Wednesday, June 28, 2006

அறத்திற்கே அன்பு சார்ப என்ப அறியார்

மற்ற விடுதலைபோராட்டங்களை ஒப்பு நோக்குகையில் இந்திய விடுதலைபோராட்டம் வன்முறையும் பகைமையும் அருகிய போராட்டமாகவே அமைந்தது. அந்த பெருமை காந்திக்கே பெரும்பாலும் சாரும் என்றாலும், அவர் ஏதோ எதிர்பாராது வரலாற்றில் வந்து விழுந்த மகாத்மா அல்ல. அவர் லண்டனில் பயின்ற ஒரு வழக்கறிஞர். இங்கிலாந்து கல்லூரிகளில் பிரித்தானிய சட்டமும் அதன் அரசியலமைப்பு வித்திகளையும் கற்றவர். அவரது அறவழி போராட்டம் கிறுத்துவமத பரப்பாளர்களது அன்புவழி கோட்பாட்டை ஒட்டி அமைந்தது போன்றாலும் இந்து மதத்தின் துன்புறுத்தாமை கோட்பாட்டையும் அடித்தளமாக கொண்டது எனலாம். மதம் சார்ந்தவற்றை களைந்துவிட்ட காந்தியின் அந்த அறபோர் செய்திறம் வாய்ந்த அரசியில் சூழ்ச்சியாகவும் 1857இல் தோல்வி தழுவிய மறப்போரில் பெற்ற பாடத்தை கருத்தில் கொண்டதாகவும் அமைந்தது

மேலை நாட்டு உடுப்பு அணிந்து வழக்காடிய விக்டோரியா வழக்கறிஞர் இடுப்பு துணி மட்டும் அணிந்த புகழ்பெற்ற துறவியாக உருப்பெயர்ச்சியுற்று காப்பிய நாயகனாக மலர்ந்தார். அது அவரது அரசியல் வெற்றி மட்டும் அல்ல ஆன்மீக மீட்சியுமாகும். அவரது அடியார் ஒக்கும் ஓளிவட்டம் அவர்காலத்து இந்துமதத்தின் வீறுகொள் மீட்சியையும் ஏற்படுத்தியது என்றால்,. அவரது மதசார்புஅற்ற பின்னணியும் கல்வியும் பல இளஞர்களும், நாட்டு எழுச்சியில் அவரொடு மிகுதியும் மாறுபட்ட தலைமுறையினரும் ஏற்கும் ஒரு தந்தை தகுதியைனாவருக்கு நல்கியது. அவர்களில் ஒருவர், காங்கிரசு கட்சியின் முன்னணி தலைவர் ஒருவரை மணந்து கொண்டவருமான, மேற்கத்திய கல்வி பெற்ற அருணா ஆசிப் அலி. இறுதியில் இடது சாரி அரசியலார்களில் ஒருவராய் திறம் பெற்றார், அவரும் மற்ற இளம் பொதுஉடைமைசாராரும் காந்தியின் ஆன்மிக கவர்ச்சியை மேலோட்டமாக எடுத்துக்கொண்டாலும் அவரை இந்திய அரசியலின் தந்தையாக ஏற்றுக்கொண்டதை சொல்லுகிறார்:

"புகைக்காமை, அருந்தாமை, புலனடக்கம், எளிய வாழ்க்கை போன்ற காந்தியின் வற்யுறுத்தல்களை எம் போன்ற மேற்குமயமான காங்கிரசுகாரர்கள் பெரும்பாலோர் மேற்கொண்டார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் காந்தியின்பால் இனம்புரியாத ஒரு கவர்ச்சி எங்களிடயே இருந்தது. நாங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் விரும்பிய எல்லாமும் ஒப்புக்கொள்ள எம்மால் இயலவில்லை. அவைகள் கடினமாக தோன்றின. ஆனால் எம்மால் இயன்றவற்றை கடைபிடித்தோம். காட்டாக, அயல்நாட்டு ஆடைகளை தவிர்ப்பது. அது எமக்கு ஒரு போராட்டமாக இருந்தால் விட்டுவிட்டோம் ஆனால் நகைகள் எப்பொதும் எம்மை கவராததால் தவிர்த்து விட்டோம். எதையும் துறப்பதற்கு உவந்து நிற்பது, அறப்போர் என்றால் திருப்பிதாக்காமல் இருப்பது, நம் மறுப்பு தன்மையால் வரும் எல்லா இன்னல்களையும் ஏற்பது என்றிவையே அவரிடம் இருந்த நாங்கள் கற்ற அடிப்படை கல்வி"

மேற்கத்திய வசதிகளில் பழகியவருக்கும் காந்தியின் ஆசிரமத்து எளியவாழ்வை வலியுறுத்தல்கள் ஒவ்வொன்றிலும் அதனதன் மையல் இருந்தது. இலண்டனில் கல்வி கற்றவரான, நாட்டு எழுச்சி கொண்ட ரேணுகா ரே சொல்கிறார்:

' அங்கு நிலைமை படுமட்டமாக இருக்கும். உணவு வாயில் வைக்கமுடியாது.' என்று எல்லோரும் எனக்கு சொன்னார்கள்: ஆனால் நான் இளஞியாக இருந்ததால் எனக்கு உணவு சுவையாகவே இருந்தது. நாள்தோறும் விடியல் 5.30 க்கு எழுந்து ஆற்றில் நீராடுவது பழகிவிட்டது. எல்லோரும் நேரம் கடைபிடிக்க வேண்டும். எங்களில் சிலர் அதற்கு மட்டம் அடித்தது உண்டு. ஆயின் இளம் வயதில் புதியன செய்வதில் எப்போதும் ஒரு துள்ளல் இருக்கும். எனவே அங்கே இருப்பது எனக்கு ஒருவகை துடுக்காகவே தான் இருந்தது.

0 Comments: