Monday, July 24, 2006

12A.காஷ்மீர்:பாகிஸ்தான் ஆட்சியின் லட்சணம்

வங்கதேச போருக்கு காரணம் என்ன?சொன்னால் அதிசயமாக இருக்கும்.

மொழி.

வங்கதேசத்தவர்கள் வங்கமொழி மீது மிகுந்த பற்று உடையவர்கள்.தமிழ்மீது நமக்கு என்ன பற்று உள்ளதோ அதே போல் வங்கமொழி மீது அவர்களுக்கு பற்று உள்ளது.வங்கமொழி இலக்கியங்கள் நிறைந்த கருத்து செறிவுள்ள மொழியாகும்.

இப்படிப்பட்ட மொழியை அழிக்கும் வேலையில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டது.மார்ச் 21,1948ல் முகமது அலி ஜின்னா "உருது மட்டுமே பாகிஸ்தானின் அரசு மொழியாக இருக்கும் " என டாக்காவில் வைத்து அறிவித்தார்.வங்காளிகள் இதை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.வங்கதேசத்தை விட்டு கிளம்புமுன் ஜின்னா "உருதுவின் எதிரிகள் பாகிஸ்தானின் எதிரிகள்" என அறிவித்தார்.தேசத்தந்தையின் இந்தப்பேச்சு வங்கதேசத்தவரை அதிர்ச்சி அடைய செய்தது.

வங்க மொழியும் உருதுவும் இரண்டும் தேசிய மொழியாக வேண்டும் என்று கேட்டவர்களை ஜின்னா பின்வரும் பெயர்களில் அழைத்ததாக டாக்டர் வஹீத் உஸ்மான் மானிக் வேதனையுடன் தெரிவிக்கிறார்.

"communists," "enemies of Pakistan," "breakers of integrity of Pakistan," "defeated and frustrated hate-mongers," "champions of provincialism," " breakers of peace and tranquility," "political assassins and political opportunists," "traitors," " inhabitants of fools' paradise," and "self-serving, fifth columnists" etc

தமது மொழிக்கேற்பட்ட இழிவை பொறுத்துக்கொள்ள முடியாத வங்கதேசத்தவர் 1952ல் மொழிப்போரை துவக்கினர்.அது அவர்களை மேலும்,மேலும் அன்னியப்படுத்தி கடைசியில் தேர்தலில் வென்ற முஜிபுர் ரஹ்மானை அரசமைக்க விடாது -யாஹியாகான் போர் துவக்கியதில் வந்து முடிந்தது.
யோசித்து பாருங்கள்.நாளை காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைந்தால் காஷ்மிரையும் இப்படி அழிக்க முற்படமாட்டார்கள் என்பதற்கு என்ன நம்பகம் இருக்கிறது?

பாகிஸ்தான் பிடியில் காஷ்மீரின் ஒரு பகுதி இருக்கிறது.அதை அவர்கள் எந்த லட்சணத்தில் ஆட்சி செய்கிறார்கள் என்பதை அறிந்தால் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையவேண்டுமா என்பது பற்றி சந்தேகமே இல்லாது போய் விடும்.

நார்தர்ன் ஏரியா எனப்படும் வடக்கு காஷ்மீர் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகும்.இது மிகவும் இயற்கை அழகு நிரம்பிய பகுதியாகும்.இந்த பகுதியை கடந்த 1947ல் பாகிஸ்தான் சட்டவிரோதமாக பிடித்தது.அன்றிலிருந்து இன்றுவரை 60 ஆண்டுகளாக தேர்தலே நடக்கவில்லை.சட்டசபையும் கிடையாது.பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு இந்த பகுதியில் அதிகாரமே கிடையாது என்பதை அறிந்தால் அதிரத்தானே செய்வோம்?ஆனால் உண்மை அதுதான்.அங்கு ஆட்சி செய்வோர் பாக் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.அவர்கள் வைத்ததே சட்டம்.கோர்ட் அதிகாரம் செல்லுபடி ஆகாது.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு பிரதிநிதியோ,நாடாளுமன்ற உறுப்பினரோ கிடையாது.

அதிர்ச்சியாக இருக்கிறதா?ஆம்.இதுதான் பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நிலை.இந்த லட்சணத்தில் காஷ்மீரை வைத்துக்கொண்டு நம்மிடம் இருக்கும் காஷ்மீரையும் கேட்கிறார்கள் என்றால் அவர்கள் கையில் சிக்கினால் காஷ்மீர் சட்னியாகிவிடும் என்ற உண்மை தெரிகிறதல்லவா?

அங்கே பல்கலைக்கழகம் கிடையாது,கல்லூரி கிடையாது,கரண்டே இல்லை,ரோடு கிடையாது,ரேடியோ கிடையாது.என்ன கொடுமை இது என பாருங்கள்.பஞ்சாபிகளையும்,பதான்களையும் அங்கே அனுப்பி அங்குள்ள 11 லட்சம் மக்களின் சமூக அமைப்பை குலைக்க பாகிஸ்தான் அரசு முயற்சி செய்தது.1988ல் மிகப்பெரும் ரகளை நடந்து அந்த முயற்சி முறியடிக்கப்பட்து.

தெற்காசியா மானிடர் எனும் அமைப்பு அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டு காட்டுகிறது.படிக்கவே நாராசமாக இருக்கிறது.

இந்தியாவிடம் உதவி கேட்கும் நிலைக்கு அங்குள்ள மக்கள் வந்துவிட்டார்கள்.அவர்கள் ஒரு மாநாடு போட்டு "இந்தியா ஏன் எங்களுக்கு 60 வருடமாக உதவி செய்யவில்லை?" என கேட்கிறார்கள்.

என்ன பதில் சொல்வது அவர்களுக்கு?சொல்லுங்கள்.

We are fed up of the culture of the gun in the region. The atrocities perpetrated by the Pakistani government against indigenous people of Gilgit-Baltistan are hard to describe," Manzoor Hussain Parwana, chairman of Gilgit-Baltistan United Movement, told IANS.

Parwana was here last week, along with nearly 30 leaders representing PoK, Northern Areas and the Kashmiri diaspora, to attend a two-day international conference to find "alternative futures" for Kashmir.

"Nobody listens to us. There is no political representation for us in Pakistani National Assembly and there are no legal recourse again state-sponsored atrocities," he added in a charged tone.

"For the last 60 years, we have not been given political rights. Why has India not helped us?" he asked. "We want India to speak up against atrocities committed by the Pakistani army against indigenous people of Gilgit-Baltistan," he said.

(தொடரும்)

1.பாகிஸ்தானை வெல்லுமா இந்தியா?

1.காஷ்மீர்:பாகிஸ்தானின் தேசிய அவமானம்-2

12 Comments:

நாமக்கல் சிபி said...

என்னதான் மதம் ஒன்றாக இருந்தாலும் மொழி வேறுபட்டால் இனம் வேறு என்றாகிறது...

ரவிந்தரநாத் தகூரின் கவிதையை ரசிப்பதற்காகவே வங்க மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்று என் நண்பன் ஒருவன் சொல்லுவான்.
ராமகிருஷ்ணர், விவேகானந்தர், சுபாஷ் சந்திர போஸ் எல்லாம் வங்காளத்தவற்களே!!!

Unknown said...

மொழிப்பிரச்சனை பெரும் பிரச்சனை பாலாஜி.இந்தியாவிலும் அது உண்டு என்றாலும் ஜனநாயகம் இருப்பதால் இந்தி ஆதிக்கம் தவிர்க்கப்பட்டது.ஆனால் பாகிஸ்தானில் ஜனநாயகம் இல்லை என்பதால் சர்வாதிகாரம் தலைவிரித்தாடி மொழிவெறியால் யுத்தம் நடந்தது

கால்கரி சிவா said...

//"For the last 60 years, we have not been given political rights. Why has India not helped us?" he asked. "We want India to speak up against atrocities committed by the Pakistani army against indigenous people of Gilgit-Baltistan," he said.//

இந்த மாதிரி பேசினவர்களை வேறுடன் கழன்று வீசியிருப்பார்கள்.

அதெல்லாம் மனித உரிமை மீறல் கிடையாது.

ஒரு தீவிரவாதியை சிறையில் அடைத்து விசாரணை செய்தால் அது மனித உரிமை மீறல்.

செல்வன் உங்கள் கட்டுரைகள் சிறப்பாக உள்ளன
தொடரட்டும் உங்கள் பணி

Unknown said...

சிவா,

அங்கே கோர்ட்டுக்கு அதிகாரமே இல்லை எனும்போது மனித உரிமை எங்கிருந்து வரும்?பாவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள்.இந்தியாவோடு இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருப்பார்கள்.

Anonymous said...

அடக் கடவுளே.. இப்படியுமா..ஆனால் பாக்கிஸ்தானியர்கள் ஏதோ அவர்கள் எல்லாம் புனித பிம்பங்கள் மாதிரி பேசுகிறார்களே!!!!!!!

(சில பாகிஸ்தான் நண்பர்கள் உண்டு..எனவேதான் சொல்கிறேன்..)

கால்கரி சிவா said...

//அடக் கடவுளே.. இப்படியுமா..ஆனால் பாக்கிஸ்தானியர்கள் ஏதோ அவர்கள் எல்லாம் புனித பிம்பங்கள் மாதிரி பேசுகிறார்களே!!!!!!!//

நமக்கும் அவனுக்கும் அதுதான் வித்தியாசமே. நம்ம நம்மளைப் பத்தி பெருமையா பேசவேமாட்டோம்.

சீனு said...

//தமிழ்மீது நமக்கு என்ன பற்று உள்ளதோ அதே போல் வங்கமொழி மீது அவர்களுக்கு பற்று உள்ளது.//
அப்போ வங்கதேசத்தவருக்கு பற்று இல்லைன்னு சொல்லுறீங்களா?

Unknown said...

சிவா,

பாகிஸ்தான்காரர்கள் தங்கள் நாட்டுக்கே 'தூய்மைமையானவர்களின் தேசம்' என்றுதான் பெயர் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் .பங்களாதேஷை தூய்மைப்படுத்தியபோதே அந்த பெயருக்கு என்ன அர்த்தம் என தெரிந்துவிட்டது:-)))

Unknown said...

சீனு

தமிழ்மீது நமக்கு என்ன பற்று உள்ளதோ அதே போல் வங்க மொழி மீது வங்கதேசத்தவருக்கு பற்று உள்ளது என்றுதானே சொல்லியிருக்கிறேன்?இதில் என்ன குழப்பம்?:-))

சீனு said...

ஐயையோ! ச்சும்மானாட்டியும் சொன்னேன்.

நமக்கு தமிழ் மேலே அவ்வளவு பற்று இருக்கிறது என்றா சொல்கிறீர்கள்? எனக்கு நம்பிக்கையில்லை. தமிழ் நாட்டை விட்டு வெளியே சென்றால் தான் தமிழின் அருமை தெரிகிறது. நான் blog எழுத ஆரம்பித்ததும், புத்தகங்கள் படிக்க ஆரம்பித்ததும் சில நாட்கள் பெங்களூரில் இருந்த கால கட்டத்தில் தான். நிழலின் அருமை வெய்யிலில் தான் தெரியும். நம் தமிழ் நாட்டவருக்கு தமிழின் அருமை இதுவரை தெரிந்ததாக தெரியவில்லை. குறைந்த பட்சம், நம் மொழியில் மேல் காதல் கூட இல்லை. இந்த விடயத்தில் இலங்கைத் தமிழர்கள் மேல் எனக்கு பொறாமை கூட வந்துவிடுகிறது.

ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசக் கூட முடியவில்லை (நம்ம பாலிசி "இயன்ற வரை இனிய தமிழ்"). இங்கே என்னுடன் பணிபுரிபவர்களில் பலர் தமிழில் படிப்பது சிரமம் என்று ஆங்கில புதினங்களையே படிக்கிறார்கள். என்ன செய்வது? இப்பொதைக்கு வருத்தமடையவே முடிகிறது.

Anonymous said...

//(நம்ம பாலிசி "இயன்ற வரை இனிய தமிழ்")//

நம்ம கொள்கை??

Unknown said...

////(நம்ம பாலிசி "இயன்ற வரை இனிய தமிழ்")//

நம்ம கொள்கை?? //

இதுதான் நம்ம கொள்கை

"உன் வழி உனக்கு.என் வழி எனக்கு.சரியான வழி,நேரான வழி,ஒரே வழின்னு எந்த புண்ணாக்கும் கிடையாது"