Sunday, July 23, 2006

12.காஷ்மீர்:பாகிஸ்தானின் தேசிய அவமானம்-2

1971 யுத்தத்தை பற்றியும் அதன் காரணங்களைப் பற்றியும் ஆராய்வது காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் காட்டும் முனைப்பை புரிந்துகொள்ளவும் பாகிஸ்தானால் காஷ்மீரிகளுக்கு காத்திருக்கும் ஆபத்தையும் புரிந்து கொள்ள உதவும் என்பதால் 1971 யுத்தத்தை பற்றியும் அதற்கான விளைவுகள்,காரணங்கள் பற்றியும் ஆராய்வோம்.

ஒரே மதம்,ஒரே தேசம் என அண்ணன் தம்பிகளாய் வாழ்ந்த வங்கதேசத்தவர்க்கும்,பாகிஸ்தானியருக்கும் மோதல் ஏற்பட்டது ஏன்?வங்கதேசத்தவருக்கு பாகிஸ்தானால் நடந்தது நாளை (காஷ்மீர் பாகிஸ்தானில் இணைந்தால்) பாகிஸ்தானால் காஷ்மீரிகளுக்கு நடக்காது என்பதற்கு உறுதிமொழி என்ன?

மோதல் ஏன் நடந்தது என்பதற்கு போகுமுன்,காஷ்மீர் வங்கதேசம் இடையே உள்ள ஒற்றுமையை காணும் முன் பாகிஸ்தானால் "வங்கதேசத்தவருக்கு நடந்தது என்ன" என்பதை முழுமையாக ஆராய்வோம்.

டான் எனும் பாகிஸ்தானின் முண்ணனி பத்திரிக்கை 1971ல் வங்கதேசத்தவருக்கு பாகிஸ்தானால் நடந்த அட்டூழியங்களை பற்றி குறிப்பிடும்போது "பாகிஸ்தானின் பெயருக்கு மாறாத கேவலம் ஏற்பட்டுவிட்டது" என வேதனையுடன் குறிப்பிடுகிறது.இது "பாகிஸ்தான் எனும் தேசத்துக்கு அசிங்கம்" (A nation's shame) என மன வேதனையுடன் பாகிஸ்தானிய பிரிகேடியர் F.B.அலி தனது கட்டுரையில் குறிப்பிட்டு கண்ணீர் வடிக்கிறார்.

தமது சகோதரரும்,ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புமான அன்றைய வங்கதேசத்தவருக்கு பாகிஸ்தான் அரசு செய்த ரணகொடூரங்களை நன்மனம் கொண்ட நேர்மையான பாகிஸ்தானிய ஜெனெரல்கள்,மக்கள்,பத்திரிக்கையாளர் என அனைவரும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

வங்கதேசத்தில் 1971ல் என்ன தான் நடந்தது?

1971 பாகிஸ்தானின் அவமானச்சின்னம் என பாகிஸ்தானிய பத்திரிக்கையான பாக்டுடே தெரிவிக்கிறது.அந்த போரில் தோற்றதற்காக இப்படி சொல்லவில்லை.வங்கதேசத்தவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக பாகிஸ்தானிய ராணுவம் கட்டவிழ்த்து விட்ட இனப்படுகொலை காரணமாகத்தான் அப்படி பாக்டுடே குறிப்பிடுகிறது.


போரில் வெல்வதும்,தோற்பதும் சகஜம்.போரில் தோற்பது என்பது அனைத்து நாடுகளுக்கும் நடைபெறக்கூடியதுதான்.ஆனால் லட்சக்கணக்கானோரை இன அழிப்பு செய்த நாடு எனும் பெயர் வாங்குவது அந்த தேசத்துக்கே அவமானம் இல்லையா?அப்படி ஒரு அவமானம் தான் 1971ல் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது.வங்கதேசத்தில் 1971ல் பாகிஸ்தானிய ராணுவம் நடத்திய அட்டூழியங்களை தலைகுனிவுடனும்,வெட்கத்துடனும் பாக்டுடே பின்வருமாறு தெரிவிக்கிறது.

"267 நாட்கள் பாகிஸ்தானிய ராணுவம் பங்களாதேஷில் வெறியாட்டம் ஆடியது.டாக்காவில் மட்டும் 100,000 பங்களாதேஷிகள் கொல்லப்பட்டனர்.குல்னா மாவட்டத்தில் 150,000 பேரும்,ஜெசோரில் 75,000 பேரும்,கோமிலாவில் 95,000 பேரும் சிட்டகாங்கில் லட்சம் பேரும் கொல்லப்பட்டனர்.மொத்தமாக 18 மாவட்டங்களில் 1,247,000( 12.50 லட்சம்) பேர் கொல்லப்பட்டனர்.இது குறைந்த பட்ச கணக்குதான்.உண்மை கணக்கு இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்."

பாக்டுடே இந்த இன அழிப்பை பற்றி மேலும் கூறுவதாவது...

"வங்கதேசத்தில் வாழ்ந்த 25 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் இந்த இன அழிப்பு நடந்தது.ஒப்பிட்டால் நாஜி தளபதி ரோமல் 300,000 பேரை மட்டுமே கொன்றான்.ஸ்டாலின்,மாவோ ஆகிய கொலைகார அரசுகள் கொன்று குவித்தவர்களைவிட அதிக படுகொலைகள் செய்த அரசாக -யாகியாகான் அரசு விளங்கியது.." என கண்ணீர் வடிக்கிறது பாக்டுடே.

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்துக்கு எல்லையே இல்லை.இதுவரை வரலாற்றில் நிகழ்ந்த கூட்ட கற்பழிப்புகளில் முதலிடம் வகிப்பது வங்கதேசத்தில் பாகிஸ்தானிய ராணுவம் நிகழ்த்திய கற்பழிப்புகள்தான் என ரேப் ஆப் நான்கிங்(Rape of Nanking) புத்தகத்தை எழுதிய ஐரிஸ் சாங் அதிர்ந்து போய் குறிப்பிடுகிறார்.ஜென்டெர்சைட் எனும் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்கும் இயக்கம் வங்கதேச கற்பழிப்புகளை பற்றி குறிப்பிடுவதாவது.

"..கூட்டம் கூட்டமாக சேர்ந்து வங்கதேச பெண்களை கற்பழிப்பது,அதன் பின் கொலை செய்வது பாகிஸ்தானிய ராணுவத்துக்கு சகஜமாகிவிட்டது.வங்கதேசத்தில் அவர்கள் நடத்திய கற்பழிப்புக்கள் ஹிட்லரின் ஜெர்மனி இரண்டாம் உலகப்போரின்போது ரஷ்யாவில் நடத்தியதற்கு சற்றும் குறைந்ததல்ல.கிட்டத்தட்ட 4 லட்சம் பெண்கள் கூட்டமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டனர்.(2 அல்லது 3 லட்சம் என்றும் தகவல்கள் உண்டு).."

இந்த கற்பழிப்புகளுக்கு எந்த வயது வித்யாசமும்,மத பாகுபாடும் இல்லையாம்.8 வயது குழந்தை முதல் 75 வயது மூதாட்டி வரை இந்த வேட்டை நாய்களால் குதறப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர் என்கிறது ஜென்டெர்சைட்.பெண்களை கற்பழிப்பதோடு நிறுத்தாமல் அவர்களை ராணுவ முகாமுக்கு தூக்கிப்போய் வேண்டும்போது மீண்டும்,மீண்டும் பலாத்காரம் செய்வது நடந்தது என கண்ணீர் வடிக்கிறது ஜென்டெர்சைட் அமைப்பு.

இந்த கற்பழிப்புக்களை கண்டு கண்ணீர் வடித்த வங்கதேசத்தந்தை முஜிபுர் -ரஹ்மான் கற்பழிக்கப்பட்ட பெண்கள் தேசபக்த வீராங்கனைகள் என அறிவித்து அவர்களை சமூகத்தில் இணைக்க முயற்சித்தார்.ஆனால் பழமையில் ஊறிய வங்கதேச ஆண்கள் அப்பெண்களை ஏற்றுக்கொள்ள முன்வரவே இல்லை என்கிறது ஜென்டெர்சைட் அமைப்பு.

இது முழுக்க,முழுக்க பாகிஸ்தானிய சர்வாதிகாரி யாஹியா கானின் தூண்டுதலில் தான் நடந்தது என்கிறது ஜென்டெர்சைட்."30 லட்சம் பேரை கொல்லுங்கள்" என நேரடியாக அவர் உத்தரவிட்டாராம்.

வரலாற்றசிரியரான ராபர்ட் பெயின் இந்த கொலைகளுக்கும்,இன அழிப்புக்கும் குற்றம் சாட்டுவது அப்போதைய பாகிஸ்தான அரசை நடத்திய அனைவரையுமே.ஜனாதிபதி -யாஹியாகான்,ஜெனெரல் டிக்காகான்,ஜெனெரல் பிர்சாடா,ஜெனெரல் உமர்கான் மற்றும் உளவுத்துறைத்தலைவர் அக்பர்கான் ஆகியோரே இதற்கு பொறுப்பு என்கிறார் ராபர்ட் பெயின்.

இந்தியா வங்கதேசத்துக்கு வாழ்வையும்,விடுதலையையும் மீட்டுத்தந்தது.ஆனால் இந்த படுகொலையை நிகழ்த்திய மிருகங்கள் எந்த தண்டனையையும் அனுபவிக்கவில்லை.ஜெனெரல் அபுதுல்லா நியாசி தன் 84வது வயதில் 2004ம் ஆண்டு தான் இறந்தான்.நியாசி ஒரு அவமானமாக பாகிஸ்தானில் கருதப்பட்டான்.காரணம் அவன் நடத்திய கொலைகள் அல்ல.இந்திய ஜெனெரல் ஜெகஜித்சிங் அரோராவிடம் சரணடைந்து அந்த போட்டோ பத்திரிக்கைகளில் வந்ததுதான் காரணம்.ஜெனெரல் அஷ்ரபும்கான் தற்போது நியூயார்க்கில் சவுக்கியமாக தொழில் செய்து வாழ்க்கை நடத்துகிறாராம்.

(தொடரும்..)

காஷ்மீர்:பாகிஸ்தானை வெல்லுமா இந்தியா? - 1

7 Comments:

நாமக்கல் சிபி said...

$elvan,
பாகிஸ்தான் முஸ்லிம்களும், வங்க தேச முஸ்லிம்களும் வேறு இனமா?
ஒரே இனமாக இருந்தால் இந்த படுகொலைகளுக்கு காரணம் என்ன?

Unknown said...

பாலாஜி,

இதற்கு முதல் காரணம் மொழி.வங்கதேசத்தவரும்,பாகிஸ்தானியரும் பேசியவை வேறு வேறு மொழிகள்.இன்னொரு காரணம் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த தொலைவு.மூன்றாம் காரணம் பாகிஸ்தானிய ராணுவம் அரசியலில் புகுந்தது.

இதைப்பற்றி விரிவாக எழுதுகிறேன்.நன்றி

K.R.அதியமான் said...

Pls see this :

http://www.logosjournal.com/issue_4.1/singh.htm

G.Ragavan said...

பாகிஸ்தானியர்களும் பங்களாதேசிகளும் ஒரே மதம். ஆனால் வெவ்வேறு இனம். பங்களாதேசிகள் பேசும் மொழி வங்காளம். பாகிஸ்தானில் உருது என்று நினைக்கிறேன். இருவருடைய பண்பாடுகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் இலக்கியச் செறிவும் வெவ்வேறு. இது அனைவரும் அறிந்ததுதான்.

ஆனால் பாகிஸ்தான் ராணுவம் செய்த தவறுகளைப் பற்றி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். ஒன்றிணைந்த பாகிஸ்தானில் பங்களாதேசிகள் இராணுவத்தில் இல்லாமல் இருந்தார்களா? இருந்தும் அமுக்கி வைக்கப்பட்டார்களா?

மாசிலா said...

இதுவரை கேள்விபட்டிராத செய்திகள்.

அண்டை நாடுகளில் இதுபோன்ற கொலை வெறி பிடித்த பாதகர்கள் கையில் இன்று அணு ஆயுதம் ஒரு பெரிய கேடே!

நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்கும் இப்பதிவினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி செல்வன்.

அதுசரி,
யாருங்க இந்த "செத்தான் கருணாகரன்"?

Unknown said...

//ஆனால் பாகிஸ்தான் ராணுவம் செய்த தவறுகளைப் பற்றி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். ஒன்றிணைந்த பாகிஸ்தானில் பங்களாதேசிகள் இராணுவத்தில் இல்லாமல் இருந்தார்களா? இருந்தும் அமுக்கி வைக்கப்பட்டார்களா//

ராகவன்

வங்கப்போரில் பாகிஸ்தான் ராணுவம் செய்த அராஜகம் முழுக்க சர்வதேச மனித உரிமை அமைப்புகள்,ஐ.நா சபை மற்றும் வங்கதேச மக்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.சற்று பழைய செய்தி என்பதால் இப்போதைய தலைமுறை அதை அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்த வங்கதேசத்தவர் பிரிந்து முக்திபாகினி போன்ற இயக்கங்களில் தமது நாடடுக்கு போராடினர்.ஆனால் அவர்கள் எண்ணிக்கை குறைவு.நவீன ஆயுதங்களும் கிடையாது.அதனால் தான் இந்தியா அவர்களுக்கு உதவியது

Unknown said...

நன்றி மாசிலா.வெறியர்கள் கையில் இருக்கும் அணுஆயுதம் என்றும் நமக்கு ஆபத்துதான்.இப்போதைய நிலவரத்தை பார்த்தால் பாகிஸ்தான் அணு ஆயுதத்தை தனது பிராந்தியமான வசிரிஸ்தான் மீது பிரயோகிக்க கூட செய்யலாம்.அந்த அளவுக்கு வெறி முற்றிய நாடு அது.

"செத்தான் கருணாகரன்" என்பது மன்னாதி மன்னன் படத்தில் பி.எஸ்.வீரப்பா பேசும் பாப்புலரான டயலாக்.

"அத்தான் என்ற முத்தான வார்த்தையை கேட்டு செத்தான் கருணாகரன்" என சொல்வார்:)