Saturday, July 08, 2006

8.ஒசாமா பின்லேடனை பிடிப்பது எப்படி?

ஒசாமா பின் லேடனை பிடிப்பது எப்படி என்று சில பிரபலங்களிடம் ஐடியா கேட்டோம்.

ஜெயலலிதா: கருணாநிதியும்,சிதம்பரமும் ராஜினாமா செய்தால் உடனடியாக பின்லேடன் பிடிபட்டு விடுவான்.இதற்குமேலும் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?


முன்னாள் போலிஸ் கமிஷனர் தேவாரம்:
தோரா போரா மலைபகுதியில் உள்ள அனைவரையும் பிடித்து உள்ளே போட்டு ஷாக் கொடுத்தால் பிடித்துவிடலாம்.


ஜார்ஜ்புஷ்:
ஈரான் மீது படை எடுத்தால் போதும்.அங்கே தான் அவர் ஒளிந்திருக்கிறார்.அங்கே இல்லை என்றால் அடுத்து வடகொரியா.இப்படி உலகின் அனைத்து நாடுகளையும் படை எடுத்து பிடித்து விட்டால் தப்பிக்க இடமே இல்லாமல் அவர் மாட்டிக்கொள்வார் அல்லவா?


டைரக்டர் கே.பாக்யராஜ்
நடிகை தேஜாஸ்ரியை தோரா போரா மலையில் டான்ஸ் ஆட சொல்லலாம்.பார்க்க வரும்போது பிடித்து விடலாம்.


இந்தி பட டைரக்டர்:
அவர் குடும்ப பாட்டு என்ன என்பதை கண்டுபிடித்து அதை பாடினால் அவர் பதில் பாட்டு பாடுவார்.அதை வைத்து கண்டுபிடித்து விடலாம்.


ராமநாராயனன்:
நாய் ராமுவையும்,யானை ராஜாவையும் அனுப்பினால் பிடித்துக்கொண்டு வருவார்கள்.


முன்னாள் மந்திரி ஓ.பி.எஸ்
அவரை பிடிக்கும் காண்டிராக்டை நைசா நம்ம கிட்ட தள்ளி விட்டிங்கன்னா வேலை நடந்திடும்.உங்களுக்கும் 10% கமிஷன் தந்துடலாம்.


தயாநிதி மாறன்:
ஒசாமா மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டால் தானே மாட்டிக் கொள்வார்.


பிடூ ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்:
எவனையாவது புடிச்சு உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டினா நான் தான் ஒசாமான்னு வாக்குமூலம் கொடுத்துடுவான்.கேஸ் பைலை குளோஸ் பண்ணிடலாம்.

உங்களுக்கு பிடித்த(பிடிக்காத) பிரபலங்கள் எப்படி ஐடியா கொடுப்பார்கள்?நகைச்சுவை பின்னூட்டமாக இடுங்களேன்.

(10 நாட்கள் வெளியூர் போகிறேன்.அங்கே மாகின்டாஷ் கம்ப்யூட்டர் தான் இருக்கிறது.அதில் தமிழ் பான்ட்கள் தெரியாவிட்டால் 10 நாட்கள் வலைபதிய முடியாது.Dont know what to do)

19 Comments:

Unknown said...

எங்கள பாத்தா தலைவர்களா தெரியலியா?ன்னு குவாட்டர்கோவிந்தன் கோச்சுகிட்டு போனவர கூட்டிவந்து கேட்டதில்" ஆப்கானிஸ்தான் முழுக்க டாஸ்மாக் தொறந்து அதுல FBI ஆளுங்கள நிருத்தி வச்சா குடிக்க வற்ற ஒசாமாவுக்கு ஓவரா ஊத்திவிட்டு கபால்னு அமுக்கிடலாம்"

Unknown said...

ஹா..ஹா...

க்வார்ட்டர் கோவிந்தன் அரசியல் தலைவராக முழு தகுதியும் உள்ளவர் தான்:-))

VSK said...

மஹாகவி பாரதி சொல்வது இது!

"காண்பவெல்லம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே -- நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதி கண்டோம்; காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்[சத்தியம்] - இந்தக் காட்சி நித்தியமாம்!"

Unknown said...

பின்லேடனை பற்றி பேசும்போது கூட எஸ்.கேவிடம் தமிழ் துள்ளி விளையாடுகிறதே?

பின்லேடன் மாயாஸ்வரூபம் பிடிக்க முடியாது என்று தானே இதற்கு பொருள்?

VSK said...

நம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் பிடித்துவிடலாம் என்று சொல்ல வந்தேன்!
நீங்கள் சொல்வதும் பொருத்தமே!

Unknown said...

SK,
விரைவில் பிடிபட்டு விடுவான் என்கின்றனர்.சதாமையும்,ஸர்காவியையும் பிடித்ததுபோல் இவனையும் பிடித்தால் சரி

Anonymous said...

ராமதாஸ்: சாலையோரங்களில் இருக்கும் மரங்களை வெட்டிவிட்டால் சுலபமாக பிடிப்பட்டுவிடுவான்.

வைகோ: பின் லேடனின் குடும்பத்தினருக்கு பதவிகள் கொடுக்காவிட்டால் பிடிப்பட்டு விடுவான்

கருணாநிதி: உடன் பிறப்பே பின் லாடனை பிடிக்க ஒரே வழி டாட்டா நிறுவனம் மாறன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வது தான்.

ரஜினி: சிவாஜி படத்தில் ஸ்டில்களை வெளியிடுபவர்களை பிடித்தாலே போதும் பின் லாடன் சரணடைந்து விடுவான்.

இயக்குனர் சங்கர்: தோரா போரா மலைப்பகுதியில் ஒரு டூயட் பாட்டை 150 காமிராவோடு படம் எடுக்க போனால் அதை பார்க்க பின் லாடன் வருவான். அப்பொழுது பிடித்து விடலாம்.

இன்னும் வரும்.

நாமக்கல் சிபி said...

அட! நம்மாளு ஒருத்தரு இருக்காரு! அவரை அனுப்புனா ஒரே வாரத்துல ஒசாமாவுக்கு உளவு சொல்ற ஆளுங்களை அழிச்சிட்டு ஒசாமாவை சட்டைக் காலரைப் பிடிச்சி மௌண்ட் ரோட்ல இழுத்துகிட்டு நடந்தே கோர்ட்டுக்கு வந்துடுவாரு! ஆனா இப்போ அவரு பிஸியா இருக்காரு.

(எஸ்.கே அவர்கள் கோபித்துக் கொள்ள வில்லையென்றால் யாரென்று சொல்கிறேன் :) )

மு. மயூரன் said...

//(10 நாட்கள் வெளியூர் போகிறேன்.அங்கே மாகின்டாஷ் கம்ப்யூட்டர் தான் இருக்கிறது.அதில் தமிழ் பான்ட்கள் தெரியாவிட்டால் 10 நாட்கள் வலைபதிய முடியாது.Dont know what to do)//

போகும்போது, உங்களிடம் வேகமான இணைய இணைப்பு இருந்தால் இந்த சுட்டியில் இருக்கும் power pc edition ஐ தரவிறக்கு ஒரு வட்டில் எழுதிக்கொண்டு போங்கள்.

http://mirror.cs.umn.edu/ubuntu-releases/6.06/

அங்கே போய் மாகின்டோஷ் கணினியில் அந்த இறுவட்டை boot செய்து நீங்கள் அதிலிருக்கும் firefox உலாவி மூலம் தாராளமாக தமிழ் தளங்களை பார்க்கலாம். போகுமிடத்தில் உங்களுக்கு அனுமதி இருந்தால் இதனை கணினியில் நிறுவிக்கொண்டும் நீங்கள் வேலைகளை செய்யலாம்.

மேலதிக தகவல்களுக்கு

www.ubuntu.com

Anonymous said...

என்னைக் கேட்டால் விஜய காந்த் தான் சரியான சாய்ஸ். அவருக்குத் தான் காஷ்மீரிலிருந்து கன்னியாக் குமாரிவரையுள்ள தீவிரவாதிகளைப் பற்றி நல்லா தெரியும்.

Unknown said...

தலைவா சிபி

நீங்க சொல்லலைன்னாலும் ஆறுமுகம் அவர் யாருன்னு சொல்லிட்டாரு.தலைவர் ஆப்கானிஸ்தான் போனாருன்னா ஜனாதிபதியே ஆனாலும் ஆயிடுவாரு:-)))

Unknown said...

மயூரன்

மிக்க நன்றி.அந்த சுட்டியில் சொல்லியிருந்தபடி செய்கிறேன்.நண்பரின் கம்ப்யூட்டர் என்பதால் ஏதேனும் செய்ய பயமாக உள்ளது.இருப்பினும் முயல்கிறேன்.மேக்கில் யுனிகோடு பற்றி அறிய அந்த சுட்டி மிக்க உதவியாக இருந்தது.நன்றி

அன்புடன்
செல்வன்

Unknown said...

ஆறுமுகம்

விஜய்காந்தை விட பொருத்தமான ஆள் கிடையாதுதான்.இருந்தாலும் விருத்தாசல மக்கள் அவரை போக விடுவாங்களா?:-))

கார்த்திக்கை வேணா அனுப்பி வைக்கலாம்.படமே இல்லாம நொந்து போயிருக்கறதா கேள்வி:-))

Unknown said...

here comes 14

Sivabalan said...

Selven Sir,

My choice will be "Bandage Pandian". He is the guy who can able to withstand anything & everything.

He has very good prior experience. So please consider him...

(P.S. Just for fun)

Unknown said...

ha..ha..

sivabalan,,,,if bandage pandian goes to meet usama he will be hung immediatly:-))))

குமரன் (Kumaran) said...

:-)))

Seththaan Karunaakaran...

:--))))

Unknown said...

kumaran,

sethan kaunakarannu sonna athu enna appati oru theyviika sirippu?:-))

thats a famous PS veerappa dialogue in mannathi mannan movie.

Sivabalan said...

Kumaran Sir


// Seththaan Karunaakaran...//

I like that..