Friday, July 21, 2006

10.இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி?

இதுவரை பல இன்டர்வியூக்களில் கலந்துகொண்டு அடி,உதை,பரிசு,பாராட்டு வாங்கியவன் என்ற தகுதியில் இந்த பதிவை எழுதுகிறேன்.:-)

இந்த பதிவை எழுத காரணமாக இருந்த பாலாஜிக்கு நன்றி.

இன்டர்வியூ பற்றி நான் மாணவனாக இருந்தபோது பலவித வதந்திகள் உலாவரும்.சாம்பிளுக்கு சில.

"ஒரு கேண்டிடேட் முதல்மாடியிலுள்ள இன்டர்வியூ அறைக்கு சென்றான்.அவனிடம் கேட்கப்பட்ட கேள்வி 'நீ ஏறிவந்த படிகள் எத்தனை?'.அவன் சொன்ன பதில் 15,சரி.உடனடியாக வேலை கிடைத்தது'

'இன்னொரு கேண்டிடேட்டிடம் கேட்கப்பட்ட கேள்வி 'உனக்கு பின்புறமுள்ள சுவரின் நிறம் எது?டக்கென்று திரும்பி பார்த்தான்.அவுட்...முன்சுவரும்,பின்சுவரும் ஒரே நிரம்தானே இருக்கும் என்ற லாஜிக் அவனுக்கு தெரியவில்லையே?....'

இன்டர்வியூவுக்களுக்கு போய் அடிபட்ட பின் தான் தெரிந்தது.இதெல்லாம் கப்சா என்று.சிஐடி வேலைக்கு வேண்டுமானால் இப்படி இன்டர்வியூ வைப்பார்கள் என்னவோ...எனக்கு யாரும் இப்படி வைக்கவில்லை.

என் அனுபவம் என்ன என்று சொன்னால் தான் நான் எழுதும் இக்கட்டுரையின்(அல்லது தொடரின்) பயனை அறிய உதவியாக இருக்கும் என்பதால் சொல்கிறேன்.பல பன்னாட்டு/இந்திய பெரும் கம்பனிகளின் இன்டர்வியூக்களில் பங்குகொண்டிருக்கிறேன்.தேர்ச்சி/தோல்வி பெற்றிருக்கிறேன்.சந்தையியலில் ஆய்வு நடத்த நூற்றுக்கணக்கானோரை இன்டர்வியூ செய்திருக்கிறேன்.மனோதத்துவத்தில்(psychology) பல கோர்ஸ்கள் எடுத்து படித்திருக்கிறேன்.

1.இன்டர்வியூவின் ஹீரோ...

நீங்கள் அல்ல.உங்கள் பயோடேட்டா(Resume) தான் ஹீரோ.பல சமயங்களில் இன்டர்விய்யு நடத்துமுன்னரே கேண்டிடேட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவர்.எதன் அடிப்படையில்?உங்கள் பயோடேட்டாவின் அடிப்படையில் தான்.வந்திருக்கும் பயோட்டேட்டாக்களை பரிசீலித்து அதில் கம்பனி நிர்வாகம் எதிர்பார்க்கும் தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து,அவர்கள் மேல் ஒரு கண்ணோடு தான் இன்டர்வியூ நடக்கும்.இம்மாதிரி சமயங்களில் இன்டர்வியூவை அவர்களாக சொதப்பிக்கொண்டால் தவிர அவர்கள் தோற்கும் வாய்ப்பு வெகு குறைவு.இம்மாதிரி பட்டியலில் இல்லாதவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு மிக குறைவு.அவர்கள் எதிர்பார்க்கும் கேண்டிடேட் வரமறுத்தால்,சம்பளம் அதிகம் கேட்டால் மட்டுமே உங்களை தேர்ந்தெடுப்பர்.

ஆக உங்கள் பயோடேட்டா சரியில்லை என்றால்(சரீல்லை என்றால் அச்சுப்பிழை,எழுத்துப்பிழை அல்ல.உங்கள் தகுதிகள் சரி இல்லை என்றால் இன்டர்வியூவில் நீங்கள் என்ன தான் ஜொலித்தாலும்.selection.கஷ்டம்..கஷ்டம் தான்)

பயோடேட்டா சரியாக இருந்தால் இன்டர்வியூவில் சொதப்பினாலும் தேர்ந்தெடுக்கபட வாய்ப்பு அதிகம்.

2.ஆங்கிலத்தேர்ச்சி

மிக,மிக,மிக,மிக,மிக,மிக,மிக,மிக...(இன்னும் ஒரு ஆயிரம் முறை எழுதிக்கொள்ளுங்களேன்....) முக்கியம்.

(ஆங்கிலம் மொழி..தகுதி அல்ல போன்ற சண்டைகளுக்கு இங்கே எனக்கு நேரமில்லை.)

பன்னாட்டு கம்பனிகளில் இரண்டு ஜாதிகள் உண்டு.ஆங்கிலம் இலக்கண சுத்தமாக +fluent பேசுபவன்/எழுதுபவன்... others என இரு ஜாதிகள் உண்டு.

நான் வேலை செய்த ஒரு பன்னாட்டு கம்பனியில் பொள்ளாச்சியில் ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாத டீலர்களுக்கு பொருட்களை விற்றேன்.அந்த வேலை செய்ய சுத்த தமிழே தெரிந்தால் போதுமானது.ஆனால் கம்பனி மீட்டிங்கில் பச்சை தமிழரான நிர்வாகியிடம் இலக்கண சுத்தமான ஆங்கிலத்தில் பேசப்பயந்து பேசாமல் வாயடைத்து நின்ற பலர் அதனாலேயே பல வாய்ப்புக்களை இழந்திருக்கின்றனர்.

என் மார்க்கட் பற்றிய விவரங்களை அழகாக வர்டில்(MS word) அடித்து ரிப்போர்ட் தந்து பல நல்ல விளைவுகளை அடைந்திருக்கிறேன்.சொல்ல மிக கூச்சமாக இருக்கிறது என்றாலும் சொல்கிறேன்.உலகின் முதல் நிலை வங்கி ஒன்றில் கடைநிலை வேலை(entry level salesman) ஒன்றை செய்துகொண்டிருந்தபோது கோவை கிளை சார்பில் அகில இந்திய அளவிலான மீட்டிங் ஒன்றில் salesman ஒருவர் பேசவேண்டும் என்ற சூழ்நிலை.அனைவரும் பயந்து நடுங்கியபோது துணிந்து எழுந்து மைக்கை பிடித்தேன்.


பேசி முடித்தபின் அந்த வங்கியின் உயர் நிர்வாக அதிகாரி வந்து எனக்கு கைகொடுத்து பாராட்டி வாழ்த்தியதை,அந்த வங்கியின் அனைத்து உயர் மட்ட அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் என் பெயர் தெரிந்ததை,அதனால் பல நன்மைகள்(links) எனக்கு கிடைத்தது,என் கிளைக்கு என்னால் அன்று பாராட்டு கிடைத்தது இதை எல்லாம் சொல்லி பெருமை தேடவேண்டிய அவசியத்தில் எழுதவில்லை.ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவே சொல்கிறேன்.நல்ல ஆங்கிலத்தில் பேசுவதால்,எழுதுவதால் மட்டுமே நான் இன்று அமெரிக்காவில் பல்கலைகழகத்தில் வகுப்புகள் எடுக்க,பாடம் சொல்லித்தர,சர்வதேச ஆங்கில ஜர்னல்களில் எழுத(கட்டுரைகளை மதிப்பிடு செய்ய) முடிகிறது.

English is an asset in MNC's.The higher you move in your career ladder the more you will realize this.English is THE business language.To repeat a point (ஆங்கிலம் மொழி..தகுதி அல்ல போன்ற சண்டைகளுக்கு இங்கே எனக்கு நேரமில்லை.)

(தொடரும்...)

24 Comments:

நாமக்கல் சிபி said...

$elvan,
மிக்க நன்றி. இனி என்னோட பதிவுகளில் இந்த லிங்கையும் கொடுத்துவிடுகிறேன்.

நானும் ஒரு காலத்தில ஆங்கிலத்தில் பேசுபவர்களை எல்லாம் கலாய்த்தவன் தான். ஆனால் இன்று நிலைமை வேறு. ஆங்கத்தில் நன்றாக பேச முடியும் என்ற நம்பிக்கையே நம்மை பல இடங்களில் தகுதியுள்ளவர்கள் என்ற நிலைமையை உருவாக்கித் தருகிறது.

Unknown said...

உண்மை பாலாஜி.நம் ஊர் அரசியலில் ஆங்கிலம் பலியாகிவிடக்கூடாது என்ற கவலை எனக்கு எப்போதும் உண்டு.தாய்மொழிப்பற்றையும்,பிழைப்பையும் குழப்பிக்கொள்ளாமல் இருப்பவர்களே நல்ல கம்பனிகளில் சேர முடியும் என தோன்றுகிறது.

நாமக்கல் சிபி said...

எனக்கு தெரிந்து ஆங்கிலத்துல பேச தெரியாது என்ற தாழ்வு மனப்பான்மையிலே வேலை வாய்ப்பை இழந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு தன்னம்பிக்கை வர வைக்க நாட்கள் பத்தாது. மாத கணக்கில் ஆகும். அப்போழுது எல்லாம் அந்த பசங்க படர கஷ்டத்தைப் பார்த்தா நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.

ஒரு இண்டர்வியூ வந்தாலே பயந்து நடுங்குவார்கள். இண்டர்வியூவிற்கு முதல் நாள் அவர்களுடன் 1 மணி நேரமாவது செலவிட வேண்டியதிருக்கும்.

நீங்க தொடர்ந்து எழுதுங்க! நானும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

Unknown said...

பாலாஜி
நான் கல்லூரியில் படிக்கும்போது புராஜக்ட் வர்க்குக்கு ஒரு வங்கி மானேஜரை எங்கள் கல்லூரி மாணவர்கள் நால்வர் அணுகினர்.வரவேற்று ஆங்கிலத்தில் பேசி,விளக்க ஆரம்பித்துவிட்டார்.அவர் சொல்வது என்ன என நால்வருக்கும் புரியவில்லை.திரு,திரு என விழித்து திடீரென சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து ஓடிவந்து விட்டனர்.

வங்கி மானேஜர் வாயடைத்து போய் கல்லூரிக்கு போன் செய்து ஆசிரியரை பிடித்து பரேடு கிளப்பி விட்டார்.

எங்கே போய் முட்டிக்கொள்ள?

Anonymous said...

புதிதாக கல்லூரிகளில்/பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் மாணவர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பயிற்சிகளைத் தான் முடித்திருப்பார்கள். ஆனால் அவ்வாறான இருவர் ஒரு வேலைக்கு தங்கள் அனுப்பும் போது ஒருவரை மட்டும் நேர்முகத் தேர்வுக்கு கூப்பிரானுவ. எனுங்க அது?
ஒரு கூட்டதில் பேசுவதில் உள்ள தயக்கம், கூச்சம், பயம் பேன்றவற்றை இல்லாதொழிப்பது எவ்வாறு?

Anonymous said...

"ஆங்கத்தில் நன்றாக பேச முடியும் என்ற நம்பிக்கையே நம்மை பல இடங்களில் தகுதியுள்ளவர்கள் என்ற நிலைமையை உருவாக்கித் தருகிறது. "


என் அந்த தாழ்வுச் சிக்கல்?

Unknown said...

//புதிதாக கல்லூரிகளில்/பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் மாணவர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பயிற்சிகளைத் தான் முடித்திருப்பார்கள். ஆனால் அவ்வாறான இருவர் ஒரு வேலைக்கு தங்கள் அனுப்பும் போது ஒருவரை மட்டும் நேர்முகத் தேர்வுக்கு கூப்பிரானுவ. எனுங்க அது? //

Good question.

சில காரணங்கள்

1.வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளுதல்.அந்த இன்டர்வியூ வரப்போவது முன்பே தெரிந்து,தயாராக இருந்து,முதலில் போய் வரிசையில் நின்று வாய்ப்பு பிடிப்பது.

2.அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பது,கல்லூரி ஆசிரியரால் பரிந்துரைக்கப்பட்டிருப்பது.பல கல்லூரிகளில் இன்டர்வியூவுக்கு வருபவர்கள் பழைய மாணவர்களாக இருப்பர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது.

//ஒரு கூட்டதில் பேசுவதில் உள்ள தயக்கம், கூச்சம், பயம் பேன்றவற்றை இல்லாதொழிப்பது எவ்வாறு? //

This question merits a seperate post.Dont know when I will do it,but will defenitely do so in near future.

Unknown said...

//என் அந்த தாழ்வுச் சிக்கல்?//

தெரியலை.ஆனால் நிஜம் அதுதான்.

நாமக்கல் சிபி said...

//என் அந்த தாழ்வுச் சிக்கல்?//
நான் ஆங்கிலத்துக்கு குடை பிடிக்கிறேன் என்று நினைக்காதீர்கள். நான் கண்டவரை உள்ள நிலைமையை சொல்கிறேன்.

மொழி என்பது நம் எண்ணத்தை அடுத்தவருக்கு புரிய வைக்க உதவும் ஒரு கருவி (tool). அந்த கருவியை நீங்கள் பயன்படுத்துவதை பொருத்துத்தான் உங்களுடைய மேலதிகாரிக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரும்.

உதாரணத்திற்கு,
உங்கள் பிராஜக்ட்டிற்கு புதிதாக 2 பேர் சேர்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு பிராஜக்ட்டைப் பற்றி விளக்க வேண்டும் (Knowledge transfer). நீங்க அதற்கே பேச தெரியாமல் திணறினால், உங்களை அடுத்த லெவல் மீட்டிங்கிற்கு அனுப்ப மாட்டார்.

அதுவே உங்களைவிட ஒருவர் சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் அவர் நன்றாக பேசினால் அவரைத் தான் அனுப்புவார்கள். இது நான் Software Industryla நேரில் பார்த்த நிகழ்ச்சி.

its a basic requirement.

Unknown said...

ஆங்கிலம் தான் பிசினஸ் மொழி.அதை மறுக்க முடியாது.அது ஏன் அப்படி என கேட்டால் தெரியாது..உண்மை அப்படித்தான் இருக்கிறது.மேலும் இந்த பதிவு அதைப்பற்றியது அல்ல.

Requote

To repeat a point (ஆங்கிலம் மொழி..தகுதி அல்ல போன்ற சண்டைகளுக்கு இங்கே எனக்கு நேரமில்லை.)

Hariharan # 03985177737685368452 said...

செல்வன்,

உங்கள் மாதிரி வெற்றியடைந்த நபர்கள், மண்ணின் மைந்தர்கள் வெற்றியடைந்த வழிகள் நம் அடுத்த கட்ட வேலை தேடும் தமிழ் இளைஞர்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

ஆங்கில அறிவு என்பது பிழைப்பதற்கு மிக மிக அவசியமானது. முதலில் நாம் பிழைத்திருந்தால் தான் நமது தமிழ் மொழியைப் பிழைத்திருக்கச் செய்யமுடியும்.

வலைப்பூக்களில் இம்மாதிரியான வழிகாட்டுப் பதிவுகளுக்கு எனத் தனியான பிரிவாக்கி லிங்க் தந்தால் எளிதாக தேவைப்படுவோர் படித்துப் பயன் பெறலாம்.

இளம் வயது மாணாக்கர்களுக்கு, வேலைதேடுவோர்க்கு, மிகவும் பயனுள்ள பதிவுகள்.

வாழ்த்துக்கள்.

Unknown said...

நன்றி ஹரிஹரன்,

எத்தனைக்கெத்தனை திறமைகள் நம்மிடம் உள்ளனவோ அது நமக்கு தான் பிளஸ் பாயின்டாக வந்து முடியும்.ஆங்கிலம் தெரிவது கண்டிப்பாக நல்ல பிளஸ்பாயின்ட்.அது தெரியாதது சில சமயம் வாழ்வையே பாதிக்கும்.மொழிப்பற்றை இதில் குழப்பிக்கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும்.

Unknown said...

Dear Ram,

If many people want it,I will defenitely do so.I have exams in september.After it if people really want it,I will defenitely do so

anbudan
selvan

Unknown said...

வாழ்த்துக்கு நன்றி ராம்பிரசாத்,

பரிட்சை முடிந்தபின் அக்டோபர் மாதம் இதுபற்றி ஒரு தொடர் எழுதுகிறேன்.மக்கள் அளிக்கும் வரவேற்பை பொறுத்து தனிபதிவு நிச்சயம் துவக்குகிறேன்

அன்புடன்
செல்வன்

நாமக்கல் சிபி said...

//மக்கள் அளிக்கும் வரவேற்பை பொறுத்து தனிபதிவு நிச்சயம் துவக்குகிறேன்//

கண்டிப்பா உங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். தியரிட்டிக்கலா இல்லாமல் பிராக்டிக்கலாக எழுதினால் எல்லோருக்கும் பயனளிக்கும்...

//I have exams in september.//
All the Best.

Unknown said...

Thanks balaji

Will defenitely do so

anbudan
selvan

குமரன் (Kumaran) said...

நல்ல தொடர் செல்வன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆங்கிலப் பதிவு தொடங்குவதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் அதனை தமிழ்மணத்தில் இணைக்க முடியுமா? அது தமிழ்ப்பதிவாகவே வைத்து ஆங்கிலச் சொற்களுக்கு, ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு என்று எடுத்துக் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். விரைவில் தொடங்குங்கள். முடிந்தால் நானும் சேர்ந்து கொள்கிறேன். நிறைய கற்றுக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். :-)

செப்டம்பர் தேர்வுக்கு வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

நல்ல தொடர் செல்வன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆங்கிலப் பதிவு தொடங்குவதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் அதனை தமிழ்மணத்தில் இணைக்க முடியுமா? அது தமிழ்ப்பதிவாகவே வைத்து ஆங்கிலச் சொற்களுக்கு, ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு என்று எடுத்துக் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். விரைவில் தொடங்குங்கள். முடிந்தால் நானும் சேர்ந்து கொள்கிறேன். நிறைய கற்றுக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். :-)

செப்டம்பர் தேர்வுக்கு வாழ்த்துகள்.

Unknown said...

குமரன்

அது ஆங்கிலம் சொல்லித்தரும் பதிவாக இராது.எனக்கு ஆங்கில இலக்கணமோ,தமிழ் இலக்கணமோ தெரியாது:-)

கம்யூனிகேஷன் ஸ்கில்,மேடைப்பேச்சு,எழுத்துத்திறன் ஆகியவற்றை மட்டுமே எழுதலாம் என இருக்கிறேன்.

தமிழ்பதிவிலேயே தான் எழுதுவேன்.நிச்சயம் நீங்கள் எல்லாரும் உதவவேண்டும்

அன்புடன்
செல்வன்

நாமக்கல் சிபி said...

//கம்யூனிகேஷன் ஸ்கில்,மேடைப்பேச்சு,எழுத்துத்திறன் ஆகியவற்றை மட்டுமே எழுதலாம் என இருக்கிறேன்.
//
$elvan,
உங்களோட அடுத்த பரிணாமத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

Unknown said...

Thank you balaji.I hope everything goes on well.

கால்கரி சிவா said...

ஆங்கிலம் நன்றாக பேச ஆங்கிலத்தில் யோசிக்கவேண்டும். இது நான் கற்ற முதல் பாடம்.

Unknown said...

ஆம் சிவா,

ஆங்கிலம் சரளமாக பேசதுவங்க அது சிறந்த வழி.ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் அதன்பின் பழகிவிடும்.

Vaikunth said...

செல்வன் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

//ஆங்கிலம் தான் பிசினஸ் மொழி.அதை மறுக்க முடியாது.அது ஏன் அப்படி என கேட்டால் தெரியாது//

காரணம் இந்தியாவில பல பல மொழிகள் இருக்கு எல்லாருக்கும் பொதுவானது ஆங்கிலம். இப்ப நான் வேலை செய்யும் இடத்தில் பல மொழிகள் பேசும் பலர் இருக்கிறார்கள் எல்லாருக்கும் பொதுவான மொழி ஆங்கிலமே. இந்தியா மட்டுமல்ல உலகிற்கே பொதுவானது பலருக்கும் புரியும் மொழி ஆங்கில்மே. அதனால்தான் என்று நினைக்கிறேன்.

நானும் எது சிறந்த மொழி என்று வாதிடும் விளையாட்டுக்கு வரவில்லை :)