Thursday, July 06, 2006

6.கோடிகளை குவிப்பது எப்படி?

எங்கள் வீட்டுக்கு ஒரு நாள் என் அப்பாவின் பழைய நண்பர் ஒருவர் வந்தார்.நன்றாக பேசி உபசரித்தோம்.கொஞ்ச நேரம் நன்றாக பேசினார்.அதன்பின் தான் ஒரு புது பிசினஸ் ஆரம்பித்திருப்பதாகவும் தன் கூட வந்தால் விவரம் தெரியும் என்றும் சொன்னார்.சரி என போனேன்.

ஒரு பெரிய ஹால்.அதில் ஏராளமான பேர் கூடியிருந்தனர்.எல்லாரையும் புது பிசினஸ் என சொல்லி தான் அழைத்து வந்திருந்தனர்.அதன்பின் தான் தெரிந்தது அது ஆம்வழி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பிரபல கம்பனி தரும் பிசினஸ் என்று.

மீட்டிங் துவங்கியதும் ஆம்வழியில் கோடீஸ்வரரானவர் என ஒருவர் மேடை ஏறினார்.தான் இந்த கம்பனியில் சேர்வதற்கு முன் ஒரு கம்பனியில் வாட்ச்மேனாக இருந்ததை சொன்னார்.இதில் சேர்ந்த பின் இப்போது கோடீஸ்வரராகி விட்டாராம்.ஏதோ டையமண்ட் ஆகிவிட்டாராம்.கோட்,சூட் எல்லாம் போட்டிருந்தார்.

இந்த கம்பனியில் சேர்ந்து எப்படி பணக்காரராகலாம் என ஒரு கணக்கு சொன்னார்.அதாவது 5000 ரூ கட்டி உறுப்பினராக வேண்டும்.அதன்பின் நமக்கு கீழே 4 பேரை சேர்க்க வேண்டும்.உடனே நமக்கு அவர்கள் கட்டிய 20000ல் இருந்து ஒரு தொகை கிடைக்கும்.அதன்பின் அந்த 4 பேரும் தலைக்கு 4 பேரை பிடிக்க வேண்டும்.அந்த தொகையில் நமக்கும் ஒரு பங்கு வரும்.நாம் நியமித்தவர்களுக்கு கீழ் எத்தனை பேர் சேர்கிறார்களோ அத்தனை லாபம் நமக்கு கிடைக்கும்.இந்த முறையின் பெயர் MLM (Multi level marketing)என்பதாகும்.

ஒரு சின்ன கணக்கு போட்டதும் இது போகாத ஊருக்கு வழி என அப்போதே தெரிந்துவிட்டது.எப்படி சொல்கிறேன் என பாருங்கள்.

நான் (1)
எனக்கு கீழே நாலு பேர் (4)
அவர்களுக்கு கீழே 4 (16)
அவர்களுக்கு கீழே 4 (64)

இப்படி போகும் பிரமிட் எங்கே போகிறதென்று பாருங்கள்

1
4
16
64
256
1000
4000
16000
64000 (9வது ரவுண்டில் ஒரு நகரமே இந்த சங்கிலியில் இணையவேண்டும்)
240,000
10 லட்சம்
40 லட்சம்
1.6 கோடி
4 கோடி
16 கோடி
64 கோடி
240 கோடி
1000 கோடி

தியரிட்டகலாக பார்த்தால் 1 ரவுண்டில் ஒரு நபரோடு துவங்கிய ஆட்டம் 17வது ரவுண்டில் முழு உலகத்தில் வந்து நிற்கிறது.இத்தனை நபர்களை உறுப்பினராக சேர்ப்பது காரிய சாத்தியமே இல்லை.இந்த சங்கிலி 12 அல்லது 13வது ரவுண்டை தாண்டி வளராது.

1000 கோடி பேரை நீங்கள் கோடீஸ்வரராவீர்கள் என ஆசை காட்டி சேர்த்து விட்டிருப்பார்கள்.ஆனால் கோடிஸ்வரராபவர்கள் 1000 பேர்தான்.1000 கோடி பேர் சேர்ந்தால் கூட ஆயிரம் பேருக்கு மேல் கோடிஸ்வராராக முடியாது(சின்ன கனக்குதான்.1000 கோடியை ஆயிரத்தால் வகுத்தால் கிடைப்பது 1 கோடி)மீதம் அத்தனை பேருக்கும் கிடைப்பது நெய்மணக்க கிண்டிய திருநெல்வேலி அல்வா தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ?இது எப்பேர்ப்பட்ட ஏமாற்று வேலை என்பது தெரிகிறதா?

ஆக பழுதடைந்த,வேலை செய்யவே செய்யாத இந்த பிசினஸ் மாடலை வைத்துக்கொண்டு கோடிஸ்வராவீர்கள்,டையமண்ட்,எமெரால்ட் என சொல்லி மக்களை மடையர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆம்வழியை போல் பல கம்பனிகள் புற்றிசலாய் கிளம்பின.சிம்பயோனிக்,காந்த படுக்கை கம்பனி,ஸ்கைவே என பல கம்பனிகள் கிளம்பி மக்கள் காசை சூறையாடின.

சட்டப்படி இது செல்லுபடியாக்கூடிய மாடல் என்பதை சொல்லியாக வேண்டும்.ஏனென்றால் இவர்கள் விவரமாக ஒரு விஷயத்தை கோர்ட்டில் சொல்லி விட்டார்கள்.அதாவது 5000 ரூபாய் வாங்கிக்கொண்டு அதற்கு பதில் ஒரு கிட்டை மக்களுக்கு கொடுக்கிறோம்.மக்கள் வினியோகஸ்தர்களாக இதில் சேரவேண்டியதில்லை.உபயோகிப்பளராக சேரலாம் என்று.

ஆனால் இவர்கள் மக்களை சேர்ப்பதே "கோடிஸ்வராகலாம்.வாருங்கள்" என்றுதான்.

ஏமாறீதீர்கள் மக்களே.MLM என்பது போகாத ஊருக்கு காட்டும் வழி

15 Comments:

dondu(#11168674346665545885) said...

சமீபத்தில் 1956ல் என் அன்னையின் தோழி ஒருவர் இம்மாதிரி ஒரு திட்டத்தில் தான் சேர்ந்து கொண்டு அவரையும் சேருமாறு படுத்தினார். என் தந்தை அதெல்லாம் நடக்காத காரியம் என்று விரட்டி விட்டார். பிறகு ஒரு நாள் என்னுடன் இது பற்றிப் பேசுகையில் தான் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதை விளக்கினார்.

ஆனால் நீங்கள் சொல்வது போல கணக்கெல்லாம் போட்டு அல்ல. அவர் சிந்தனை தெளிவாக இருந்தது. இம்மாதிரி திட்டங்கள் பலவற்றை அவர் தன் சிறுவயதிலிருந்தே பார்த்து வந்திருக்கிறார். அதில் வெகு சிலரே லாபம் அடைந்தனர் பலர் நஷ்டப்பட்டனர். அவருக்கு இரண்டில் எந்தக் குழுவிலும் இருக்க விருப்பமில்லை அவ்வளவே.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு மிகவும் பரிச்சயமான ஆனால் நான் இதுவரை நேரில் சந்திக்காத ஒருவர் இந்தத் திட்டத்தில் ஒரு பணமும் போடாமல் ஆறே மணி நேரத்தில் 3600 ரூபாய் சம்பாதித்தார். எப்படி?

ஒரு பெரிய மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனிக்கு அமெரிக்கர் ஒருவர் ப்ரசெண்டேஷனூகு வந்த போது நான் குறிப்பிட்ட நபர் தேவைப்பட்டார். அவர்தான் மொழிபெயர்ப்பாளர் டோண்டு ராகவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

லட்சக்கணக்காணோர் இதை நம்பி வியாபாரம் செய்கிறார்கள்.அவர்கள் எல்லாம் முட்டாள்களா? :))
ஹிஹி ச்சும்மா சொன்னேன்...

செல்வன்,

உங்கள் கணக்கு சூப்பர்.அதைவிட சூப்பர் நடுநடுவில் நீங்க போட்ட காமெண்ட்டுக்கள்.

போகாத ஊருக்கு வழி..

9 ரவுண்ட்டில் ஒரு நகரமே..

நெய் மணக்க கிண்டிய....

புதுமை விரும்பி said...

/1000 கோடி பேரை நீங்கள் கோடீஸ்வரராவீர்கள் என ஆசை காட்டி சேர்த்து விட்டிருப்பார்கள்.ஆனால் கோடிஸ்வரராபவர்கள் 1000 பேர்தான்.1000 கோடி பேர் சேர்ந்தால் கூட ஆயிரம் பேருக்கு மேல் கோடிஸ்வராராக முடியாது(சின்ன கனக்குதான்.1000 கோடியை ஆயிரத்தால் வகுத்தால் கிடைப்பது 1 கோடி)மீதம் அத்தனை பேருக்கும் கிடைப்பது நெய்மணக்க கிண்டிய திருநெல்வேலி அல்வா தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ?இது எப்பேர்ப்பட்ட ஏமாற்று வேலை என்பது தெரிகிறதா?
/

செல்வன்

ஒரு சின்ன திருத்தம். நீங்கள் சொன்ன கணக்கு சரியே - அதாவது ஒவ்வொருவரும் ஒரு ரூபாய் கொடுத்து உறுப்பினராக மாறும் போது. ஆனால் நீங்கள் கூறிய படி Rs 5000 கொடுத்து உறுப்பினராக மாறும்போது கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1000 அல்ல - மாறாக 5000000 (5 கோடி!). சரிதானே? தவறு இருந்தால் குறிப்பிடுங்கள்.

கூத்தாடி said...

நம்ம ஊருக்க்கும் வந்து படுத்த ஆரம்ப்பிச்சிட்டானுங்களா ..

இங்க யாரவது இந்தியர்கள் கடைகளில் சிரித்தாலே பய்நதுபோய் ஒடிகிட்டிருக்கோம் ..

கூத்தாடி said...

நம்ம ஊருக்க்கும் வந்து படுத்த ஆரம்ப்பிச்சிட்டானுங்களா ..

இங்க யாரவது இந்தியர்கள் கடைகளில் சிரித்தாலே பய்நதுபோய் ஒடிகிட்டிருக்கோம் ..

Sivabalan said...

செல்வன்

நல்ல பதிவு.

நம்ம ஈரோட்டில் நிறைய பேர் இதில போய் விழுந்திருக்கிறார்கள்.

நன்றி.

Unknown said...

டோண்டு ஐயா

உங்கள் தந்தை common sense பயன்படுத்தி செயல்பட்டுள்ளார்.பல சமயங்களில் common sense கணக்கு போட்டு செயல்படுவதை விட மிகுந்த பயன் தரும்.

//மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு மிகவும் பரிச்சயமான ஆனால் நான் இதுவரை நேரில் சந்திக்காத ஒருவர் இந்தத் திட்டத்தில் ஒரு பணமும் போடாமல் ஆறே மணி நேரத்தில் 3600 ரூபாய் சம்பாதித்தார். எப்படி?
//

இந்த குறும்பு தான் உங்கள் டிரேட் மார்க்கே:-)))

உலகம் பூரா மக்கள் காசை இப்படி திருடுகிறார்கள்.அவர்களிடம் 3600 இல்லை,30,000 வாங்கியிருக்க வேண்டும் நீங்கள்.

Unknown said...

நண்பரே முத்து

நான் கிண்டலாக இவர்களை பற்றி எழுதினாலும் இவர்களால் உண்மையில் வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம்.5000 ரூபாய் தானே பிடுங்குகிறார்கள் என நினைப்போம்.ஆனால் இதை நம்பி வேலையை விட்டு ஊர் முழுக்க சுற்றி கெட்ட பேர் வாங்குபவர்கள் உண்டு.இந்த கம்பனியில் சேர்ந்த பலர் தம் நண்பர்கள்,சொந்தக்காரர்கள் என பலரிடமும் இதில் சேர நச்சரித்து கடைசியில் அவர்கள் இவரை கண்டாலே தலைதெறிக்க ஓடும் நிலைமைக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.

எதை எதையோ தடை செய்கிறார்கள்.இந்த MLM இன்னும் தடை செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்களே?

//உங்கள் கணக்கு சூப்பர்.அதைவிட சூப்பர் நடுநடுவில் நீங்க போட்ட காமெண்ட்டுக்கள்.//

மிக்க நன்றி

அன்புடன்
செல்வன்

Unknown said...

புதுமை விரும்பி,

பிழையை சுட்டி காட்டியதற்கு நன்றி.சரியான கணக்கு இதோ

1000 கோடி பேர் இதில் தலைக்கு 5000 கட்டி சேர்ந்தால் சேர்ந்தால் திரளும் தொகை 50000000000000 (ஐம்பது லட்சம் கோடி)

இந்த முழு தொகையும் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டால் அதிகபட்சம் 50 லட்சம் கோடீஸ்வரர்கள் உருவாவார்கள்.

ஆனால் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இதில் திரளும் தொகையில் 50 முதல் 75% கம்பனிக்கு போய்விடும்.மீதமிருக்கும் 25% தான் உறுப்பினர்களுக்கு கிடைக்கும்.அதிகபட்சம் பார்த்தால் 25 லட்சம் கோடிஸ்வரர்கள் உருவாவார்கள்.

(ஆனால் 1000 கோடி பேர் என்பது உலகில் தற்போதைய ஜனத்தொகையை விட இரு மடங்கு அதிகம்.எப்படி பார்த்தாலும் உலகில் உள்ள குடும்பங்கள் அனைத்துக்கும் ஒருவர் என சேர்த்தாலும் 100 கோடி பேருக்கு மேல் ஆட்களை சேர்க்கவே முடியாது.இந்த எண்ணிக்கையே மிக அதிகம்.)

1000 கோடி என்ற குத்து மதிப்பான எண்னை வைத்து சொல்வதானால் 25 லட்சம் பேர் கோடிஸ்வரர்களாக மீதமுள்ள 999 கோடியே 75 லட்சம் பேர் கையில் ஆம்வழி கிட்டுடன் திரு திரு என முழித்தபடி நின்றிருப்பார்கள்.அவர்கள் யாரையும் புதிதாக சேர்க்கவே முடியாது.அனைவரும் சேர்ந்து விட்டார்களே?

கம்பனிக்காரன் ஜாலியாக இருப்பான்.25 லட்சம் பேர் ஜாலியாக இருப்பார்கள்.மீதமுள்ள 99.99% பேர் இளிச்சவாயர்களாக இருப்பார்கள்.

Unknown said...

கூத்தாடி
நம்ம ஊருக்கு எப்பவோ வந்தாச்சு.இந்தியாவில் 600 கோடி ரூபாய் அளவு இவர்கள் பிசினஸ் நடக்கிறதாம்.

சீனாவில் இதற்கு தடை விதித்து விட்டார்கள்.நம்மூரில் இன்னும் தடுக்கவில்லை

Unknown said...

ஆமாம் சிவபாலன்

இந்தியாவில் இவர்களுக்கு மிகப்பெரும் மார்க்கட் ஈரோடு தான் என்கிறார்கள்.ஈரோட்டில் ஸ்கைவே என்று ஒரு கம்பனி புகுந்து ஒரு கலக்கு கலக்கியதாம்.வீட்டுக்கு ஒரு கிட் வைத்திருக்கிறார்களாம் ஈரோட்டில்

நல்லவேளை கோவை தப்பியது:-))

Sivabalan said...

செல்வன், கோவையில் நம்ம எல்லாம் இருக்கறதால யோசிச்சிட்டு வராமல் விட்டுட்டாங்கன்னு நினைகிறேன்.

Unknown said...

here comes 14

Unknown said...

//செல்வன், கோவையில் நம்ம எல்லாம் இருக்கறதால யோசிச்சிட்டு வராமல் விட்டுட்டாங்கன்னு நினைகிறேன்//

ha..ha..:-)))

Both of us are not in kovai.:-))))

Manivannan said...

Amவழி-யில் ஆட்களை சேர்ப்பதால் மட்டும் பணம் வராது. பொருட்கள் நகர்ந்தால் மட்டுமே பணம் வரும்.