Wednesday, June 28, 2006

காந்தியின் ஒத்துழையாமை இயக்கம்

தன்னைப்போன்ற இளம்பெண்களுக்கு, காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் வழிவழி ஏற்றுக்கொள்ளப்பட்ட திருமணம், இல்வாழ்க்கை போன்றனவற்றுக்கு ஒரு மாற்றுவழி கோலியது என்று உஷா மேத்தா சொல்லுகிறார்.

"என் தந்தை ஒரு முற்போக்காளர். எனவே, நான் எப்படியும் கல்லூரிக்கு சென்று ஒரு பல்கலைகல்வி கற்றிருக்கலாம். ஆனால் எங்களது மரபுவழி குடும்பம் என்பதால் திருமணம் செய்துகொண்டு, இல்வாழ்வில் அமர்த்திவிட என்னை வற்புறுத்தி இருக்கலாம். ஆனால் போராட்டத்தில் உள்ள என் ஈடுபாட்டால் நான் 1942 இல் சிறைக்கு சென்றது மட்டுமன்றி எனக்கென ஒரு தொழில்துறையையும் நாடிக்கொண்டேன். இவ்வாறுதான் காந்தி தம் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள பெண்களை வழிநடத்தினார்."

காங்கிரசின் இடதுசாரிகள் காந்தியின் அறப்போர் கோட்பாடுகளை எப்போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அரசின் வன்முறையை ஈடுகட்ட வன்முறை புரட்சிதான் வழி என்று சொல்லாடிய பலரும், வெள்ளையர்மேல் இனவெறுப்பை ஏற்காததில் காந்தியோடு இணங்கினோம். நிகழ்ச்சி காட்டாக, 1940 இல் தலைமறைவான பிரித்தானிய எதிர்ப்பு வன்முறை போராட்டத்தை வழிநடத்திய அருணா அசிப் அலி, அவளைப் போன்றோருக்கு, அகதா கிருஸ்டியை படிப்பதுதான் தம் பிடித்தமான படுக்கைநேர கதை என்னும் அளவுக்கு பிரித்தானிய நாகரிகத்தில் ஊறியவர் என்று ஒத்துக்கொள்கிறார்.

" நாங்கள் வெகுண்டோம். ஏதோ ஒன்று எம்மை வெகுளச்செய்தது. அது நம்மை இழிவு செய்யும் உணர்வு. இருந்தும் அங்கே வெறுப்பு இல்லை. ஏனென்றால் நம் கல்வியால் பிரித்தானிய நாகரிகத்துக்கு நாம் இசைந்து விட்டோம். எல்லா தலைமையாளர்களும், காந்தி, நேரு உட்பட, இளமைக்காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்தவர்கள். பிரித்தானிய எண்ணங்களும், பி்ரித்தானிய , எனவே ஐரோப்பிய, புரட்சி தோதுகளும் அவருள் தாக்கம் ஏற்படுத்தின. நான் பிரெஞ்சு புரட்சியை பற்றி கிளர்ச்சி ஊட்டும் நூல்கள் எல்லாம் பெருவாரியாக படித்தேன். பிரெஞ்சு புரட்சியிலும், கிராம்வெல் காலத்திலும், அதை தொடர்ந்தும் நடந்த பிரித்தானிய போராட்டங்களிலும், அவரவர் வழியில் கொடுங்கோன்மை அவர்கள் எதிர்த்தார்கள் என்றால் நாமும் அவ்வாறே செய்ய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. எனவேதான் நம் தலைவர்கள் பிரித்தானியர்களை, " நீங்கள் இதையெல்லாம் எப்படி எங்களுக்கு செய்யலாம். இவையெல்லாம் உங்கள் அடிப்படை பண்புகளுக்கு எதிரானவை அல்லவா?" என்று வினவுவார்கள். எங்களிடம் வெறுப்பு இல்லை. சொல்லப்போனால், அவர்களது பண்புகள்தானே எம்மை புரட்சி செய்யும்படி செய்தன"

(வழிவழி ஏற்றுக்கொள்ளப்பட்ட= conventional; மரபுவழி = traditional; இசைந்து = tuned; இழிவு செய்யும் உணர்வு. = humiliation; புரட்சி தோதுகளும revolutionary ideas)

மகாத்மா

தம் பண்பாட்டின் வேர்களை தேடிக்கொண்டிருந்த இந்தியருக்கு, காந்தியும் அவரது காலத்து கலைநயம் கொண்ட தாகூரும், கிழக்கும் மேற்கும் கலந்து வடித்த பண்பாட்டை நல்குவதாகவே தோன்றியது. முமபையின் காந்தி அரும்பொருள் காட்சியகத்தின் நெறியாளர் உச்ஃஆ (உஷா) மேத்தா,"மகாத்மா மேலோட்டமான ஆங்கில நாகரிகங்களான ஆடை, சமூக வழக்கங்களை தள்ளிவிட்டாலும் அவர்களின் அடிப்படையான் தன்னிறைவு, அரசியலில் தளையின்மை போன்றனவற்றை போற்றினார்" என்கிறார்,

" எனக்கு பதினாறு அல்லது பதினேழு வயதில், என் பெற்றோர்களுடன் காந்தியின் ஆசிரமத்துக்கு சென்றேன். காந்தி அன்றைய வழிபாட்டுக்கு போய் கொண்டு இருந்தார் என்பதால் நாங்களும் வழிபாட்டுக்கு சென்றோம். வழிபாடு முடிவுற்ற பின்னர் தான் எம்மை சந்தித்தார். வழிபாடுகள் வைகலும் காலையிலும் மாலையிலும் நடை பெறும். அது எங்கள் மீது அதன் விளைவை உண்டாக்கியது. அந்த ஆசிரம் வாழ்வினரின் எளிமையான கூடிவாழும் வாழ்க்கை என்னுள் ஒரு பதிவை உண்டாக்கியது. எல்லோரும் அவரவர் பணிகளை அவரவரே செய்துகொள்ளலும், கலன்களை கழுவுலும் துணிகளை துவைத்தலும் செய்தலால் ஆசிரம வாழ்வினர் தற்சார்பு கொணடவ்ராக கற்றுக்கொண்டனர். இவை என்னை மிகவும் கவர்ந்து. அது இந்திய பாரம்பரையின் வழமை மேற்கொள்ளப்படுவதாகவே அமைந்தது"

அருணா ஆசிப் அலிக்கு, காந்தியின் ஆன்மீகம் தொன்மையான இந்து மதத்தை போல அல்ல என்றாலும் கிறுத்துவ கன்னி மாட கல்வி நிலையங்கள் போன்ற ஒரு தோற்றத்தை தன்னுள்ளே எழுப்பியது என்கிறார்.

"அவர் கவர்ச்சிமயமான தன்மையர். எங்களை ஈர்த்து எங்களோடு மென்மையாகவும் அமைதியாகவும் பேசுவார். அந்த சூழல் இயற்கைதன்மை கொண்ட இந்திய துறவியர்மடம் (பர்ணசாலை) போல எளிமையானதாக இருந்தது. கிறுத்துவமடங்களில் கன்னிமார்களும் அருள்தந்தையரும் எப்படி எளிய வாழ்க்கை மேற்கொள்கிறார்கள் என்பதை நான் படித்துள்ளேன். அதே போல் ஒரு சமயகொள்கை காந்தியிடம் நான் கண்டேன். காந்தியை சட்டென புரிந்துகொள்ள மிகவும் உதவியது இதுதான்: அவர் நடத்தும் வழபாட்டு கூட்டங்களில் எல்லா மதங்களது பக்தி பாடல்களையும் பாடுவதை வலியுறுத்துவார். "Lead Kindly Light" என்ற பாடலே அவர்க்கு மிகவும் உவப்பான பாட்டு. கிறுத்துவுக்கு என்னென்ன பண்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறதோ அவையெல்லாம் அவரிடம் இருந்தது குறிப்பாக ஏழைகளிடம் பற்றி பேசுகையில் அவர் கொண்ட மென்மையான் போக்கு.கிறுத்துவை பற்றி நான் படித்த கேட்டவற்றுள் பலவும் காந்தி கற்பித்தவைகளில் இருந்தன. - அவர் பேசும் பாங்கு, அவரது வருத்தங்கள், சில நேரங்களில் அவரது சினம் பூண்ட குரல்.........."

அறத்திற்கே அன்பு சார்ப என்ப அறியார்

மற்ற விடுதலைபோராட்டங்களை ஒப்பு நோக்குகையில் இந்திய விடுதலைபோராட்டம் வன்முறையும் பகைமையும் அருகிய போராட்டமாகவே அமைந்தது. அந்த பெருமை காந்திக்கே பெரும்பாலும் சாரும் என்றாலும், அவர் ஏதோ எதிர்பாராது வரலாற்றில் வந்து விழுந்த மகாத்மா அல்ல. அவர் லண்டனில் பயின்ற ஒரு வழக்கறிஞர். இங்கிலாந்து கல்லூரிகளில் பிரித்தானிய சட்டமும் அதன் அரசியலமைப்பு வித்திகளையும் கற்றவர். அவரது அறவழி போராட்டம் கிறுத்துவமத பரப்பாளர்களது அன்புவழி கோட்பாட்டை ஒட்டி அமைந்தது போன்றாலும் இந்து மதத்தின் துன்புறுத்தாமை கோட்பாட்டையும் அடித்தளமாக கொண்டது எனலாம். மதம் சார்ந்தவற்றை களைந்துவிட்ட காந்தியின் அந்த அறபோர் செய்திறம் வாய்ந்த அரசியில் சூழ்ச்சியாகவும் 1857இல் தோல்வி தழுவிய மறப்போரில் பெற்ற பாடத்தை கருத்தில் கொண்டதாகவும் அமைந்தது

மேலை நாட்டு உடுப்பு அணிந்து வழக்காடிய விக்டோரியா வழக்கறிஞர் இடுப்பு துணி மட்டும் அணிந்த புகழ்பெற்ற துறவியாக உருப்பெயர்ச்சியுற்று காப்பிய நாயகனாக மலர்ந்தார். அது அவரது அரசியல் வெற்றி மட்டும் அல்ல ஆன்மீக மீட்சியுமாகும். அவரது அடியார் ஒக்கும் ஓளிவட்டம் அவர்காலத்து இந்துமதத்தின் வீறுகொள் மீட்சியையும் ஏற்படுத்தியது என்றால்,. அவரது மதசார்புஅற்ற பின்னணியும் கல்வியும் பல இளஞர்களும், நாட்டு எழுச்சியில் அவரொடு மிகுதியும் மாறுபட்ட தலைமுறையினரும் ஏற்கும் ஒரு தந்தை தகுதியைனாவருக்கு நல்கியது. அவர்களில் ஒருவர், காங்கிரசு கட்சியின் முன்னணி தலைவர் ஒருவரை மணந்து கொண்டவருமான, மேற்கத்திய கல்வி பெற்ற அருணா ஆசிப் அலி. இறுதியில் இடது சாரி அரசியலார்களில் ஒருவராய் திறம் பெற்றார், அவரும் மற்ற இளம் பொதுஉடைமைசாராரும் காந்தியின் ஆன்மிக கவர்ச்சியை மேலோட்டமாக எடுத்துக்கொண்டாலும் அவரை இந்திய அரசியலின் தந்தையாக ஏற்றுக்கொண்டதை சொல்லுகிறார்:

"புகைக்காமை, அருந்தாமை, புலனடக்கம், எளிய வாழ்க்கை போன்ற காந்தியின் வற்யுறுத்தல்களை எம் போன்ற மேற்குமயமான காங்கிரசுகாரர்கள் பெரும்பாலோர் மேற்கொண்டார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் காந்தியின்பால் இனம்புரியாத ஒரு கவர்ச்சி எங்களிடயே இருந்தது. நாங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் விரும்பிய எல்லாமும் ஒப்புக்கொள்ள எம்மால் இயலவில்லை. அவைகள் கடினமாக தோன்றின. ஆனால் எம்மால் இயன்றவற்றை கடைபிடித்தோம். காட்டாக, அயல்நாட்டு ஆடைகளை தவிர்ப்பது. அது எமக்கு ஒரு போராட்டமாக இருந்தால் விட்டுவிட்டோம் ஆனால் நகைகள் எப்பொதும் எம்மை கவராததால் தவிர்த்து விட்டோம். எதையும் துறப்பதற்கு உவந்து நிற்பது, அறப்போர் என்றால் திருப்பிதாக்காமல் இருப்பது, நம் மறுப்பு தன்மையால் வரும் எல்லா இன்னல்களையும் ஏற்பது என்றிவையே அவரிடம் இருந்த நாங்கள் கற்ற அடிப்படை கல்வி"

மேற்கத்திய வசதிகளில் பழகியவருக்கும் காந்தியின் ஆசிரமத்து எளியவாழ்வை வலியுறுத்தல்கள் ஒவ்வொன்றிலும் அதனதன் மையல் இருந்தது. இலண்டனில் கல்வி கற்றவரான, நாட்டு எழுச்சி கொண்ட ரேணுகா ரே சொல்கிறார்:

' அங்கு நிலைமை படுமட்டமாக இருக்கும். உணவு வாயில் வைக்கமுடியாது.' என்று எல்லோரும் எனக்கு சொன்னார்கள்: ஆனால் நான் இளஞியாக இருந்ததால் எனக்கு உணவு சுவையாகவே இருந்தது. நாள்தோறும் விடியல் 5.30 க்கு எழுந்து ஆற்றில் நீராடுவது பழகிவிட்டது. எல்லோரும் நேரம் கடைபிடிக்க வேண்டும். எங்களில் சிலர் அதற்கு மட்டம் அடித்தது உண்டு. ஆயின் இளம் வயதில் புதியன செய்வதில் எப்போதும் ஒரு துள்ளல் இருக்கும். எனவே அங்கே இருப்பது எனக்கு ஒருவகை துடுக்காகவே தான் இருந்தது.

மங்கலம் விஷ்ணு லஷ்மி

மங்கலம் விஷ்ணு லஷ்மி