Tuesday, July 25, 2006

14.விண்ணில் கவுண்டர்

இந்த வார தமிழோவியத்தில் வெளிவந்த என் படைப்பு.தொகுத்தவர் நிலாச்சாரல் நிலாராஜ்

சிச்சுவேஷன்: கவுண்டரும் செந்திலும் (மட்டும்) விண்வெளி ஓடத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தொழில் நுட்பக் கோளாறு ஏற்படுகிறது.

கவுண்டரும் செந்திலும் ராக்கெட்டில் திரும்பி வருகின்றனர்.

கவுண்டர்: அடே ஆன்டெனா மண்டையா..உன்னை ஆண்டெனா மண்டையன்னு கூப்பிட்டு கூபிட்டு இப்ப நிஜமாவே உன் தலைல ஆண்டெனா முலைச்௪¢ருச்சு பாத்தியாடா?

செந்தில்: சும்மா இருங்கண்ணே... பூமில இறங்கினதும் என்னை எல்லாரும் ஹீரோன்னு கூப்பிடுவாங்க.

கவுண்டர்: உன்னை ஜீரோன்னுதாண்டா கூப்பிடுவாங்க. அடேய் பனம்பழ வாயா.. செவ்வாய் கிரகத்துல மனித குரங்கு இறங்கினா என்னாகும்ணு பாக்க உன்னை அங்கே அனுப்பி வெச்சாங்க.

செந்தில்: அண்ணே..நான் கொஞ்ச நேரம் வண்டி ஓட்டறண்ணே..

கவுண்டர்(அதிர்ச்சியுடன்): அடேய்..இது என்ன மாட்டுவண்டியாடா நீ ஓட்டறதுக்கு.. ராக்கெட்டுடா... அடேய், அதை திருப்பாதே... சொன்னா கேளு...

(செந்தில் எதையோ திருக ராக்கெட் குலுங்குகிறது..)

செந்தில்: என்னண்ணே வண்டி வெச்௪¢ருக்கீங்க?ஒண்ணுமே சரி இல்லையே?

கவுண்டர்: ஏண்டா சைக்கிள் ஹேண்டில்பாரை திருப்பற மாதிரி ராக்கெட் மோட்டரை திருப்பி விட்டுட்டையே? ராக்கெட் இந்த குலுங்கு குலுங்குதே? இப்ப என்னடா பண்றது?

செந்தில்: அண்ணே.உங்களுக்கு விஷயமே தெரியாது... நான் ஒரு சைக்கிள் மெக்கானிக். சைக்கிள் ரிப்பேர் பண்ற எனக்கு இந்த ஜுஜுபி ராக்கெட்டை ரிப்பேர் பண்ண தெரியாதா? இப்ப பாருங்க இதை சரி செய்யறனா இல்லையான்னு..

(செந்தில் கண்ட்ரோல் பேனலில் உட்கார்ந்து எதை எதையோ திருகுகிறார். கலர் கலராய் புகை வருகிறது)

கவுண்டர்: அடேய் என்ன்டா பண்றே?வண்டி சுத்தமா நின்னு போச்சேடா?

செந்தில்: அண்ணே..என்ன பிரச்சனைன்னு கண்டு புடிச்௪¢ட்டேன். ராக்கெட் சக்கரம் பஞ்ச்சர் ஆயிருக்கு. அதை ஒட்டுனா வேலை முடிஞ்சது..

கவுண்டர்: அடேய்..நிஜமாவாடா..? ராக்கெட் சக்கரம் பஞ்சர் ஆச்சுன்னு இதுவரைக்கும் சரித்திரமே இல்லையேடா?

செந்தில்: அண்ணே..விண்கல் ஏதோ பட்டு சக்கரம் பஞ்சர் ஆயிடுச்சுன்னே. நீங்க ஒரு பாத்திரத்துல தண்ணியை நிரப்பி வெளில போயி பஞ்சர் ஒட்டிட்டு வாங்க. எல்லாம் சரியாயிடும்.

கவுண்டர்: அடேய்..பஞ்சர் வாயா? ராக்கெட்டுக்கு பஞ்சர் ஒட்ட சொல்றையே..இது அடுக்குமாடா? இது நீதியாடா? நியாயமாடா?

செந்தில்: அண்ணே...இல்லைன்னா ஒண்ணு பண்ணுங்க. இறங்கி ராக்கெட்டைத் தள்ளி விடுங்க. நான் ஸ்டார்ட் பண்ணி பாக்கறேன். ஓடுதான்னு பாக்கலாம்.

கவுண்டர்: என்னது இறங்கி ராக்கெட்டை தள்ளறதா?அடேய் உன்னை கொலையே பண்ணினாலும் தப்பில்லை.

கவுண்டர் செந்திலை போட்டு மொத்து,மொத்து என மொத்துகிறார்.செந்தில் கன்ட்ரோல் பேனல் மேல் விழ, ராக்கெட்டில் மேலும் புகை வருகிறது. திடீரென ஸ்டார்ட் ஆகி பூமியை நோக்கி விரைகிறது

செந்தில்: அண்ணே..எப்படி என்னால தான ஸ்டார்ட் ஆச்சு?

கவுண்டர்: உன்னால இல்லைடா...உன்னை உதைச்சதால தாண்டா ஸ்டார்ட் ஆச்சு. இந்தா இன்னும் ரெண்டு உதை வாங்கிக்க...

(செந்திலைத் துரத்துகிறர் கவுண்டர்)

5 Comments:

நாமக்கல் சிபி said...

12க்கு அடுத்து 14 போட்ட கணக்கு இடிக்குமேனு பாத்துட்டு இருந்தேன்...

12, 12A, 14???

பாலசந்தர் கணேசன். said...

Nice article

இலவசக்கொத்தனார் said...

என்ன இவ்வளவு சிம்பிளா முடிச்சிட்டீங்க?

Unknown said...

பாலாஜி

12,13,14 என்பதற்கு பதில் 12,12ஆ,14:-))))

நன்றி பாலச்சந்தர் கணேசன்

கொத்தனார்,அது சும்மா நிலாச்சாரலுக்கு எழுதிய சின்ன கட்டுரை.தமிழோவியத்தில் பிரசுரமானது.அதை அப்படியே தூக்கி வந்து இங்கு இட்டுவிட்டேன்

ENNAR said...

நல்லவேயிருக்கு இதைக் கூட ஒரு படத்தில் எடுத்துவிடுவார்கள்