Wednesday, June 28, 2006

மகாத்மா

தம் பண்பாட்டின் வேர்களை தேடிக்கொண்டிருந்த இந்தியருக்கு, காந்தியும் அவரது காலத்து கலைநயம் கொண்ட தாகூரும், கிழக்கும் மேற்கும் கலந்து வடித்த பண்பாட்டை நல்குவதாகவே தோன்றியது. முமபையின் காந்தி அரும்பொருள் காட்சியகத்தின் நெறியாளர் உச்ஃஆ (உஷா) மேத்தா,"மகாத்மா மேலோட்டமான ஆங்கில நாகரிகங்களான ஆடை, சமூக வழக்கங்களை தள்ளிவிட்டாலும் அவர்களின் அடிப்படையான் தன்னிறைவு, அரசியலில் தளையின்மை போன்றனவற்றை போற்றினார்" என்கிறார்,

" எனக்கு பதினாறு அல்லது பதினேழு வயதில், என் பெற்றோர்களுடன் காந்தியின் ஆசிரமத்துக்கு சென்றேன். காந்தி அன்றைய வழிபாட்டுக்கு போய் கொண்டு இருந்தார் என்பதால் நாங்களும் வழிபாட்டுக்கு சென்றோம். வழிபாடு முடிவுற்ற பின்னர் தான் எம்மை சந்தித்தார். வழிபாடுகள் வைகலும் காலையிலும் மாலையிலும் நடை பெறும். அது எங்கள் மீது அதன் விளைவை உண்டாக்கியது. அந்த ஆசிரம் வாழ்வினரின் எளிமையான கூடிவாழும் வாழ்க்கை என்னுள் ஒரு பதிவை உண்டாக்கியது. எல்லோரும் அவரவர் பணிகளை அவரவரே செய்துகொள்ளலும், கலன்களை கழுவுலும் துணிகளை துவைத்தலும் செய்தலால் ஆசிரம வாழ்வினர் தற்சார்பு கொணடவ்ராக கற்றுக்கொண்டனர். இவை என்னை மிகவும் கவர்ந்து. அது இந்திய பாரம்பரையின் வழமை மேற்கொள்ளப்படுவதாகவே அமைந்தது"

அருணா ஆசிப் அலிக்கு, காந்தியின் ஆன்மீகம் தொன்மையான இந்து மதத்தை போல அல்ல என்றாலும் கிறுத்துவ கன்னி மாட கல்வி நிலையங்கள் போன்ற ஒரு தோற்றத்தை தன்னுள்ளே எழுப்பியது என்கிறார்.

"அவர் கவர்ச்சிமயமான தன்மையர். எங்களை ஈர்த்து எங்களோடு மென்மையாகவும் அமைதியாகவும் பேசுவார். அந்த சூழல் இயற்கைதன்மை கொண்ட இந்திய துறவியர்மடம் (பர்ணசாலை) போல எளிமையானதாக இருந்தது. கிறுத்துவமடங்களில் கன்னிமார்களும் அருள்தந்தையரும் எப்படி எளிய வாழ்க்கை மேற்கொள்கிறார்கள் என்பதை நான் படித்துள்ளேன். அதே போல் ஒரு சமயகொள்கை காந்தியிடம் நான் கண்டேன். காந்தியை சட்டென புரிந்துகொள்ள மிகவும் உதவியது இதுதான்: அவர் நடத்தும் வழபாட்டு கூட்டங்களில் எல்லா மதங்களது பக்தி பாடல்களையும் பாடுவதை வலியுறுத்துவார். "Lead Kindly Light" என்ற பாடலே அவர்க்கு மிகவும் உவப்பான பாட்டு. கிறுத்துவுக்கு என்னென்ன பண்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறதோ அவையெல்லாம் அவரிடம் இருந்தது குறிப்பாக ஏழைகளிடம் பற்றி பேசுகையில் அவர் கொண்ட மென்மையான் போக்கு.கிறுத்துவை பற்றி நான் படித்த கேட்டவற்றுள் பலவும் காந்தி கற்பித்தவைகளில் இருந்தன. - அவர் பேசும் பாங்கு, அவரது வருத்தங்கள், சில நேரங்களில் அவரது சினம் பூண்ட குரல்.........."

0 Comments: