Friday, July 07, 2006

7.கோலிவுட்டில் பில்கேட்ஸ்

பில்கேட்சுக்கு போறாத காலம்.தமிழ்ப்படம் தயாரிக்க வேண்டும் என ஆசை வந்துவிட்டது.பில்கேட்ஸ் படம் எடுக்கிறார் என்றதும் அனைத்து டைரக்டர்களும் ஓடி வந்து விட்டனர்.ஒரு மீட்டிங் போட்டு கதை விவாதம் நடக்க தொடங்கியது.

பில்கேட்ஸ்:டைரக்டர்களே.பட்ஜெட் பற்றி கவலைப்படாம நல்ல கதையா ஒண்ணு சொல்லுங்க பாக்கலாம்.

ஏ.வி.எம் சரவணன்:தயவு செய்து நம்ம டைரக்டர் ஷங்கருக்கு வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இனிமேல் இவர் டைரக்ஷனில் படம் தயாரிக்க உங்களால் மட்டுமே முடியும்.எங்களால் முடியாது.

பில்கேட்ஸ்;ஷங்கர் எங்கே நல்ல கதை ஒண்ணு சொல்லுங்க பாக்கலாம்.

ஷங்கர்:கதையா?என்ன உளறீங்க?ஜென்டில்மேனிலிருந்து அன்னியன் வரைக்கும் நான் எடுத்த படம் எல்லாத்துக்கும் ஒரே கதைதானே?என்ன புதுசா கதை கேக்கறீங்க?

ஏ.வி.எம் சரவணன்:(மனசுக்குள்)அடப்பாவி.அப்புறம் எதுக்கு எங்கிட்ட சிவாஜி கதை டிஸ்கஷன்னு சொல்லி காசு புடுங்கினாய்.இது நியாயமா?

பில்கேட்ஸ்:சரி.அது என்ன ஒரே கதைன்னாவது சொல்லக்கூடாதா?

ஷங்கர்:அது என்ன பெரிய விஷயம்?ஹீரோவுக்கு சமூகத்தால பாதிப்பு வருது.அதனால ஹீரோ வில்லனாகி கொலை பண்றான்.கடைசில பிடிபடறான்.சமூகம் திருந்துது. ஹீரோ கதாநாயகியோடு செட்டில் ஆயிடறான்.இதுதான் கதை.

சரவணன்: ஐயோ.ஐயோ..சிவாஜி படத்துக்கும் இதுதான் கதைன்னு சொல்லி எங்கிட்ட கோடி கோடியா பணம் வாங்கினார்.இப்ப அதே கதையெ உங்க கிட்ட சொல்லி பணம் வாங்கறார்.பில் கேட்சு இந்த ஆளை நம்பாதே..

பில்கேட்ஸ்:என்ன ஷங்கர்.சிவாஜி கதையை காப்பி அடிக்க போறீங்க போலிருக்கே?

ஷங்கர்:அவர் தான் சொல்றாருன்னா நீங்களும் நம்பிடறதா?சிவாஜி கதையை எப்படி காப்பி அடிக்க முடியும்?அந்த படத்துல தான் கதையே கிடையாதே?

பில்கேட்ஸ்:அப்ப நம்ம படத்துக்கு கதை என்ன?

ஷங்கர்:இதுக்கும் கதை கிடையாது.ஆனா தீம் வித்யாசமா இருக்கும்.

பில்கேட்ஸ்:ஐயா..நீங்க என்னை முடிச்சு கட்டறதுன்னு முடிவோட இருக்கீங்க போல.ஆளை விடுங்கைய்யா..அடுத்த டைரக்டர் யாரு?

அஜித்:தயவு செய்து டைரக்டர் பாலாவை போட்டு படம் எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பில்கேட்ஸ்:அருமையான ஐடியா.பாலா நீங்க ஒரு கதை சொல்லுங்க

பாலா:மனநோயாளி ஹீரொ,லூசு மாதிரியான அப்பாவி ஹீரோயின் இவங்க எப்படி சமூகத்தால பாதிக்கப்படறாங்க,கடைசில எப்படி சாகறாங்க இதுதான் கதை

விக்ரம்:ஐயோ இது சேது படத்தோட கதை

சூர்யா:இல்லை இது நந்தா படத்தோட கதை

தயாரிப்பாளர் துரை:இல்லவே இல்லை.இது பிதாமகன் கதை

பில்கேட்ஸ்:அடப்பாவி..நியாயமா இது?நீயும் வேண்டாம்.வேற டைரக்டர் யாராவது இருக்கீங்களா?

தேனப்பன்: நம்ம சிம்புவை போட்டு ஒரு படம் எடுங்க.உங்க சொத்து கரைஞ்சு பைனான்சியர் அன்பு கிட்ட கடன் வாங்கற நிலைமைக்கு வந்துடுவீங்க என்பது நிச்சயம்.

பில்கேட்ஸ்:சிம்பு..நல்லதா ஒரு கதை சொல்லுங்க பாக்கலாம்.

சிம்பு:ஐஸ்வர்யா ராய்,ஷெரோன் ஸ்டோன்,எஞலினா ஜோலி,நயன் தாரா,ஸ்னேஹா,திரிஷா,சந்தியா,கரிஷ்மா கபூர்,கரீனா கபூர்,ஷ்ரேயா,ஜோதிகா,சுஷ்மிதா சென்,மீரா சோப்ரா,இலியானா..

பில்கேட்ஸ்:அட நிறுத்துப்பா..கதை கேட்டா உலகத்துல இருக்கற எல்லா ஹீரோயின் பேரையும் வரிசையா சொல்லிட்டிருக்கே?

சிம்பு:கதையே இதுதாங்க.இவங்க எல்லார் கால்ஷீட்டையும் வாங்கிடுவோம்.ஒவ்வொருத்தர் கூடவும் நான் லவ் பண்ற மாதிரி டூயட்,முத்தக்காட்சி,கவர்ச்சிகாட்சின்னு வெச்சா மூணு மணிநேரம் போறதே தெரியாதுங்க.என்ன சொல்றீங்க?

பில்கேட்ஸ்:அடப்பாவி.உனக்கு தேனப்பன் தான் சரி.அவரையே பிடிச்சுட்டு தொங்கு.வேற நல்ல டைரக்டர் இருக்காரா?

ராமநாராயணன்:நான் இருக்கேன்.

பில்கேட்ஸ்:நீங்க இன்னும் படம் எடுத்துட்டு தான் இருக்கீங்களா?சரி ஒரு நல்ல கதையா சொல்லுங்க பாக்கலாம்.

ராமநாராயணன்:கதை என்னங்க கதை?ஆடு,மாடு,அம்மன்னு வெச்சு எடுக்க வேண்டியதுதான்.நீங்க தயாரிப்பாளர் என்பதால் ஒரு வெளிநாட்டு இளைஞன் முன் ஜென்ம ஞாபகம் வந்து சத்த்யமங்கலம் வர்ரான்.அங்கே அவன் போன ஜென்மத்துல விவசாயியா இருந்தான்.அவன் மாமன் பொண்ணு செண்பகம் மறுஜென்மம் எடுத்து அதே கிராமத்துல பொறந்திருக்கா.ஊர் பஞ்சாயத்து தலைவர் ராதாரவி வில்லன்.இளைஞன் வளத்த ஆடு அவனை அடையாளம் கண்டுபிடிச்சு அம்மன் கோயில்ல தீமிதிச்சு...

பில்கேட்ஸ்:ஐயோ..ஐயோ....சகிக்கலை.சகிக்கலை,

ராமநாராயணன்:கதை அப்படித்தாங்க இருக்கும்.ஆனா எடுத்தா நல்ல வரும்.இதுவரை பர்மனன்டா நிழல்கள் ரவியை ஹீரோவா வெச்சு படம் எடுத்திருந்தேன்.இந்த படத்துக்கு பிராதுபட்டை,இல்லைன்னா தேவிட்டுலாயனை ஹீரோவா போட்டுடவேண்டியதுதான்.

பில்கேட்ஸ்:அது யாருங்க பிராதுபட்டைதெவிட்டுலாயன்?பாரதிராஜாவோட படத்து புது கிராமத்து ஹீரோவா?

ஏவிஎம் சரவனன்: (கிசு கிசு குரலில்)David leon,Brad Pitt தான் தெவிட்டு லாயன்,பிராதுபட்டை அப்படிங்கறார்.

பில்கேட்ஸ்:Brad pitt?அவர் சத்தியமங்கலத்துல எத்தனை கோடி கொடுத்தாலும் ஒரு நாளுக்கு மேல் தங்கமாட்டாரே?

ராமநாராயணன்:பரவாயில்லைங்க.ஒரு நாள் கால்ஷீட் கொடுக்க சொல்லுங்க.படத்தை முடிச்சுடலாம்.

பில்கேட்ஸ்:அது எப்படிங்க ஒரு நாள்ல படத்தை முடிப்பீங்க?

ராமநாராயணன்:என்னங்க கஷ்டம்?ஒரு நாள் பூரா நடிக்க சொல்லி படம் பிடிக்க வேண்டியது.அப்புறம் ஏதாவ்து மந்திரவாதி அவரை குரங்கா மாதிட்டான்னு ஒரு ட்விஸ்ட் கொண்டுவந்து குரங்கை வெச்சு மீதி படத்தை முடிச்சுட வேண்டியது.

பில்கேட்ஸ் எழுந்து தலைதெறிக்க ஓடுகிறார்.'ஐயா சாமி நில்லுங்க' என சொல்லி அனைவரும் அவரை துரத்துகின்றனர்

45 Comments:

Sivabalan said...

செல்வன்,

ஜாலியான பதிவுங்க...

கோலிவுட்டை படம் பிடிச்சு கான்பிச்சிட்டுங்க...

நன்றி.

Unknown said...

நன்றி சிவபாலன்.

அன்புடன்
செல்வன்

இலவசக்கொத்தனார் said...

ஆனா ஒருத்தர் கூடவா ஆங்கிலப் படத்தை காப்பியடிக்கறேன்னு சொல்லலை? திரையுலகம் திருந்துது சாமியோவ்!

குமரன் (Kumaran) said...

:-))))

Unknown said...

நன்றி குமரன்,கொத்தனார் .

கொத்தனார்.நம்ம ஆளுங்க இப்பல்லாம் பழைய தமிழ்படத்தை காப்பி அடிக்கிறதா கேள்வி.சில டைரக்டர்கள் தங்களின் பழைய படங்களையே காப்பி அடிப்பதாக கேள்வி.:-))

G Gowtham said...

செல்வன்..,
நல்லா இருக்கு.
இன்னும் கொஞ்சம் fine tune பண்ணினால் அசத்தலாயிடும்!

Hariharan # 03985177737685368452 said...

//அப்புறம் ஏதாவ்து மந்திரவாதி அவரை குரங்கா மாதிட்டான்னு ஒரு ட்விஸ்ட் கொண்டுவந்து குரங்கை வெச்சு மீதி படத்தை முடிச்சுட வேண்டியது.//

வருஷத்துக்கு 12மாதங்கள். இராமநாராயணன் "பிஸி"யாக இருந்தபோது 14 படம் வருஷத்துக்குத் தந்தவராச்சே.

பாவம் இப்ப ப்ளூக்ராஸால இவர் பிஸினஸ் "க்ராஸ்" ஆயிடுச்ச்சி!

இயக்குனர் ஷங்கரோட ஆட்டைத் தூக்கி மாட்டுல, மாட்டைத் தூக்கி கழுதையில, கழுதையைத் தூக்கி வேறதுலன்ற "ஸ்டோரி டிஸ்கஷனை"ப் பார்த்து ஏ.வி.எம்.சரவணன் மிரள்றது அமர்க்களம்.

செல்வன், வலைப்பதிவுக்கு இளையவன் நான். நம்ம வலை வீட்டுக்கு
http://harimakesh.blogspot.com/
வாங்க.

அன்புடன்,

ஹரிஹரன்

Unknown said...

கவுதம் நன்றி.அடுத்த பதிவுகளில் சரி செய்ய முயல்கிறேன்.

வருகைக்கு நன்றி ஹரிஹரன் .உங்கள் பதிவுக்கு வந்து பின்னூட்டம இட்டுள்ளேன்

//வருஷத்துக்கு 12மாதங்கள். இராமநாராயணன் "பிஸி"யாக இருந்தபோது 14 படம் வருஷத்துக்குத் தந்தவராச்சே.

பாவம் இப்ப ப்ளூக்ராஸால இவர் பிஸினஸ் "க்ராஸ்" ஆயிடுச்ச்சி!//

இவரால நிறைய நடிகர்களுக்கு ஷுட்டிங் இடைவிடாம இருந்துகிட்டே இருந்துச்சு.எஸ்.வி சேகர்,மோகன்,முரளி,சந்திரசேகர் அப்படின்னு நிறைய நடிகர்களுக்கு வாழ்க்கை கொடுத்தார்.அரசியல் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கினார்

நன்றி
அன்புடன்
செல்வன்

பாலசந்தர் கணேசன். said...

நல்ல நகைச்சுவை பதிவு. முக்கியமாக ஷங்கர் மற்றும் சிம்பு கிண்டல் செய்யபட்ட விதம். உண்மையில் ஷங்கர் மீண்டும் மீண்டும் வெவ்வேறு ஆட்களை ஹீரோவா போட்டு ஒரே கதையை தான் மீண்டும் மீண்டும் எடுத்து வருகிறார் என்பது முற்றிலும் சரியான ஒன்று.

Unknown said...

வருகைக்கு நன்றி பாலசந்தர் கணேசன்.

Not only shankar but many tamil directors do the same thing.eg;Vikraman,bala.

We hope some new diretors will change this trend.

anbudan
selvan

கைப்புள்ள said...

சூப்பருங்க டாலர் செல்வன்,
//ராமநாராயணன்:என்னங்க கஷ்டம்?ஒரு நாள் பூரா நடிக்க சொல்லி படம் பிடிக்க வேண்டியது.அப்புறம் ஏதாவ்து மந்திரவாதி அவரை குரங்கா மாதிட்டான்னு ஒரு ட்விஸ்ட் கொண்டுவந்து குரங்கை வெச்சு மீதி படத்தை முடிச்சுட வேண்டியது.//
இது அல்ட்டிமேட்.
:)

மார்கெட்ல இருக்குற பி.வாசுவையும் கதை சொல்ல வச்சிருக்கலாம்.

கைப்புள்ள said...

சரி அது என்னங்க செத்தான் கருணாகரன்? உலகின் புதிய கடவுளையும் அப்பீட்டு ஆக்கிட்டீங்களா?

Unknown said...

வாங்க தலை கைப்பு,

பி வாசு பத்தி நீங்க அடிச்சு விடுங்க.எல்லை கைபுள்ளை என்ன சொல்லிருப்பாருன்னும் ஒரு அடி அடிச்சு விடுங்க:-))

செத்தான் கருணாகரன் என்பது மன்னாதி மன்னன் படத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற பி.எஸ் வீரப்பா வசனம்.

முழு வசனம் இதோ

"அத்தான் என்ற உன் முத்தான இந்த வார்த்தையை கேட்டு செத்தான் கருணாகரன்"

நாமக்கல் சிபி said...

$elvan,
நம்ம செல்வராகவன், தரணி, "பாட்ஷா" பேரரசு, விஷ்ணுவர்தன், கமல் ஹாசன் இவங்களையும் சேர்த்திருக்கலாம்...

Unknown said...

வாங்க வெட்டிப்பயல்,

பேரரசு,செல்வராகவன் படம் ஒண்ணு கூட பார்த்ததில்லை.அதனால் அவங்களை பத்தி எதுவும் தெரியலை:-(

அடுத்த தரம் கமலையும் மத்தவங்களையும் கவனிச்சுடுவோம்:-))

நாமக்கல் சிபி said...

பேரரசு படம் பாத்ததில்லையா???
5 குத்துப்பாட்டு, கீழ்த்தரமான வரிகள்
(அப்பன் பண்ண தப்புல ஆத்தப் பெத்த வெத்தல, உங்கம்மா எங்கம்மா நம்ம நம்ம சேத்து வைப்பாளா? இல்ல சும்மா சும்மா நம்ம பெத்து விட்டாளா?), 4 பைட், கொஞ்சம் சென்டிமெண்ட் அவ்வளவு தான்.

Unknown said...

ஹா.ஹா..

திருப்பாச்சி படம் தானே அது?பாத்திருக்கேன்.ஆனா டைரக்டர் பேரெல்லாம் ஞாபகமில்லை.பேரரசு படமா அது?:-))

நாமக்கல் சிபி said...

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி - இது மூன்றும் அவர் இயக்கிய படங்கள். அடுத்ததாக Captainஐ வைத்து "தர்மபுரி" என்ற படத்தை இயக்குகிறார்...

(அப்படியே நம்ம வலைப்பூ பக்கம் வந்து இட ஒதுக்கீட பத்தி உங்க கருத்தை சொல்லிட்டு போறது :-))

Unknown said...

தலைவா

இயக்குனர் பேரரசு இவ்வளவு பெரிய மசாலா கம்பனி முதலாளின்னு தெரியாம போயிடுச்சே:-))

இதோ உங்கள் பதிவுக்கு ஓடி வருகிறேன்.with my 2 cents

நாமக்கல் சிபி said...

அப்படியே செல்வராகவன் படத்தையும் சொல்லிடறன்...நீங்க பார்த்திருக்கீங்களானு பாருங்க..
துள்ளுவதோ இளமை (அப்பா பேர போட்டுட்டாரு)
காதல் கொண்டேன், 7/G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை...

Unknown said...

செல்வராகவன் படம் நல்லா தெரியும்.ஆனா எதுவும் பார்த்ததில்லை.

வருங்கால திருமதி செல்வராகவனின் பரம ரசிகன் நான்(அடேய்..அடங்குடா....ஜொல்லு விடாதே:-)))ஹி..ஹீ

இலவசக்கொத்தனார் said...

//கைப்புள்ள said...
சரி அது என்னங்க செத்தான் கருணாகரன்? உலகின் புதிய கடவுளையும் அப்பீட்டு ஆக்கிட்டீங்களா?
//

அட. இதைப் பார்க்கவே இல்லையே. டாலர் செல்வன், இது என்னங்க மேட்டர்?

Unknown said...

//அட. இதைப் பார்க்கவே இல்லையே. டாலர் செல்வன், இது என்னங்க மேட்டர்? ///

Thalaiva kothanar...

டாலர் செல்வன்?????

Grrrrrrrrrrrr........:-))))

"செத்தான் கருணாகரன்" என்பது மன்னாதி மன்னன் படத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற பி.எஸ் வீரப்பா வசனம்.

முழு வசனம் இதோ

"அத்தான் என்ற உன் முத்தான இந்த வார்த்தையை கேட்டு செத்தான் கருணாகரன்"

இலவசக்கொத்தனார் said...

//டாலர் செல்வன்?????

Grrrrrrrrrrrr........:-))))//

அட எதுக்கு கோபம்? ஊரே அப்படித்தானே கூப்பிடுது? நானும் ஊரோட ஒத்துவாழ்ன்னு பெரியவங்க சொன்னதை சிரமேற்கொண்டு... ஹிஹி :)

கைப்புள்ள said...

//அட. இதைப் பார்க்கவே இல்லையே. டாலர் செல்வன், இது என்னங்க மேட்டர்?//

கொத்ஸ்! இன்னொரு மேட்டரு...நம்ம 'குரங்கு டாலர்' செல்வன் காதும் காதும் வச்ச மாதிரி இன்னொரு ப்ளாக்கையும் தொறந்துட்டாரு. பாக்குற நாம தான் அது தெரியாம ஏமாந்து போறோம்.

1. புனிதகாளைமாடு.காம் - அதுக்குத் தலைப்பு உலகின் புதிய கடவுள்.
2. புனிதமனிதக்கு.காம் - இதுக்குத் தலைப்பு செத்தான் கருணாகரன்.

கண்டுபிடிச்சிட்டேன் செல்வன்...கண்டுபிடிச்சிட்டேன்...நீங்க சொல்லலைன்னாலும் கண்டுபிடிச்சிட்டேன்.
:)

நாமக்கல் சிபி said...

கைப்புள்ள எங்களை மாதிரி கொஞ்சம் விவரம் புரியாதவங்களுக்கு புரியற மாதிரி சொல்லுங்கள்...
இரண்டிற்கும் என்ன சம்பந்தம்???

Unknown said...

//அட எதுக்கு கோபம்? ஊரே அப்படித்தானே கூப்பிடுது? நானும் ஊரோட ஒத்துவாழ்ன்னு பெரியவங்க சொன்னதை சிரமேற்கொண்டு... ஹிஹி :) //

ஊர்ல யாரும் அப்படி கூப்பிடுவதில்லை.கால்கரி சிவா தான் கூப்பிட்டார்.அவரும் அதன் பின் 'மனம் திருந்தி' அப்படி கூப்பிடுவதில்லை அப்படின்னு பசும்பழம் மேல சத்தியம் செய்துவிட்டார்:-)))

நண்பரை பார்த்து நீங்களும் திருந்தவும்

Unknown said...

//கொத்ஸ்! இன்னொரு மேட்டரு...நம்ம 'குரங்கு டாலர்' செல்வன் காதும் காதும் வச்ச மாதிரி இன்னொரு ப்ளாக்கையும் தொறந்துட்டாரு. பாக்குற நாம தான் அது தெரியாம ஏமாந்து போறோம். //

டாலர் செல்வன்னு கூப்பிட்டதுக்கே பெரிய பஞ்சாயத்து நடந்துகிட்டிருக்கு.நீங்க அதுக்கும் மேல போய் குரங்கு டாலர் செல்வன்னு கூப்பிட்டிடீங்கள்ள?

யாரங்கே...எடு அந்த அரிவாளை:-))

Unknown said...

//கைப்புள்ள எங்களை மாதிரி கொஞ்சம் விவரம் புரியாதவங்களுக்கு புரியற மாதிரி சொல்லுங்கள்...
இரண்டிற்கும் என்ன சம்பந்தம்??? //

அதானே?

என்ன சம்பந்தம்?:-))

கைப்புள்ள said...

//கைப்புள்ள எங்களை மாதிரி கொஞ்சம் விவரம் புரியாதவங்களுக்கு புரியற மாதிரி சொல்லுங்கள்...
இரண்டிற்கும் என்ன சம்பந்தம்???//

வெட்டி! அது டாலரைத் தாங்க கேக்கணும்...காளைமாட்டுல என்ன எழுதப் போறாரு...மனிதக்குரங்குல என்ன எழுதப் போறாருன்னு?
:)

டாலர் செல்வன்! ஆன்சர் வேணும்!!

கைப்புள்ள said...

//நீங்க அதுக்கும் மேல போய் குரங்கு டாலர் செல்வன்னு கூப்பிட்டிடீங்கள்ள?//

அதுவா? எல்லாரும் கழுத்துல அம்மன் டாலர், முருகன் டாலருன்னு போட்டுக்குவாங்க. செல்வன் கழுத்துல டாலர் போட்டா அதுல என்ன படம் இருக்கும்னு யோசிச்சதுல தோணுனது தான்...
"குரங்கு டாலர் செல்வன்"

Unknown said...

தலை கைப்பு

காளைமாட்டில் இப்போதைக்கு தொடர்கதை.குரங்கில் இப்போதைக்கு வழக்கமான குட்டி கலாட்டா பதிவுகள்.

தொடர்கதை முடிந்தபின் என்ன செய்வது என தெரியலை.:-)))

நான் டாலர் கழுத்தில் போட்டுகிட்டதே இல்லை.அப்புறம் எங்க குரங்கு டாலர் போட?இதை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்க யார் தயார்?துவக்கி வைக்க நான் தயார்.:-)))

இலவசக்கொத்தனார் said...

//நண்பரை பார்த்து நீங்களும் திருந்தவும்//

அட அவரை விடுங்க. குடிகாரன் பேச்சி விடிஞ்சாப் போச்சு, அவன் குடிச்சா பீரோ மூ--வா ஆச்சு!

மேல பாருங்க நம்ம கைப்ஸ் எத்தன தடவ உங்களை டாலர் செல்வன்னு அன்பா கூப்பிடறாரு. அதான் நானும்....

Unknown said...

கொத்தனார்....

கால்கரி கொண்ட கவ்பாய் சிவாவை திட்டியதை கண்டித்து கைப்பு காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க்ப்போகிறார் என்பதை மகிழ்ச்சியுடன்..மன்னிக்கவும் வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,

கைப்பு சொன்னார் என்பதற்காக டாலர் செல்வன் என கூப்பிட்டால் பஞ்சாயத்து பெரிதாகும்,ஆட்டோ வந்தாலும் வரலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்:-))

இலவசக்கொத்தனார் said...
This comment has been removed by a blog administrator.
இலவசக்கொத்தனார் said...

//ஆட்டோ வந்தாலும் வரலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்//

எதுக்கும் என் திறனாய்வு பதிவுக்கு ஒரு நடை போயி பாருங்க. அங்க ஆட்டோ வருதுன்னா என்னன்னு ஒரு விளக்கம் சொல்லி இருக்கேன்.

உங்கள் வாழ்த்துக்கு நன்றி! :D

Unknown said...

வருகிறேன்..வருகிறேன்..ஆட்டொவுக்கான திறனாய்வை ஆராய இதோ வருகிறேன்...

உங்கள் நண்பன்(சரா) said...

//நீங்க இன்னும் படம் எடுத்துட்டு தான் இருக்கீங்களா?//
இராமநாராயணனிடம் பில்கேட்ஸ் கேட்பது நல்ல நகைச்சுவை...

நல்ல பதிவு தொடர்ந்து இது போன்ற நகைச்சுவை பதிவுகளை வெளியிடவும்...



அன்புடன்...
சரவணன்

Unknown said...

நன்றி சரவணன்,

கண்டிப்பாக நகைச்சுவை பதிவுகளை தொடர்ந்து எழுதுவேன்.

அன்புடன்
செல்வன்

மஞ்சூர் ராசா said...

தம்பி,
கலக்கறயே

மத்த இயக்குனர்களும் இருக்காங்கப்பா. கொஞ்சம் பாத்து பில் கேட்ஸெ மறுபடியும் வர சொல்லி கதை கேக்க சொல்லப்பா.

நாங்கெல்லா அதெ கேட்டு சிரிக்க காத்துகிட்டிருக்கோம்.

உனக்கு கோடி புண்ணியமா போகும்.

Unknown said...

manjoor anna

i am leaving out of town.will reply once i get back

நாமக்கல் சிபி said...

//1. புனிதகாளைமாடு.காம் - அதுக்குத் தலைப்பு உலகின் புதிய கடவுள்.
2. புனிதமனிதக்கு.காம் - இதுக்குத் தலைப்பு செத்தான் கருணாகரன்.
//

இதுல எதாவது உள் குத்து இருக்கா???

நாமக்கல் சிபி said...

////1. புனிதகாளைமாடு.காம் - அதுக்குத் தலைப்பு உலகின் புதிய கடவுள்.
2. புனிதமனிதக்குரங்கு.காம் - இதுக்குத் தலைப்பு செத்தான் கருணாகரன்.
//

இதுல எதாவது உள் குத்து இருக்கா???//

தலைவரே!!! பதிலையே காணோம்???

Unknown said...

தலை,
மன்னிச்சிடுங்க.தமிழ் எழுத்து தெரியாததால இத்தனை நாள் பதில் போட முடியலை.அந்த கதை தான் உங்களுக்கு தெரியுமே?:-)

உள்குத்து எதுவும் இல்லைங்க.கைப்பு தமிழ்பற்றில் புனிதகாளை,புனிதகுரங்கு அப்படின்னு சொல்கிறார்.புனித காளை என்பது கோயில்மாடு என்ற பொருளில் தான் holyox என பெயர் வைத்தேன். holyape என்பது மனிதன்:-)

நாமக்கல் சிபி said...

//மன்னிச்சிடுங்க.தமிழ் எழுத்து தெரியாததால இத்தனை நாள் பதில் போட முடியலை.அந்த கதை தான் உங்களுக்கு தெரியுமே?:-)//

சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன். நீங்க பட்டப்பாடு தான் தெரியுமே.

சரி நீங்க பொறுமையா எல்லா பதிவுகளையும் படிங்க!!!