது ஏற்க முடியாதது. இந்த கட்டுப்பாடு சாத்திர சம்மதமானதுதான் என்பது என் எண்ணம்//
கட்டுப்பாட்டுக்கு எனக்குத் தெரிந்த காரணம், அந்தக் காலத்தில் இந்தப் பெரிய பாதைப் பயணம் ஒரு மாதப் பயணம்.. பெண்களால் அந்தப் புனித பூமியில் ஒரு மாதம் வர முடியாது.. ஆனால், இப்போது தான் எல்லாம் நான்கு நாள் பயணமாகிவிட்டதே, ஏன் நான் இரு நாள் பயணமாகக் கூடச் செல்ல முடியும்
// சபரிமலையில் திருப்பதி போன்று அன்னதானம் செய்யலாம்.//
தேவ சம்போர்டிலிருந்து அன்னதானம் செய்யப்படுகிறது என்றே நினைக்கிறேன். தனியார் அமைப்புகளும் அன்னதானங்கள்/ மருத்துவமுகாம்களை இயக்குகின்றன. விவரம் வேண்டுமெனில் என் தந்தையைக் கேட்டுச் சொல்ல முடியும்.
பொன்ஸ்
2 சென்டும் 2 ரூபாவும் ஒண்ணுதானே?2 டாலர் கொடுங்கள்.:-))
எந்த காரணம் இருப்பினும் கால மாற்றதிற்கேற்ப மாறுவது தான் சரி.கோயிலுக்கு அதிகம் பேர் வருவது எப்படி பார்த்தாலும் நல்லதுதானே?பெண்களும் கோயிலுக்கு வரலாம் என்றால் ஐயப்பன் யாத்திரை இனிய ஒரு குடும்ப ஆன்மிக சுற்றுலாவாக மாறும்.அதை விட பெரிய சந்தோஷம் ஐயப்பனுக்கு இருக்க முடியாது.குடும்பத்தோடு வந்து ஐயனை தரிசிப்பது எத்தனை இனிய அனுபவம்?
காலத்துக்கேற்ப மாறிக்கொள்வதே கலாச்சாரம், மொழி,மதம் போன்றவை அழியாமல் காத்துக்கொள்ளும் வழி.
'மதமாற்றம்...மதமாற்றம்' என கத்திக்கொண்டிருப்பவர்கள் இதை நினைவில் கொள்ளவேண்டும். மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.
செல்வன்,
2 டாலர் தானே, வந்து வாங்கிக்குங்க ;)
//கோயிலுக்கு அதிகம் பேர் வருவது எப்படி பார்த்தாலும் நல்லதுதானே?பெண்களும் கோயிலுக்கு வரலாம் என்றால் ஐயப்பன் யாத்திரை இனிய ஒரு குடும்ப ஆன்மிக சுற்றுலாவாக மாறும்.//
நல்லது தான் என்னும் எண்ணத்தைத் தான் அந்தப் பின்னூட்டத்தில் சொல்ல முயன்றேன்.. சொல்லப் போனா அந்தப் பின்னூட்டம் ஜயராமனுக்கு.. உங்களுக்கு இல்லை :).
போன பின்னூட்டத்தில் சிறு திருத்தம்:
//ஏன் நான் இரு நாள் பயணமாகக் கூடச் செல்ல முடியும்//
ஏன், இப்போது இரு நாள் பயணமாகக் கூடச் செல்ல முடிகிறதே
இதுக்கு மேல இந்த ஐயப்பன் டாபிக்குக்கு நான் வரலை சாமி.. ஆளை விடுங்க.. :)))
இதில் அனைவரும் ஒரு முக்கியமான நிகழ்வை மறந்து கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்,.
சபரிமலை யாத்திரை என்பது பொன்ஸ் குறிப்பிட்டிருப்பது போல, அந்தக் காலத்து 40 நாள் பயணமோ அல்லது இந்தக் காலத்து இருநாள் பயணமோ மட்டும் அல்ல!
என்று விரதம் இருக்கத்தொடங்குவதாக வேண்டிக்கொண்டு[சங்கல்பம்]"மாலை" போட்டுக்கொள்கிறோமோ, அன்றே ஆரம்பிக்கிறது இந்தப் பயணம்.
மாதவிலக்கு என்னும் முக்கியமான காரணம் அது நிகழும் பெண்களால் தவிர்க்க முடியாத ஒன்று என்பதாலேயே, அவர்களால் மாலை அணிந்து விரதம் தொடர்ந்து 40 நாட்கள் இருக்க முடியாத நிலை.
மேலும் வன்மிருகங்கள் இரத்தவாடையைத் தெரிந்து கொள்ளும் சக்தி படைத்தவையாயிருத்தலினால், பெண்களால், அவ்வழியே போவது ஆபத்தாய் முடியும், அவர்களுக்கோ, அல்லது, காட்டு வழியே செல்லும் மற்ற பக்தர்களுக்கோ!
ஐயப்பனுக்கு கன்னித்தீட்டு ஆகாது என்பது சம்பிரதாயம்.
நம்புபவர்கள் இதற்கு மதிப்பளித்துச் செல்கிறார்கள், அண்களும் சரி; பெண்களும் சரி.!!.
மற்றொரு முக்கியமான தகவல்!
இந்த மேற்கூறிய கட்டுப்பாடுகள் அனைத்தும், பெருவழியில் செல்ல நினைக்கும், விரதம் இருக்க நினைக்கும், பதினெட்டாம்படி ஏற நினைக்கும்/துடிக்கும் பெண்களுக்கு மட்டுமே!!
மாதாமாதம் நடை திறக்கும் நாட்களில், பின்படி வழியாக விரதமின்றி, ஐயப்பனை தரிசித்துச் செல்லும் அனைத்து வயதினையும் சேர்ந்த பெண் பக்தைகள் ஏராளம்!
இவர்கள் அனைவரும் ஐயப்ப பக்தைகள் என்பதால், சம்பிரதாயத்துக்கு மதிப்பளித்து, முக்கிய நாட்களைத் தவிர்த்து விடுவர்.
ஒருசில 'தானே முடிவிறுத்திக் கொண்ட' [pre-conceived]கருத்துகளைத் தெளிவு படுத்த வேண்டியே இப்பதில்.
இதனாற்றான், தெ.கா. பதிவில், கொஞ்சம் அவசரப்படாமல், அனைத்தையும் தெரிந்துகொண்டு, சில நாட்கள் கழித்து இதனை எழுதுங்களேன் என அன்பு வேண்டுகோள் விடுத்தேன்.
பொன்ஸ் சொன்னது போல, அன்னதானம் , மருத்துவ முகாம் போன்றவைகள் இன்றும் ஐயப்ப சேவா சங்கத்தாரால் நடத்தப் பட்டு வருகிறது.
ஆனால், செல்வன் குறிப்பிட்டிருப்பது போல, இன்னும் நிறையச் செய்ய முடியும், வேண்டும்!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
பொன்ஸ்..இது நியாயமா?2$ வாங்க 500$ செலவு பண்ணிட்டு வரணுமா?இதை கேட்பார் இல்லையா?
அது ஜெயராமனுக்கு சொன்ன பதில் என தெரியும்.அப்போது பதில் சொல்ல அவர் இல்லை என்பதால் பதில் சொன்னேன்.:-))
அலெக்ஸ்
முற்றிலும் உண்மை.காலத்துக்கேற்ப மாறாதது தாக்குபிடிக்க முடியாது.மனிதனுக்கும் இந்த விதி பொருந்தும்.அவன் உருவாக்கிய கோட்பாட்டுக்கும் பொருந்தும்
here comes 14
எஸ்.கே
பெண்கள் வருடம் முழுவதும் ஐயப்பன் கோயிலில் அனுமதிக்கபடுவதில்லை என தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.அப்படி இல்லை என்பதை அறிந்து மிகவும் மகிழ்கிறேன்.
இந்த கட்டுரையை இணைய இதழ் ஒன்றுக்கு அனுப்பலாம் என இருந்தேன்.இப்போது உங்கள் பின்னூட்டத்தையும் சேர்த்து கட்டுரையில் சிறிது மாற்றம் செய்து அனுப்புகிறேன்.
கட்டுரையை விட பின்னூட்டங்கள் அருமையாக வருவது என் சில பதிவுகளுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம்.அது இந்த பதிவுக்கும் நடந்துள்ளது.
நீங்களும் ஜெயராமனும் சுட்டிகாட்டிய தகவல்களை சேர்த்து இக்கட்டுரையில் சில மாற்றங்களை செய்து இணைய இதழுக்கு அனுப்புகிறேன்.சரியான தகவல்கள் பரவட்டும்.
நன்றி
செல்வன். நீங்கள் இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருக்கலாம். இன்னும் கருத்துகள் வரலாம். பின்னர் இணைய இதழுக்கு அனுப்பலாம்.
மிக்க நன்றி செல்வன்.
எனது மறுமொழியில் இந்த ஒரு சொல்லையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!
//மற்றொரு முக்கியமான தகவல்!
இந்த மேற்கூறிய கட்டுப்பாடுகள் அனைத்தும், பெருவழியில் செல்ல நினைக்கும், விரதம் இருக்க நினைக்கும், ""இருமுடி சுமந்து"",
பதினெட்டாம்படி ஏற நினைக்கும்/துடிக்கும் ""மாதவிலக்கு இன்னும் நிற்காத""
பெண்களுக்கு மட்டுமே!!
ஆம் குமரன்
இப்போதே அனுப்பப்போவதில்லை.இரண்டு நாட்கள் கழித்து தான் அனுப்புவேன். கட்டுரையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என தோன்றுகிறது.எஸ்.கேவுக்கும் ஜெயராமனுக்கும் நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்.
எஸ்.கே
இதையும் கட்டுரையில் சேர்த்து விடுகிறேன்.
உங்களால் கட்டுரைக்கு புது வடிவம் கிடைத்துள்ளது.பல பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.ஆண்கள் மட்டுமே அக்கோயிலுக்கு செல்ல முடியும் என்ற என் எண்ணம் தவறானது என்பது தெரியவருகிறது.நன்றி
//ஆண்கள் மட்டுமே அக்கோயிலுக்கு செல்ல முடியும் என்ற என் எண்ணம் தவறானது என்பது தெரியவருகிறது.நன்றி
//
Same here.
pons
thanks goes to SK
டாலர் செல்வம்,
//கண்ணகியும் ஐயப்பனும் """"நம்மவர்கள்"""" என்பதை முதலில் அனைவரும் உணரவேண்டும்.ஐயப்பன்/ஐயனாரப்பன் என்பவர் ஐயனார் என்ற பெயரில் அனைத்து கிராமங்களுக்கும் காவல் தெய்வமாக நிற்பவர்.//
அந்த வரிகளை படிக்கும் பொழுது எனக்கு திகீர் என்றது. ஒரு தேசியவாதி இப்படி "ரீஜனலாக" பிரித்து பேசிய பொழுது. ஏதாவது ஒன்றை கடை பிடித்து அதனை மக்களுக்கும் எடுத்துரைத்தால் தாங்கள் சொல்லும் கருத்துக்கள் ஒருமனதாக இருப்பதாக ஏற்றுக் கொள்வார்கள்...
எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை செல்வன்... உண்மையிலேயே நான் "பரம்பொருள்" "ஜீவாத்மா" என்று பெரும் வட்டத்தில் உழண்டு கொண்டுள்ளேன்.
நீங்கள் கூறும் அரசியலில் என்ன கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை.
/மேலும் வன்மிருகங்கள் இரத்தவாடையைத் தெரிந்து கொள்ளும் சக்தி படைத்தவையாயிருத்தலினால், பெண்களால், அவ்வழியே போவது ஆபத்தாய் முடியும், அவர்களுக்கோ, அல்லது, காட்டு வழியே செல்லும் மற்ற பக்தர்களுக்கோ! //
எஸ்.கே ஐயா, எந்த வன் மிருகங்களை இங்கு குறிப்பிடுகிறார், வாசனை வைத்து அடிப்பதற்கு, யானையா? புலியா? இரத்த வாசனை... (அவ்ளோவா?). அட்டைதான் (Leech) அப்படி வரும் அதுவும் உடம்பு சூட்டை வச்சு வரும் அதுக்கும் ஒண்ணு வித்தியாசமெல்லாம் ஒண்ணுமில்லையெ, ... சரி வுடுங்க.
இப்பொழுதுக்கு இத்துடன் முடித்துக் கொள்கிறேன். உங்கள் வழி உங்களுக்கு என் வழி எனக்கு.
வணக்கம் தெக்கிட்டான்,
//கண்ணகியும் ஐயப்பனும் """"நம்மவர்கள்"""" என்பதை முதலில் """""அனைவரும்""""" உணரவேண்டும்.//
இந்த வரிகளில் ரீஜலனிசம் எங்கு இருக்கிறது தெக்கிட்டான்?"நாம்" "அனைவர்" என அனைவரையும் சேர்த்து தானே சொன்னேன்?
ரீஜலனிசம் என்பது சரியான வார்த்தை பிரயோகமா என தெரியவில்லை.Parochial patriotism என வேண்டுமானால் சொல்லலாம்.நான் அதற்கு முழு எதிரி.
இந்தியன் என்ற அடையாளத்துக்கு தமிழன் என்ற அடையாளம் விரோதமானதல்ல.தமிழன் எனும் அடையாளம் இந்தியன் எனும் அடையாளத்தை compliment செய்வதாகவே கருதுகிறேன்.கொங்குநாட்டான் எனும் என் பிராந்திய அடையாளம் தமிழன் எனும் அடையாளத்தை வலுப்படுத்துவதுபோல் தமிழன் எனும் என் அடையாளம் இந்தியன் எனும் அடையாளத்தை வலுப்படுத்தவே செய்யும் என நம்புகிறேன்.
மொழிப்பற்றும் தேசபக்தியும் நிரம்பிய தமிழனும்,மலையாளியும்,பீகாரியும்,காஷ்மீரியும் இணைந்து உருவாக்கிய சொர்க்கமே இந்தியாவாகும்.
//எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை செல்வன்... உண்மையிலேயே நான் "பரம்பொருள்" "ஜீவாத்மா" என்று பெரும் வட்டத்தில் உழண்டு கொண்டுள்ளேன். //
அந்த நம்பிக்கை எனக்கும் உண்டு தெக்கிட்டான்.ஆனால் நான் என் நம்பிக்கை மட்டுமே சிறந்தது.அதற்கு மாற்றாக நம்பிக்கை கொண்ட பல தெய்வ வழிபாட்டாளர்கள் தவறான நம்பிக்கை உடையவர்கள் என நினைக்கவில்லை.நீங்கள் அப்படி சொன்னீர்கள் என நான் சொல்லவில்லை.என் நம்பிக்கை இது என்று மட்டுமே சொன்னேன்.
உங்கள் கட்டுரைக்கு எதிர்விணை அல்ல இக்கட்டுரை.
என் கருத்துக்களை மட்டுமே சொன்னேன்.
நன்றி
மாதவிலக்கு எனும் காரணத்தை நானும் ஏற்கவில்லை தெக்கிட்டான்.அந்த விதிமுறை முழு தவறு என்பதை தெளிவாக என் கட்டுரையில் சொல்லி இருக்கிறேன்.
mensuration is not a disqualification for anything.It should never be cited as a reason for making them secondary to men.
அன்புச் செல்வனுக்கு வாழ்த்துகள்! நீண்ட கட்டுரை!
ஐ என்னுஞ் சொல் தலைவனைக் குறிக்கும்.
ஐ + அ = ஐய.
ஐ + அன் = ஐயன்
ஐ + அப்பன் = ஐய்யப்பன்
ஐ + அன் + ஆர் + ஐயனார்
போர்க்களத்தில் மாவீரன் அணியிலுள்ள வீரன் தன் தலைவனைப் பற்றிப் பகை அணி வீரனிடன் உரைக்கும் செய்தியாகத் திருக்குறள் கூறும்.
" என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ
முன் நின்று கல் நின்றவர்"
இதில் வரிம் ஐ தலைவனையும், மன்னனையும் குறிக்கும்.
"ஐயர் யாத்தனர் கரணம் என்ப" என்கிறது தொல்காப்பியம்.
இந்த ஐ ஊர்த் தலைவர், அல்லது சான்றோரைக் குறிக்குஞ் சொல்லாகப் பயன் பட்டுள்ளது.
ஐயப்பனும் அவ்வாறே! ஒரு இளவரசன் தான் விரும்பிய பெண்ணை மணஞ்செய்ய பெற்றோர்கள் தடையிட்டதால், அரச நிலையைத் துறந்து, உண்ணாநோன்பிற்காக, மலைக்குச் சென்று விட்டான். அவன் மீது அன்பு கொண்ட குடிமக்களும் உண்ணாநோன்பிருந்து, தினந்தோறும் உணவையும் உணவுப் பொருளையும் மலைக்குக் கொண்டு சென்று உணவளித்து உணவுண்ணுமாறு வேண்டுகின்றனர்! அவ்வாறு, வேண்டியழைத்தும் நாட்டிற்கு வராத ஐய்யப்பனை அழைக்க, ஐய்யப்பனின் அரச குடும்பமே அரச உடையுடன் வந்து ஆடை அணிவித்து அழைத்துச் செல்லுகிறது! என்றொரு கதை ஆங்குண்டு. அதன் பின்னணியைக் கொண்டு உருவான உருமுடி, விரதம் என்பதெல்லாம் உருக் கொண்டன!
ஆக, ஒரு மலையேற்றம்! நல்ல உடற்பயிற்சி! அது, பெண்களால் இயலாது! என்பதால், அய்யப்பன் கோயிலுக்குச் செல்ல தடுக்கப்பட்டனர்.
எல்லாவற்றுக்கும் ஒரு மூலம் உண்டு! அதைக் கண்டறிந்தால், நம்மை ஆட்டிப் படைக்கும் அறியாமை அகலும்.
அன்புடன்
இரவா
Very very good artcile.
I am with you Selven
செல்வன்,
நல்ல பதிவு.
பெண்களை கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்ற கருத்து நியாயமானது.
//அவள் சிலையை அனியாயமாக உடைத்தவுடன் முதலில் பொங்கி எழுந்திருக்க வேண்டியது இறைநம்பிக்கை உடைய ஆத்திகர்தான்.//
ஹிஹி..புனித பிம்பங்களை தாக்காதீர்கள் செல்வன்..
பண்பாட்டு அடையாளம் என்ற வகையில கண்ணகி அரசியலும் கேவலமான பூசாரிகளின் அரசியல் என்ற வகையில் அய்யப்பன் விவகாரமும் மீடியாவில் பல வகையில் பேசப்பட்டது.இந்த நுண்ணிய அல்லது முக்கியமான வித்தியாசத்தை நீங்கள் கவனித்தீர்களா?கட்டுரை முழுமையடைவில்லை.சில பொருட் குற்றங்கள் உள்ளன.
சில கருத்துக்களில் காற்றில் கத்தி வீசுகிறீர்கள்.சிலரை அது சந்தோசப்படுத்தலாம்.ஆனால் கட்டுரைக்கு அது கெடுதல் செல்வன்.
here comes 32
அன்பின் முத்து
கருத்துக்கு நன்றி.மாதவிலக்கு எனும் ஊசிப்போன காரணத்தையே சொல்லிக் கொண்டிருக்காமல் சமூகம் முன்னேற வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் எழுதினேன்.பொருட்குற்றங்கள் சில இருப்பதாக எஸ்.கே சொன்னார்.அவற்றை திருத்திக்கொள்வதாய் சொல்லியிருக்கிறேன்.நீங்கள் ஏதும் பொருட்குற்றம் தென்பட்டாலும் சொல்லுங்கள்.கட்டாயம் திருத்திக்கொள்ள தயார்.
//சில கருத்துக்களில் காற்றில் கத்தி வீசுகிறீர்கள்.சிலரை அது சந்தோசப்படுத்தலாம்.ஆனால் கட்டுரைக்கு அது கெடுதல் செல்வன்.//
எந்த கருத்துக்களை சொல்கிறீர்கள் என தெரியவில்லை.சொன்னால் பிழை திருத்தம் செய்ய ஏதுவாக இருக்கும்
நன்றி முத்து
அன்புடன்
செல்வன்
வணக்கம் செல்வன்.
புதிய தகவல்கள். நன்றி!.
ஐயப்பனும் ஐயனாரும் ஒருவரே தானா?? !! ஆடு, கோழி எல்லாம் பலி கொடுத்து நிவேதனம் செய்யப்படும் ஐயனாரா அப்பம், பொங்கல் சாப்பிடும் ஐயப்பன்?. ஒரு வேளை, ஐயனார், அசைவர்களுக்கும் ஐயப்பன் சைவர்களுக்கும் இருக்குமோ :).
எல்லோரும் விதியாசமாக யோசிக்கிறீர்கள். அதனால் நானும் முயற்சித்தேன் :).
ஐயப்பன், பார்வதியின் மூன்றாவது புதல்வன், காட்டிலே தோன்றியவன், புளி பால் பருகியவன் என்றெல்லாம் நினைதுக்கொண்டிருந்தேன். எல்லாம் தவறு :(.
மற்றும், இந்த தளத்தில்,
http://www.ayyappan-ldc.com/ayyappan.info_thehistory.html
ஐயப்பன் சராசரி மனிதன் போல தோன்றி மறைந்தார் என்றும் மக்கள் ஐயப்பனை, கடவுள் சாஸ்தாவின் மனிதப் பிறவி என்றும் ஐயப்பன் சாஸ்தாவின் கோவிலை புதுபிக்க பாண்டிய ராஜாவிற்கு உதவியதால், ஐயப்பன் மறைவிற்கு பிறகு அந்த கோவிலிலேயே ஐயப்பனுக்கும் சிலை வைத்து வணங்கியதாகவும் தகவல்கள் உள்ளன.
ஐயப்பன் வெள்ளால குலத்தை சார்ந்தவன் என்றும் அவர் மாமனின் பெயர் பெரிசேரி பிள்ளை என்றும் விவரம் இருகின்றது. இதுவே அவர் தமிழன் தான் என்பதற்கு மேலும் ஒரு சாட்சி.
எஸ்.கே
40 நாட்களுல் பொதுவாக பெண்களுக்கு மாத விலக்கு ஆகிவிடும். அதனால் விரதம் கெட்டுவிடும் என்று சொல்லுவதோடு, அந்த நாட்களில் உடல் ரீதியாக பெண்கள் சோர்வடைவார்கள், அதனால், நிறைய நேரம் உட்கார்ந்து பஜனை செய்யவோ, தொலை தூரம் நடக்கவோ இயலாது என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
நன்றி!
//ஒரு வேளை, ஐயனார், அசைவர்களுக்கும் ஐயப்பன் சைவர்களுக்கும் இருக்குமோ :)//
ஹா..ஹா...
But this is true.:-)))
//ஐயப்பன், பார்வதியின் மூன்றாவது புதல்வன், காட்டிலே தோன்றியவன், புளி பால் பருகியவன் என்றெல்லாம் நினைதுக்கொண்டிருந்தேன். எல்லாம் தவறு :(.//
புராணங்களில் சொல்லப்பட்டிருப்பது என்ன என சரியாக தெரியவில்லை நாரியா,ஐயப்பனை பற்றி பாகவதத்தில் என்ன சொல்லியிருக்கிறது என யாராவது சொல்லியிருந்தால் உதவியாக இருந்திருக்கும்.
//ஐயப்பன் வெள்ளால குலத்தை சார்ந்தவன் என்றும் அவர் மாமனின் பெயர் பெரிசேரி பிள்ளை என்றும் விவரம் இருகின்றது. இதுவே அவர் தமிழன் தான் என்பதற்கு மேலும் ஒரு சாட்சி.//
பயனுள்ள தகவல்.மிக்க நன்றி
anbudan
selvan
செல்வன்,
நானும் நம்மூர் ஐய்யனார், சாஸ்தா மற்றும் ஐய்யப்பன் எல்லோருக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்புண்டு என்று எங்கோ படித்திருக்கிறேன். நீங்களும் அய்யப்பன் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகயிருக்கலாம் என்ற ஒரு கருதுகோளை வைத்திருக்கிறீர்கள். இவற்றையெல்லாம் சிறுதெய்வ வழிபாட்டு ஆராய்ச்சியாளர்களும், நாட்டுப்புறவியளாளர்களும் ஆராய்ந்து சொன்னால் நன்று. நண்பர் எஸ். கே சொல்லும் கீழ்க்கண்ட விளக்கமும சுத்தமாகத் தவறு என்பது என் கருத்து.
//"மேலும் வன்மிருகங்கள் இரத்தவாடையைத் தெரிந்து கொள்ளும் சக்தி படைத்தவையாயிருத்தலினால், பெண்களால், அவ்வழியே போவது ஆபத்தாய் முடியும், அவர்களுக்கோ, அல்லது, காட்டு வழியே செல்லும் மற்ற பக்தர்களுக்கோ!"//
மூடத்தனங்களுக்கு இத்தகைய அறிவியல் முலாம் பூசப்பட்ட விளக்கங்களையளித்து, அவற்றைக் காப்பாற்ற நினைப்பதால், பெண்களை கோவிலுக்குள் அனுமதித்தல் தீட்டு போன்ற கட்டுப்பெட்டித்தனங்களை மேலும் வளர்க்கவே உதவும். (கவிஞர் கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்து மதம்' புத்தகத்தில் இதுபோன்ற அறிவியற் போலி விளக்கங்கள், pseudo scientific explanations மிக உண்டு) இன்று நாம் சொல்லிக்கொள்ளும், தமிழர் மற்றும் இந்தியக் கலாச்சாரம், பண்பாடு போன்றவையெல்லாம் காலந்தோறும் மாற்றத்திற்கு உட்பட்டே வந்திருக்கின்றன. அது போன்றே, சபரிமலை சன்னிதானத்திற்குள் பெண்களும் நுழையலாம் என்று திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவெடுப்பதற்கு தற்போதைய சர்ச்சை வழிகோலினால் நன்று.
"மாற்றம் ஒன்றே நிலையானது " - காரல் மார்க்ஸ்
"மாற்றத்தால் ஆகியதே உலகம்"
"பழையன கழிதலும், புதியன புகுதலும்-வழுவன கால வகையினானே" - இவை தமிழர் கூற்று.
சபரிமலை சர்ச்சை குறித்த எனது பதிவு - http://puliamaram.blogspot.com/
செல்வனின் கட்டுரையும், கருத்தும் எப்பவும் போல ஆழமாகவும் யோசிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
அவரை நான் வழிமொழிகிறேன்.
வாழ்த்துக்கள்.
நல்ல கட்டுரை. நல்ல கருத்துகள். நல்ல அலசல்.
தங்கவேல்
சாஸ்தா என்பதன் தமிழாக்கம் தான் சாத்தன்.சாஸ்தா என்பது ஸ்வஸ்தி என்பதன் திரிபாக இருக்குமோ என ஒரு சந்தேகம்.உறுதியாக தெரியவில்லை.
மாதவிலக்கு பற்றிய அந்த கருத்தை நான் ஏற்கவில்லை.காட்டில் வசிக்கும் ஆதிவாசி பெண்களை சிங்கம் என்ன செய்தது,புலி என்ன செய்தது?இதை ஏற்க முடியவில்லை.
On the lighter side
அப்படியே மீறி மீறி காட்டுப்புலி வந்தாலும் "மம்பட்டியான்" என்றால் ஓடிப்போய்விடாதா என்ன?:-)))
//மாற்றம் ஒன்றே நிலையானது " - காரல் மார்க்ஸ்
"மாற்றத்தால் ஆகியதே உலகம்"
"பழையன கழிதலும், புதியன புகுதலும்-வழுவன கால வகையினானே" - இவை தமிழர் கூற்று.//
இக்கருத்துக்களை அப்படியே ஏற்கிறேன்
நன்றி தங்கவேல்
வாருங்கள் ராகவன்
கருத்துக்கு நன்றி.இந்த விஷயத்தில் உங்கள் கருத்துக்களை சில பதிவுகளில் பின்னூட்டமாக படித்து மகிழ்ந்தேன்.
அன்புடன்
செல்வன்
Little off topic, But essential.
தங்கவேல் ...
//
"மாற்றம் ஒன்றே நிலையானது " - காரல் மார்க்ஸ்
//
அதைச் சொன்னது கீதை.
கார்ல் மார்க்ஸ் - Plagiarist ;D
நான் அறிந்தவரை ஐயனாருக்கு அசைவப் படையல் வைப்பதில்லை. ஏறக்குறைய எல்லா ஐயனார் கோவிலிலும் சைவப் படையல் தான். அந்தக் கோவிலில் இருக்கும் மற்றத் தெய்வங்களுக்கு (குறிப்பாக கோவிலின் வெளியே பெரிய உருவங்களில் இருக்கும் முனி போன்ற தெய்வங்களுக்கு) மட்டுமே அசைவப் படையல் (அதுவும் சில கோவில்களில் கோவிலுக்கு வெளியே) வைக்கப்படுகின்றன. அண்மையில் ஒரு பெயர் சொல்ல விரும்பாத அன்பரும் இந்தக் கருத்தை என் பதிவில் சொல்லியிருந்தார்.
http://koodal1.blogspot.com/2006/06/blog-post_23.html
ஐயனார் தான் ஐயப்பன் என்றும் தர்மசாஸ்தா என்றும் சொல்லப்படும் தெய்வம் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. தமிழகத்தில் ஐயனார் என்று வணங்கப்படும் தெய்வத்திற்கும் ஐயப்பன் என்று வணங்கப்படும் தெய்வத்திற்கும் ஒரு வேறுபாட்டைக் கண்டிருக்கிறேன் - ஐயனார் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் ஒரு காலை (பெரும்பாலும் இடக்காலை) மடக்கி மறு காலைத் தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார்; ஐயப்பன் யோக ஆசனத்தில் அமர்ந்திருப்பார். ஆனால் கேரளத்தில் பல கோவில்களில் (குறிப்பாக குருவாயூர் கோவிலில்) இருக்கும் தர்மசாஸ்தா அப்படியே நம் ஐயனார் போலவே இருக்கிறார். தமிழக ஐயனாருக்கு பூரணை, புஷ்கலை என்று இரு மனைவியர். கேரளத்திலும் தர்ம சாஸ்தாவிற்கு அப்படியே; இரு மனைவியர்; அவர்கள் பெயரும் பூரணை, புஷ்கலையே. ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் வருடாவருடம் ஐயப்பனுக்கும் புஷ்கலாதேவிக்கும் திருமண வைபவம் நடைபெறுகிறது. ஆரியங்காவு வலைத்தளத்தில் மேலும் விவரங்கள் அறியலாம். இப்படியே எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்.
ஐயப்பனைப் பெண்கள் தரிசிக்கக் கூடாது என்ற தவறான எண்ணம் வலுவாக இருக்கிறது. சபரிமலை தவிர மற்ற எல்லா ஐயப்பன் கோவில்களிலும் பெண்களும் சென்று வணங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். சபரிமலையிலும் எஸ்.கே. சொன்னது போல் விரதம் இருக்காமல் இருமுடி தாங்காமல் பதினெட்டாம் படி ஏறாமல் வேறு வழியாகக் கோவிலுக்குச் சென்று வணங்குகிறார்கள். இதில் பெண்கள் மட்டுமின்றி விரதம் இருக்காத இருமுடி தாங்காத ஆண்களும் உண்டு. நானும் இருமுறை அப்படி சபரிமலை சென்று (விரதம் இருக்காமல் இருமுடி தாங்காமல் பதினெட்டாம் படி ஏறாமல்) ஐயப்பனைத் தரிசித்திருக்கிறேன்.
இந்த விவரமெல்லாம் இந்த நேரத்தில் வெட்டியாக அம்னீஷியா, அசின், ஹோமோசெக்ஸ், மூடு (mood), பெட் (bed) என்றெல்லாம் அவதூறு பேசுபவர்களுக்குத் தேவையில்லை. எப்படியாவது ஆயிரக்கணக்கான மக்கள் போற்றும் தெய்வங்களை அவதூறு பேசி தாங்கள் அறிவுஜீவி என்று காட்டிக் கொள்ளத் துடிக்கும் பிறவிகள். என்ன சொல்வது அவர்களைப் பற்றி?
//எஸ்.கே
40 நாட்களுல் பொதுவாக பெண்களுக்கு மாத விலக்கு ஆகிவிடும். அதனால் விரதம் கெட்டுவிடும் என்று சொல்லுவதோடு, அந்த நாட்களில் உடல் ரீதியாக பெண்கள் சோர்வடைவார்கள், அதனால், நிறைய நேரம் உட்கார்ந்து பஜனை செய்யவோ, தொலை தூரம் நடக்கவோ இயலாது என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
நன்றி! //
நீங்கள் சொல்வதும் ஒரு உண்மைக் காரணம் எனினும், விரதம் கெட்டுவிடும் என ஏன் சொல்லுகிறார்கள்என்பதனை மருத்துவரீதியாகப் பார்ப்போமா, நரியா!
மாதவிலக்கு முடிந்த 4-5 நாளிலிருந்து இடம் சுத்தமானவுடன், அடுத்த கருமுட்டை உருவாக ஆரம்பிக்கிறது.
அது 8 - 9 நாட்களில், சினைக்கொடியிலிருந்து, சினைக்குழல் வழியே நகர்ந்து, கருப்பையை அடைகிறது,
வீரியமுள்ள ஆண்விந்துவுடன் 10 முதல் 16 நாட்களுக்குள் சேர்ந்தால், கரு உண்டாகிறது.
அப்படி நிகழாவிடின், அந்தக் கருமுட்டை மடிந்து, உரிந்து, ரத்தப்போக்குடன் 17 -ம் நாளைக்குப் பிறகு அழிய ஆரம்பித்து,
25முதல் 28 நாட்களில் மாதவிலக்காய் வெளியேறுகிறது.
இந்து மதம் இந்த உடற்கூறு மாற்றத்தினை நன்றகவே புரிந்து கொண்டு, கெட்டுப்போன ரத்தப்போக்கை வெளியேற்றும் பெண்களை ஒரு 3 நாட்களுக்கு ஓய்வு கொடுத்து 'தீட்டு' என ஒதுக்கி வைத்தது.
இறை, மற்றும் சுப நிகழ்ச்சிகளினின்றும் விலக்கி வைத்தது.
காலம் காலமாக, இறை வழிபாட்டில் மாதவிலக்கு ஆகுபவர் கலந்து கொள்ளாமல், பெண்களுக்கு மதிப்பளித்து ஓய்வு கொடுத்த ஒரு தத்துவத்தை, அனைத்துப் பெண்டிரும் ஏற்று மதித்து உடன்பட்டு வந்திருக்கின்றனர்.
புதுமை என்னும் பெயராலோ,அல்லது பெண்விடுதலைப் போராளி என்னும் அடையாளத்தைத் தாங்கியோ, திடீரென சிலர் முளைப்பது சுயநலமே அன்றி, இதில் பெண் நலம் இல்லையென்பதை ச்ம்பந்தப் பட்டவர்கள் உணர வேண்டும்.
நான் விளக்கம் கொடுத்த பின்னரும், சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை, பட வேண்டும் என்ற போக்கில் சிலர் இதே பதிவிலும் எழுதி வருவது பற்றியும், நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
40 - 48 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி தாங்கி வருபவர்கள் மட்டுமே, பதினெட்டாம் படி வழியே சென்று ஐயப்பனைப் பார்க்க வேண்டும் என அந்தக் கோவிலின் விதி.
மாதவிலக்குத் தீட்டு நேரத்தில் தொடர்ந்து விரதத்தைக் கடைபிடிக்க முடியாது என்பதால், இந்தப் பருவப் பெண்டிர் 18 -ம் படி வழி சென்று ஐயப்பனைப் பார்க்க முடியாது என்பதுதான் உண்மை.
மற்றபடி, யார் வேண்டுமெனினும், பின் வழியே சென்று, தரிசனம் செய்யலாம் என்பதுதான் உண்மை நிலை.
25 வருடங்களாக சபரிமலை விரதம் கடைப்பிடிப்பவன் என்னும் முறையில் அறுதியிட்டுக் கூறுகிறேன் இதனை!
நாட்டில் செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்குதப்பு!
ஆக்க பூர்வமாக ஏதேனும் செய்ய நினைப்போம்.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
SK மற்றும் செல்வன்,
பெண் விடுதலை என்பது சபரி மலை ஐயப்பன் கோவிலில் பதினெட்டாம் படி வழியாக பெண்கள் ஏறி தரிசிக்கும் நாளன்று தான், என்று முடிவு எடுத்தவர்களிடம் பேசி என்ன பயன்.
பெண்கள் பின் வழியாகச் செல்லலாம் என்பது நடைமுறை உண்மை...அந்த உண்மையை உரக்கச் சொல்லுங்கள், உறைகட்டும் மர மண்டைகளுக்கு.
இவர்கள் நோக்கம் பெண்விடுதலை என்பதெல்லாம் பம்மாத்து. அதை ஊறுகாயாகப் பயன் படுத்தி ஐயப்பன் கோவில் பார்பானர்களை திட்டவேண்டும், இந்து மதத்தை திட்டவேண்டும். அப்படியே 50-100 பின்னூட்டம் வங்கிவிடவேண்டும்.
சரி, ஒரு வேளை, ஐயப்பன் தேவஸ்வம் போர்ட் தனது விதிகளைத் தளர்த்தி பெண்களை அனுமதித்தார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அப்போது ஐயப்பனைப் புகழ்வார்களா?
நிச்சயம் இல்லை, அப்போது ஐயப்பன் ஆரியக்கடவுளாக மாறி, அரிசியையும், தேங்காயையும், நெய்யையும் வட்டியின்றி கேரளாவிற்கு கடத்தும் "வீரப்பன்" ஆகிவிடுவான்.
பேசும் வாய்களைப் பார்த்தாலே தெரியவில்லையா...
காசு கொடுத்து சிலை வாங்கி அதன் மேல் "ஒண்ணுக்கு" அடித்த ஆசாமி (public toilet பயன் படுத்தத் தெரியாதா?) பேச்சைக் கேட்பவர்கள் எல்லாம் இப்படித்தான் பேசுவார்கள். இவர்கள் தேவை நமக்கு இல்லை.
எஸ்.கே
பெண்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவதில்லை என்ற என் கருத்து தவறானது என்பதை அறிந்துகொண்டேன்.நான் அங்கே ஒருதரம் கூட போனதில்லை என்பதாலும் இருமுடி,விரதம் பற்றி எதுவும் தெரியாது என்பதாலும் கட்டுரையில் சில பொருட்குற்றங்கள் நேர்ந்துவிட்டன.பொன்ஸ் கூட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என நினைத்தே கருத்து சொல்லியிருக்கிறார்.பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர் எனும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
குமரன்,
இந்த தகவ்ல்கள் ஐயனார் தான் ஐயப்பன் என்பதை உறுதிபடுத்துகின்றன.நீங்கள் தந்த சுட்டியை படித்துபார்க்கிறேன்.ஐயப்பனுக்கு திருமணமானது என்பதும் எனக்கு புதிய செய்தி.ஐயனாருக்கு அசைவம் படைக்கப்படுவதில்லை என்பதையும் இன்றே அறிந்தேன்.ஐயனார் கோயிலில் கிடா வெட்டு என்பது கோயிலில் உள்ள முனி போன்ற தெய்வங்களுக்காக இருக்கும் போல.
இருவருக்கும் நன்றி
ஷங்கர்
கீதையில் அந்த கருத்து உள்ளதா?நன்றி.இதையும் இன்றே அறிந்தேன்.இந்த பழமொழி மேலாண்மைதுறையில் அடிக்கடி உச்சரிக்கப்படும் பழமொழியாகும்.கீதையில் இது இருந்திருக்கிறதென்றால் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.
ஐயனாரப்பனை தவறாக பேசுவதை நான் ஏற்கவில்லை ஷங்கர்.அவர் தமிழ் பண்பாட்டின்,தமிழக கிராம நாகரீகத்தின் அடையாளம்.நம் மூதாதை.தமிழ்க்கடவுள் என்பதையும் தாண்டி இந்தியா முழுக்க மக்களால் நேசிக்கப்படுபவர்.
அன்பு நண்பர்களின் தகவலுக்கு,
சில பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட்டன.
நண்பர். திரு. எஸ். கே. ஐயா (வயதில் மூத்தவர் என அறிகிறேன்) அவர்கள் சொன்னது.
//40 - 48 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி தாங்கி வருபவர்கள் மட்டுமே, பதினெட்டாம் படி வழியே சென்று ஐயப்பனைப் பார்க்க வேண்டும் என அந்தக் கோவிலின் விதி.
மாதவிலக்குத் தீட்டு நேரத்தில் தொடர்ந்து விரதத்தைக் கடைபிடிக்க முடியாது என்பதால், இந்தப் பருவப் பெண்டிர் 18 -ம் படி வழி சென்று ஐயப்பனைப் பார்க்க முடியாது என்பதுதான் உண்மை.
மற்றபடி, யார் வேண்டுமெனினும், பின் வழியே சென்று, தரிசனம் செய்யலாம் என்பதுதான் உண்மை நிலை.//
பெண்களின் மாத விலக்கு நாட்களைக் கருத்தில் கொண்டே அதாவது பெண்களின் நலனை முன்வைத்தே?!, அக்காலப் பெரியோர், மாதவிலக்கு நிற்காத பெண்களுக்கு கடும் விரதமிருந்து, 18 படியேறி வருதல் இயலாது எனும் காரணாத்தாலேயே, மாதவிலக்கு நிற்காத பெண்கள் பின்வழியாகச் செல்லுதல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற ரீதியில் விளக்கம் கொடுத்திருக்கிறார். இது ஒரு பம்மாத்து என்பது என் கருத்து.
ஐயா, பின்பக்கம் வழியாகச் சென்று தரிசிப்பது, என்பதே கடந்த சில வருடங்களில் (வலிந்து) ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கம் என நினைக்கிறேன். அதாவது, கோவில் நிர்வாகம் விதிகளைச் சற்று தளர்த்தியிருக்கலாம் என நான் நினைக்கிறேன். என் யூகம் தவறாகவுமிருக்கலாம்; அதாவது ஆதி காலம் முதற்கொண்டே, சபரி மலையில் பின்வழி தரிசனம் வழக்கத்திலிருந்து வந்திருக்கலாம்.
ஆனால், அதுவல்ல என் வாதம். உண்மையிலேயே, பெண்கள் மீது கரிசனமிருந்திருந்தால், மாதவிலக்கு நிற்காத பெண்களுக்கென்று, தனியாக அரை மண்டலம் (20 அ 24 நாட்கள்) விரதமிருக்க வைத்து, பெருவழிப் பாதைப் பயணம், 18 படியேற்றம் போன்றவற்றை அனுமதித்திருக்காலாமே. பெண்களை அனுமதித்தால் தீட்டுப் பட்டுவிடும் (எஸ். கே ஐயா அவர்கள் சொல்வது போல் - //இந்து மதம் இந்த உடற்கூறு மாற்றத்தினை நன்றகவே புரிந்து கொண்டு, கெட்டுப்போன ரத்தப்போக்கை வெளியேற்றும் பெண்களை ஒரு 3 நாட்களுக்கு ஓய்வு கொடுத்து 'தீட்டு' என ஒதுக்கி வைத்தது. ...இறை, மற்றும் சுப நிகழ்ச்சிகளினின்றும் விலக்கி வைத்தது. ...காலம் காலமாக, இறை வழிபாட்டில் மாதவிலக்கு ஆகுபவர் கலந்து கொள்ளாமல், பெண்களுக்கு மதிப்பளித்து ஓய்வு கொடுத்த ஒரு தத்துவத்தை,//) என்ற காலாவதியாகிப்போன நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்களை இன்னும் பெருவழிப்பாதை, 18 படி ஆகியவற்றை பயன்படுத்தவிடாது தடுப்பது தவறானது என்பது என் வாதம். (எஸ். கே ஐயா அவர்கள் சொல்வது போல் - //மாதவிலக்கு முடிந்த 4௫ நாளிலிருந்து இடம் சுத்தமானவுடன், அடுத்த கருமுட்டை உருவாக ஆரம்பிக்கிறது. அது 8 - 9 நாட்களில், சினைக்கொடியிலிருந்து, சினைக்குழல் வழியே நகர்ந்து, கருப்பையை அடைகிறது, வீரியமுள்ள ஆண்விந்துவுடன் 10 முதல் 16 நாட்களுக்குள் சேர்ந்தால், கரு உண்டாகிறது. அப்படி நிகழாவிடின், அந்தக் கருமுட்டை மடிந்து, உரிந்து, ரத்தப்போக்குடன் 17 -ம் நாளைக்குப் பிறகு அழிய ஆரம்பித்து, 25முதல் 28 நாட்களில் மாதவிலக்காய் வெளியேறுகிறது.//)
மாதவிலக்கு என்பது பெண்களுக்கு மட்டுமே, பிரத்யேகமாக நடைபெறும் ஒரு உடலியக்க நிகழ்ச்சி. எப்படி நாமெல்லாரும், மல, ஜலம் கழிக்கிறோமோ அதுபோன்றே பெரும்பாலான பெண்களுக்கு 28 நாட்களுக்கொருமுறை மாதவிலக்கு ஏற்படும். இது ஒரு இயற்கை நிகழ்வு. என்ன, பொதுவாக பெண்கள் மாதவிலக்கான நாட்களில் சற்று சோர்வாக இருப்பார்கள். அந்த நாட்களில் பெண்கள் சோர்வடைவார்கள் என அறிந்திருந்த பெரியோர்கள் அதற்கேற்றவாறு அரைமண்டல விரதமிருக்க பெண்களை அனுமதித்திருக்கலாமே. அதைவிடுத்து தீட்டு என்று, இன்று முட்டாள் தனமாகத் தெரியும், ஒரு கருத்தாக்கதைக்கொண்டு பெண்களைத் தள்ளி வைப்பது மிகவும் தவறான செயல். இது அக்காலத்தில் நிலவிய ஆணாதிக்க மனப்பான்மையின் ஒரு வெளிப்பாடு. அதற்கு எஸ். கே ஐயா போன்றவர்கள் அறிவியல் விளக்கங்களையளித்து வக்காலத்து வாங்குவதும் தவறு. ஏதோ, அந்தக்காலத்தில் நிலவிய கலாச்சார சூழலில், அவர்களுக்கிருந்த அறிவு வளர்ச்சியைக் கொண்டு சில விதிமுறைகளை ஏற்படுத்தியிருக்கலாம். அதை இன்னும் பிடித்துக்கொண்டு தொங்குவது தான் தவறானது என்பதே என் வாதம். (அப்படியாயின், மல, ஜலம் கழிப்பதும் ஒரு தீட்டுதானே, 40 நாட்களும் மல, ஜலம் கழிக்காதவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றிருந்தால் என்னவாகும்) அதைத்தான், என் முந்தைய பின்னூட்டத்திலும் 'மாற்றத்தால் ஆகியதே உலகம்' என்வே சபரி மையிலும் காலத்திற்கேற்ப மாற்றம் நிகழ வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதியிருந்தேன்.
கடும் விரதம் அனுஷ்டித்துத்தான் ஐய்யப்பனை தரிசிக்கவேண்டும் என இருந்ததால் தான், அக்கோவில் மேல் பலருக்கும் ஒரு ஈடுபாடு ஏற்பட்டு, அக்கோவில் மிகவும் பிரபலமடைந்தது. (30 - 40 ஆண்டுகளுக்குள் தான் இது நடந்தது என நினைக்கிறேன்) மேலும் 'மகரஜோதி?!' போன்ற அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதைகளும் கோவிலின் பிரபலத்திற்கு ஒரு காரணம். பல பழம்பெருங் கோவில்களைப் பின்னுக்குத்தள்ளி விட்டு ஐய்யப்பன் தனது 'மார்க்கெட்டிங் உத்தியால்' பிரபலமடைந்தது இங்ஙனமே. அதைத் தக்கவைத்துக் கொள்ளவே பின்வழி தரிசனமுறை போன்று விதிமுறைகளில் சில 'தள்ளுபடிகள்' செய்யப்பட்டிருக்கலாம். அது போன்றே மாதவிலக்கான பெண்களுக்கும் விதிமுறைகளில் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதே என் அவா. மாற்றத்திற்குட்படாத எவையும் காலத்தால் அடித்துச் செல்லப்படும். இது மதம், ஆன்மீகம், அறிவியல், கலை, சினிமா, மருத்துவம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் எல்லாவற்றிற்கும் பொருந்தும். மேலும் மக்களுக்குத்தான் கடவுளே தவிர, கடவுளுக்காக மக்களில்லை. ஒரு பொம்மலாட்டக்காரன் போல் மக்களை ஆட்டுவிக்கும் கடவுள் எனக்குத்தேவையில்லை என்பது என் கருத்து. அதற்கு எஸ். கே ஐயா போன்றவர்கள், காலத்திற்குதவாத வழிமுறைகளை தூக்கிப்பிடிப்பதற்காக, அறிவியல் முலாம் பூசிய புதிய விளக்கங்களையளிப்பது தவறு என்கிறேன். எஸ். கே அவர்கள், கட்டுப்பெட்டித்தனங்களை தான் அப்படியே நம்புகிறேன், அவற்றை இன்றைய அறிவு கொண்டு விளக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறியிருப்பாராயின் அவருடன் வாதம் புரிய வேண்டிய அவசியமெனக்கில்லை. ஆனால், அவர் கடவுளர் மேலிருக்கும் தீவிரப் பற்றுதலினால், காலாவதியாக வேண்டிய கருத்தாக்கங்களை தூக்கிப்பிடிக்கிறார் என நான் நம்புவதால் இப்பின்னூட்டம். 'ஓள்D HஆBஈTஸ் Dஈஏ Hஆற்D' தானே. எனக்கும், நான் நம்பும் சில விடயங்களில், பகுத்தறிவிற்கும், ஜனநாயகத்திற்கும் புறம்பான வழக்கங்களிருக்கலாம் (இருக்காது என நம்பினாலும்). சற்று கார சாராமாக இவ்விடயத்தை கையாண்டிருப்பதின் நோக்கம், சபரிமலையில் நடைபெறும் ஜனநாயகத் தன்மையற்ற போக்கைக் கண்டிக்கும் விததில்தானே தவிர, யாரையும் தனிப்பட்டமுறையில் புண்படுத்தும் நோக்கத்திலல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
மேலும், நண்பர். திரு. வஜ்ரா சங்கர் அவர்கள் காரல் மார்க்ஸ் ஒரு Plagiarist என (வஜ்ரா சங்கர் சொன்னது //தங்கவேல் ...
//
"மாற்றம் ஒன்றே நிலையானது " - காரல் மார்க்ஸ்
//
அதைச் சொன்னது கீதை.
கார்ல் மார்க்ஸ் - Plagiarist ;D //) போகிறபோக்கில் அவதூற்றை வீசிச் செல்கிறார். மாற்றமே உலகில் நிலையானது எனக் கீதையிலும் சொல்லியிருக்கலாம். மார்க்ஸ் கீதையையும் வாசித்திருந்திருக்கலாம், (எனக்குத் தெரியாது) அதனால் பாதிப்புமடைந்திருக்கலாம். அதற்காக அவர் காப்பியடித்தார் என்று அவதூறு சொல்லக்கூடாது. நான் கீதைக்கோ, மார்க்சுக்கோ காவடி தூக்கவில்லை. ஆயினும் திரு. சங்கர் அவர்கள் ஆதாரங்களைக் காட்டமுடியுமா? யாரும் இங்கு சுயம்பு இல்லை. இது கீதாசிரியருக்கும், மார்க்சுக்கும், ஏன் எனக்கும், உங்களுக்கும் பொருந்தும். நம்முடைய இன்றைய அறிவு, எண்ணங்கள் எல்லாம் நம்மூதாதையரிடமிருந்து வந்ததே. அதற்காக அவற்றையே பிடித்து தொங்கிக்கொண்டிராமல், அவற்றை மேம்படுத்த வேண்டுமெயன்றி, அவர்கள் சொன்னதே வேதம், (இங்கு வேதம் என்பதை கேள்வி கேட்காமல் நம்புவது என்ற பொருளில் கையாண்டுள்ளேன்) முக்காலத்திற்கும் பொருந்தும் உண்மை என நம்பக்கூடாது என்பதே என் கருத்து. அதுவே உண்மையான தத்துவ விசாரம். உண்மையான அறிவியலும், ஆன்மீகமும் போதிப்பது அதையே. நண்பர்கள் என்னைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். என் கருத்தை வலியுறுத்தும் வேளையில், யார் மனத்தையவது நான் புண்படுத்தியிருந்தால் மன்னித்தருள வேண்டுகிறேன்.
பின்னூட்டம் மிகவும் நீண்டுவிட்டதால், இதனை ஒரு தனிப்பதிவாக என் வலைத்தளத்திலும் இட்டுள்ளேன். (http://puliamaram.blogspot.com/)
Conflict of interest: எனக்கு கடவுள் நம்பிக்கையின் மேல் தற்போதைக்கு நம்பிக்கையில்லை.
குறிப்பு: அதற்காக யாரும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மத நம்பிக்கைகளில் மூக்கை நுழைக்கவேண்டாம் என எச்சரிக்க வேண்டாம். இதுகுறித்து ஒரு தனிப்பதிவு போடும் எண்ணமுள்ளது.
நன்றி
அன்பன்
தங்கவேல்
நீண்ட விளக்கத்துக்கு நன்றி தங்கவேல்.
எஸ்.கே காலையில் இதற்கு விளக்கமளிப்பார் என எண்ணுகிறேன்.
நன்றி
செல்வன்
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றும்போது சில வார்த்தைகள் என் பின்னூட்டத்தில் சரியாக வரவில்லை. திருத்தப்பட்ட ஆங்கில வார்த்தையைக் கீழே கொடுக்கிறேன்.
//ஆனால், அவர் கடவுளர் மேலிருக்கும் தீவிரப் பற்றுதலினால், காலாவதியாக வேண்டிய கருத்தாக்கங்களை தூக்கிப்பிடிக்கிறார் என நான் நம்புவதால் இப்பின்னூட்டம். 'Old habits die hard' தானே. எனக்கும், நான் நம்பும் சில விடயங்களில், பகுத்தறிவிற்கும், ஜனநாயகத்திற்கும் புறம்பான வழக்கங்களிருக்கலாம் (இருக்காது என நம்பினாலும்).//
சதயம். அது தானே பின்னூட்ட மட்டுறுத்தல் மகிமை. :-) கோவிச்சுக்காதீங்க ஊர்க்காரரே.
//இந்து மதம் இந்த உடற்கூறு மாற்றத்தினை நன்றகவே புரிந்து கொண்டு,
கெட்டுப்போன ரத்தப்போக்கை வெளியேற்றும் பெண்களை ஒரு 3 நாட்களுக்கு
ஓய்வு கொடுத்து 'தீட்டு' என ஒதுக்கி வைத்தது.
இறை, மற்றும் சுப நிகழ்ச்சிகளினின்றும் விலக்கி வைத்தது.
காலம் காலமாக, இறை வழிபாட்டில் மாதவிலக்கு ஆகுபவர் கலந்து கொள்ளாமல்,
பெண்களுக்கு மதிப்பளித்து ஓய்வு கொடுத்த ஒரு தத்துவத்தை, அனைத்துப்
பெண்டிரும் ஏற்று மதித்து உடன்பட்டு வந்திருக்கின்றனர்.
புதுமை என்னும் பெயராலோ,அல்லது பெண்விடுதலைப் போராளி என்னும்
அடையாளத்தைத் தாங்கியோ, திடீரென சிலர் முளைப்பது சுயநலமே அன்றி,
இதில் பெண் நலம் இல்லையென்பதை ச்ம்பந்தப் பட்டவர்கள் உணர வேண்டும்.
நான் விளக்கம் கொடுத்த பின்னரும், சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை,
பட வேண்டும் என்ற போக்கில் சிலர் இதே பதிவிலும் எழுதி வருவது பற்றியும்,
நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
40 - 48 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி தாங்கி வருபவர்கள் மட்டுமே,
பதினெட்டாம் படி வழியே சென்று ஐயப்பனைப் பார்க்க வேண்டும் என அந்தக் கோவிலின் விதி.
மாதவிலக்குத் தீட்டு நேரத்தில் தொடர்ந்து விரதத்தைக் கடைபிடிக்க
முடியாது என்பதால், இந்தப் பருவப் பெண்டிர் 18 -ம் படி வழி சென்று
ஐயப்பனைப் பார்க்க முடியாது //
Fabulous Nonsense
//கண்ணகியும் ஐயப்பனும் நம்மவர்கள் என்பதை முதலில் அனைவரும் உணரவேண்டும்//
நீங்கள் நம்மவர்னு சொல்றது நம்மைப் போல் மனிதர்களாக வாழ்ந்து பிறகு தெய்வமானார்கள்னு அர்த்தமா அல்லது முருகன் மாதிரி தமிழ் கடவுள்னு சொல்லவறிங்களா?
என்ன இருந்தாலும் இருமுடி கட்டிக்கொண்டு, சரணம் சொல்லிக்கிட்டே மலைக்கு போறது ஒரு தனி சுகம்.
பெரும்பாலும் ஊகங்களையும், எதிர்வாதம் எஙிற பெயருஇல் தனது சொந்த விருப்பு வெறுப்புகளையும் கொண்ட தங்கவேலனரின் பதிவுக்கு எப்படி மறுமொழி இட்டாலும் சரியாகப் போவதில்லை.
ஒரு மண்டலத்தை அரை மண்டலமாக்கலாம் எனக் கொடி துக்கும் இவருக்கு நான் என்ன சொல்லி விளங்க வைப்பது, இது ஒன்றும் உங்கள் வீட்டு விவகாரமில்லை என்பதை!
நம்பிக்கை இல்லாதவன் என்று பறை சாற்றிக் கொள்பவரிடம் எப்படி நம்பிக்கையை ஊட்ட முயலுவது?
மேலும் அது என் வேலையும் அல்ல.
இவர் கூறியிருக்கும் பல கருத்துகளுடன் அறிவுரீதியாக நான் ஒத்துப்போக நேரிடலாம்.
வாதத்திற்கு எதிர்வாதம் என்ற முறையில் அதை நான் அணுகச் சம்மதமே!
ஆனால், இங்கே அவர் வேண்டுவது முழுக்க முழுக்க அவரது சொந்த விருப்பமே தவிர வேறொன்றுமில்லை என்பதால், இதற்கு பதில் சொல்வதைத் தவிர்க்கிறேன்.
தெரியாமலோ, பயந்தோ அல்ல, இது ஒரு வீண் முயற்சி என்பதால்!
சாஸ்திரங்கள் வேண்டாம் என்பவருக்கு சாஸ்தா மட்டும் ஏன் வேண்டும்.
இது போன்ற விரத காலங்களில் பெண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வகையில் வழிகளைக் கடைப்பிடிக்கின்றன.
அவற்றை ஏற்றுக்கொள்ளும் திடம் இல்லையெனில், விலகிப் போவதே உத்தமம்.
இதே வாதத்தை ஹாஜ் பயணிகளுக்கும் சொல்வாரா?
மிகவும் தயங்கித்தான் இந்தக் கேள்வியை வைத்தேன்.
பிரச்சினையை திசை திருப்ப அல்ல!
அவர்களது காரணங்களையும் ஒத்துக்கொள்கிறேன் என்பதாலேயே!
இறை நம்பிக்கை உடைய எவனும் அடுத்த மதத்தைக் குறை கூற மாட்டான்!
மதவெறியன் வேண்டுமானால் அப்படிச் செய்யலாம்.
ஒரு ஆன்மீகன் அப்படிச் செய்யமாட்டான்.
பம்மாத்து பண்ண எனக்கு நேரமும் இல்லை; தேவையும் இல்லை.
புரிந்து கொள்ள ஆசையின்றி, எதிப்பதற்கென மட்டும் வரும் கேள்விகளைத்தான் நான் புறக்கணிக்கிறேன்.
நன்றி.
[பி.கு.] ஆதிரையின் பதிலைப் பார்த்தேன். அவருக்கும் இதுவே!
சதயம்,
குமரன் சொன்ன பதில் தான் சரி என நினைக்கிறேன்.ஆனால் வவ்வால் பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லாமல் எப்படியோ நிறைய பின்னூட்டம் வாங்குகிறார்.அந்த ரகசியத்தை அவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்:-))
தங்கவேல், எஸ்.கே
இந்த விவாதத்தில் என் கருத்து என்னவென்றால் அந்த காலத்தில் இந்த நடைமுறையை வகுத்தவர்கள் அந்த காலகட்டத்தில் இருந்த சுகாதார,மருத்துவ அறிவை வைத்து பூஜை நடைமுறையை வகுத்தார்கள்.இப்போது மாதவிலக்கு பற்றி நமக்கு இருக்கும் அறிவும் தெளிவும் அவர்களுக்கு இருந்திருக்காது.காலம் காலமாக அதே நடைமுறை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இப்போது அது தப்பு மாற்று என்றால் யார் மாற்றுவது?மற்ற மதங்களில் ஒரு மதத்தலைவர் இருந்து சட்டம் போடுவார்.உடனடியாக மாற்றம் வந்துவிடும்.இந்துமதத்தில் அனைவரும் ஏற்கும் தலைவர் என யாரும் இல்லையே?மாற்றம் கொண்டுவருவது யார்?
இப்போது கோயில்களில் மாதவிலக்கான பெண்கள் போக தடை ஏதும் இல்லை.கோயில் வாசலில் நிறுத்தியா கேட்கிறார்கள்,தீட்டா இல்லையா என்று?பெண்களாக போவதை தவிர்க்கிறார்கள்.அதை கண்டுகொள்ளாமல் போகிறவர்களும் இருப்பார்கள்.இதில் சட்டம் போட்டு மாற்றுவது என எதுவும் இல்லை.அவரவரே நீதிபதிகள்.
http://www.ndtv.com/topstories/showtopstory.asp?slug=Govt+calls+off+NLC+disinvestment&id=19762&category=National
Just wanted to share the sad story..
வெட்டிப்பயல்.
நம்மவர்கள் என்றது தமிழர்கள் அனைவரையும்.தமிழர்கள் என்பதையும் தாண்டி இந்தியர்கள் அனைவருக்கும் குலமுதாதையர் கண்ணகியும் ஐயப்பனும்.இவ்விருவரும் தமிழகத்தின்/பாரதநாட்டின் பெருமை வாய்ந்த கலாச்சாரத்தின் சின்னங்கள்.
அனானிமஸ்
எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம்
என்பது இழுக்கு
மன்மோகனார் படிக்கவேண்டிய குறள் இது
Thanks for sharing the news
$elvan,
கோவில் தல வரலாற்றுபடி ஐயப்பன் மகிஷியை வதைக்க பூலோகத்தில் அவதரித்தவன். இராமன் எப்படி இராவணனை வதைக்க அவதரித்தானோ அதுப்போல தான் இதுவும். கடவுளுக்குள் தமிழன், இந்தியன் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள கூடியது அன்று. மனித இனத்தை காக்க அவர் அவதரித்தார். அவ்வளவுதான். அப்படி நினைத்துதான் மாலைப்போட்டு விருதம் இருக்கி(றேன்)றார்கள்.
கண்ணகி விஷயத்துல ஒத்துக்கறன்.
SK அவர்கள் சொல்வது போல்
//40 - 48 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி தாங்கி வருபவர்கள் மட்டுமே, பதினெட்டாம் படி வழியே சென்று ஐயப்பனைப் பார்க்க வேண்டும் என அந்தக் கோவிலின் விதி.//
கிரிக்கெட்ல ஏன் 11 பேர்தான் விளையாடனும்னு கேக்கறோமா? Its a Rule!!!அவ்வளவுதான்.
மாற்ற வேண்டிய பல விஷயங்கள் இருக்கும் போது இந்த மாதிரி கோவிலை வைத்து அரசியல் செய்வது
தேவையற்ற வேலை.
//மாதவிலக்கு என்னும் முக்கியமான காரணம் அது நிகழும் பெண்களால் தவிர்க்க முடியாத ஒன்று என்பதாலேயே, அவர்களால் மாலை அணிந்து விரதம் தொடர்ந்து 40 நாட்கள் இருக்க முடியாத நிலை.
//
சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல விரதம் இருந்தும் ( 48 நாள்) இருமுடி தாங்கி செல்லலாம்.
7 நாள் அல்லது 1 நாள் விரதம் இருந்தும் இருமுடி தாங்கி செல்லலாம்.
நான் 3 முறை 7 நாள் விரதம் இருந்து இருமுடி தாங்கி 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசித்துள்ளேன். எனக்கு தெரிந்து பல பேர் 1 நாள் விரதமிருந்து இருமுடி தாங்கி 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசித்துள்ளார்கள்.
மகர சோதி தரிசனத்திற்கு செல்பவர்கள் பெரும்பாலும் மண்டல விரதமிருப்பவர்கள்.
என்கருத்து என்னவெனில் மாதவிலக்கு தான் பெண்களை 18ம் படி ஏறுவதை தடுக்கிறது என்றால் அவர்கள் 48 நாட்களுக்கு பதிலாக 1 அல்லது 7 நாள் விரதம் இருந்து படி ஏறலாம் என்பதே.
மார்கழி , தை மாதம் சென்று அந்த கூட்ட நெரிச்சலில் சிக்கி ஐயப்பனை தரிசிப்பதை விட சித்திரை அல்லது மற்ற மாதங்களில் சென்று பெண்கள் ஐயப்பனை தரிசிக்கலாம்.
சாமி சரணம்.
குறும்பன் மெய்யகவோ, பொய்யாகவோ சொன்னதில் ஒரு உண்மை இருக்கிறது.
அப்படி 1 நாள் 7 நாள் விரதம் இருந்து போகுபவர்கள் முறைப்படி செல்லாத போலி விரதக்காரர்கள்!
மலையில் உங்களை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.
இருமுடியுடன் வருபவர்கள் என்றல், அவர்கள் முறைப்படி 40 - 48 நாள் விரதம் இருந்து வருபவர்கள் என் நம்பித்தான் 18-ம் படியில் ஏற விடுகிறார்கள்.
வேண்டுமானால் அடுத்த முறை மேல்சாந்தியிடம் கேட்டுப்பாருங்கள்!
என்ன சொல்கிறரென்று தெரியும்.
'வெட்டிப்பயல்' சொன்னது போல, அந்தக் கோவிலின் விதியை மதிக்காமல், ஐயப்பனை எப்படி மதிப்பீர்கள்?
ஏன் அவரைப் பார்க்க போக வேண்டும்.
நம்க்குத்தான் நிறைய சாமிகள் இருக்கிறார்களே, அவர்களில் உங்கள் கருத்துக்கு வளைந்து வரும்[!!] சாமியைப் பிடித்துத் தொங்குங்களேன்!
நமக்கென்ன ஒரே ஒரு அல்லா, ஒரு ஜீஸஸ் போலவா!?
:)))))))))
இத்தோட நான் ஜூட்!
வெட்டிபயல்
கடவுளுக்கு தமிழன்,இந்தியன் என்ற பேதம் இல்லைதான்.இருப்பினும் தமிழ்க்கடவுள் என முருகனையும்,நெய்தல் நில கடவுள் என விஷ்ணுவையும் சிறப்பித்து சொல்கிறோமல்லவா?கிருஷ்ணனை யாதவர்கள் தம் குலதெய்வமாக கும்பிடுகிறார்கள் அல்லவா?
இந்து மதத்தின் சிறப்பே இப்படிப்பட்ட personal god எனும் தத்துவம் தான்.சாமியை "நம்ம சாமி" என அந்தந்த பிரதேச மண்வாசனையோடும்,பெயரோடும் அழைத்து "குல தெய்வம்" என ஒரு குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ளும் இந்த flexibility தான் இந்து மதத்தின் மிகப்பெரும் பலம்.
குறும்பன்,
நல்ல யோசனைதான்.ஆனால் இப்போது இதை நடைமுறைப்படுத்துவது யார் என தான் சிக்கல் எழும்.புதிதாக சாஸ்திர,சம்பிரதாயங்களை உருவாக்கும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு படைத்த இந்து மதத்தலைவர்கள் யாரும் இல்லை.
புதிதாக கோயில் கட்டி(ஆதிபராசக்தி கோயில் போல) புது சம்பிரதாயங்களை ஏற்படுத்த முடியுமே தவிர பழையதில் மாற்றம் செய்யும் அளவு வலிமை இந்துமதத்தில் எந்த பீடாதிபதிக்கும் இல்லை.ஆக என்ன செய்வது என குழப்பமே மேலோங்குகிறது.
//பெண்கள் பின் வழியாகச் செல்லலாம் என்பது நடைமுறை உண்மை..//
அப்போ என்னதான் பிரச்சினை ? நடிகை ஜெயமாலா என்னதான் செய்தார்?
//அப்போ என்னதான் பிரச்சினை ? நடிகை ஜெயமாலா என்னதான் செய்தார்? //
அவர் கர்பகிரஹத்தில் புகுந்து ஐயப்பனை தொட்டு வணங்கினேன் என சொன்னார்.அதுதான் பிரச்சனை
பெண்களுக்கு ஓய்வு கொடுக்கதான் இப்படி செய்கிறார்களென்றால்
எனக்கு ஓய்வு தேவையில்லை என்ரு சொல்பவர்களை அனுமதிக்கலாமே!
பெண்கள் அரை மண்டலமென்ன முழு மண்டலம் ் தாராளமாக விரதம்
இருக்கலாம். என்ன கெட்டு விடும்?
இவர்கள் முதலில் பெண்கள் சிலையை தொட்டதால் தீட்டு என்பார்கள்.
அப்புறம் தாழ்த்தப்பட்டவர்கள் பிராமணரல்லாதவர்கள் கோவிலுக்குள்
நுழையக்கூடாதென்பார்கள். (தீட்டோன்னோ)
இந்த நாடகம் எதற்கு நடத்தப்படுகிறது என்று புரிவது
கஷ்டமே இல்லை..
$elvan,
விளக்கத்திற்கு நன்றி.
//அப்படி 1 நாள் 7 நாள் விரதம் இருந்து போகுபவர்கள் முறைப்படி செல்லாத போலி விரதக்காரர்கள்!
மலையில் உங்களை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.
இருமுடியுடன் வருபவர்கள் என்றல், அவர்கள் முறைப்படி 40 - 48 நாள் விரதம் இருந்து வருபவர்கள் என் நம்பித்தான் 18-ம் படியில் ஏற விடுகிறார்கள்.
வேண்டுமானால் அடுத்த முறை மேல்சாந்தியிடம் கேட்டுப்பாருங்கள்!
என்ன சொல்கிறரென்று தெரியும்.
//
என்ன சொல்வது? :-))
உண்மையான விரதக்காரரே எங்காவது 48 நாள் விரதம் இருந்து தான் 18ம் படி ஏற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதா?
18ம் படி ஏற வேண்டுமானால் இருமுடி தாங்கி இருக்க வேண்டும் அவ்வளவு தான். நீங்க 3 மண்டலம் கூட விரதம் இருந்து செல்லலாம் அது உங்கள் விருப்பம்.
மேல் சாந்தி எதற்கு இங்கு? அவரே உன்னி கிருஷ்ண பணிக்கரின் தேவ பிரசன்னத்தால் ஆடி போய் இருக்கார். :-)
சோதி தரிசனத்துக்கு முன் வரும் மிகப்பெரும்பான்மையோர் 1 மண்டல விரதம் இருப்பதில்லை என்பது மேல் சாந்தி, தந்திரி, கோயில் நிவாகம், மக்கள் எல்லோருக்கும் தெரியும், இதில் இரகசியம் எதுவும் இல்லை.
//நல்ல யோசனைதான்.ஆனால் இப்போது இதை நடைமுறைப்படுத்துவது யார் என தான் சிக்கல் எழும்.புதிதாக சாஸ்திர,சம்பிரதாயங்களை உருவாக்கும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு படைத்த இந்து மதத்தலைவர்கள் யாரும் இல்லை.
//
செல்வன் இந்து மதத்திற்கு என்று மதத் தலைவர்கள் யாரும் கிடையாது. அது தான் இந்து மதத்தின் பெருமை, இது ஒரு சங்கமம். சில பேர் நான் தான் தலைவர் என்று அடித்துக்கொள்வது அதை வைத்து அதிகாரமும் பயனும் பெறவே.
ஒரே நாளிலா மாற்றம் வரும்? இப்ப தான் இதைப்பற்றி பிரச்சனை வந்துள்ளது நாளடைவில் மாற்றம் வரலாம். ஆதியிலிருந்து இதே சடங்கும் சம்பிரதாயத்தையுமா ஐயப்பன் கோயில் கொண்டுள்ளது?
எனக்கு தெரிந்து ஐயப்பன் கோயிலில் சம்பரதாயங்களை மாற்றுவது எளிது. ஒரு தேவபிரசன்னம் கேட்டு சம்பிரதாயத்தை மாற்ற வேண்டியது தான். கவனிக்க உன்னி கிருஷ்ண பணிக்கர் தேவ பிரசன்னத்திலேயே முன்பு கோல்மால் நடந்திருக்கு என்று குற்றம் சாட்டியுள்ளார். அதாவது நிர்வாகம் நினைத்ததை தேவ பிரசன்னத்தில் கொண்டு வந்துவிட்டார்களாம்.
ஆம் குறும்பன்
தலைவர் என இங்கு யாரும் இல்லை.அதனால் தான் சொன்னேன்.அவரவரே இவ்விஷயத்தில் நீதிபதியாய் இருந்தால் போதும் என்று.சட்டம் மூலம் யாரையும் தடுத்தல் வேண்டாம்.தமக்கு பிரியமான வழிபாட்டு முறையை தேர்ந்தெடுத்து மக்கள் வணங்கட்டும்.அதை இன்னொருவர் சொல்லி செய்தல் வேண்டாம்.பழைய முறையில் வழிபட விரும்புவோரும் தம் வழி செல்லட்டும்.எந்த வழியில் சென்றாலும் அடையப்போவது இறைவனைத்தானே?
வணக்கம் ஹாஜி முஹம்மது அவர்களே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
இது ஐயன் வாக்கு.இந்து மத கோட்பாட்டின்படி வாழ்வாங்கு வாழ்ந்த பெரியவர்கள்,நம் பெற்றோர்,குரு,சகோதரன் ஆகியோர் தெய்வ அம்சம் பொருந்தியவர்களாக கருதப்பட்டு வழிபடப்படுகின்றனர்.கடவுள் பூமிக்கு மனித அவதாரம் எடுத்து வருவது,அதர்மம் வரும்போது அதை அழிக்க கண்ணன் அவதாரம் எடுப்பது ஆகியவை இந்து மத நம்பிக்கைகள்.அதன் அடிப்படையில் வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த கண்ணகியும் ஐயனாரப்பனும் தெய்வமாக கருதப்பட்டு வழிபடப்படுகின்றனர்.
அன்புடன்
செல்வன்
//அவர் கர்பகிரஹத்தில் புகுந்து ஐயப்பனை தொட்டு வணங்கினேன் என சொன்னார்.அதுதான் பிரச்சனை//
இதையே ஒரு ஆண் செய்திருந்தால் பிரச்சினை ஆகியிருக்குமா?
//இதையே ஒரு ஆண் செய்திருந்தால் பிரச்சினை ஆகியிருக்குமா?//
கன்னிமார் அம்மன் கோயில் கர்பகிரகத்தில் மோகன்லால் போய் சாமியை தொட்டு கும்பிட்டதாக செய்தி வந்திருந்தால் இதை விட பிரச்சனை ஆயிருக்கும்.
Post a Comment